 |
கட்டுரை
வியாக்கியானம் ஆதவன் தீட்சண்யா
கை பிசகி தெறித்த மசித்துளி
வெட்டாந்தரையாயிருந்த தாளின்
வெறுமை குலைத்தது
"மாந்திரீக குறிப்புகளின்
சங்கேத முற்றுப்புள்ளி "
"புள்ளிகளாய் நிரப்பவேண்டிய
பூடகத்தின் முதற்புள்ளி "
"ஆதி இதுவே
அதுவே மையத்திலிருக்கிறது
எங்கும் ரகசியமாய் நிரம்பியிருக்கிறது
எல்லாவிடமும் நகர்கிறது"
"உண்மையில் அது புள்ளியல்ல
புள்ளி போலிருக்கும் பூர்வ வடிவெ"ன்றும்
அனேக அபிப்ராயம்
புள்ளி புள்ளியாயிருந்தது
பலர் பலவாய்ச் சொல்லிக்கொள்ள.
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|