Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

சிங்கப்பூர் வாசகர் வட்டம் - கதை விவாத நிகழ்வு
பாண்டித்துரை

சிங்கப்பூரகத்தில் அமைந்துள்ள அமோக்கியோ நூலகப்பிரிவில் நடைபெற்ற எஸ். ராமகிருஸ்ணனின் நெடுங்குருதி நாவலின் விவாத நிகழ்வில் என் நினைவில் நின்றவை உங்களுக்காக!

சிறப்பு விருந்தினராக தமிழக எழுத்தாளர் எம்.ஜி.சுரேஸ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இது எனது இரண்டாவது சந்திப்பு என்பதால் என்னால் இந்த கட்டுரையை முழுமைபடுத்த முடியவில்லை. இருப்பினும் என் மனதில் பதிந்ததை விவரிக்கிறேன்.

திரு ரமேஸ் அவர்கள் எம்.ஜி.சுரேஸை அறிமுகபடுத்தி கதை விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். அலெக்ஸாண்டரும் ஒருகோப்பை தேநீரும் உள்ளிட்ட 15 புத்தகத்திற்கும் மேல் திரு சுரேஸ் எழுதியதாகவும் பின்நவினதுவத்தை அறிமுகபடுத்தியதில் குறிப்பிடதக்க எழுத்தாளர் என்றும் தமிழ் திரை உலகிலும் இவருடைய பங்களிப்பு உள்ளது என்று அறிமுககடுத்தி கதை விவாதத்தை தொடங்கி வைத்தார். (இவரது 8 படைப்புகள் சிங்கப்பூர் நூலகத்தில் உள்ளது குறிப்பிடதக்கது) கதைக்களம் நன்றாக அமைக்கப்பட்டுள்ளது என்று திரு ரமேஸ் கூறினார். சித்ரா ரமேஸ் கள்ளர் பயத்தை பற்றி ஆரம்பித்து வைக்க அதன் மேல் அதிக விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டது. (வேம்பலையை படித்ததும் திருமதி சித்ரா அவர்களுக்கு வீரம் வந்துவிட்டதாக கூறினார்) இவரது விவாதம் கலகலப்பான பக்கங்களிற்கு கடத்தி சென்றது. எழுத்தாளர் எம்.ஜி.சுரேஸ் அவர்கள் நிறைய விவாதித்தார். மார்கஸ்சின் பிளட்ரெயின் நாவலை நெடுங்குறுதியுடன் ஒப்பிட்டு அவற்றின் சில ஒற்றுமையை விவரித்து பின் நெடுங்குருதி எனும் தலைப்பிலே மார்க்கஸ் ஒரு சிறுகதை புனைந்துள்ளதையும் ஞாபகபடுத்தினார். பின் இவரது விவாதம் அசோகமித்திரன் கோடாங்கி லட்சுமி உள்ளிட்ட படைப்பாளிகளையும் தொட்டுச்சென்றது. எந்த ஒரு விவாதத்திற்கும் தயார் என்பது போல் திரு செந்தில் விவாதித்தார். அவரது கருத்தினை மற்றவர்களும் ஆமோதித்தது வரவேற்கதக்கது. (இதற்கு முந்தைய சந்திப்பில் எழுத்தாளர் சாணக்கியனின் கனவுபுத்தகம் பற்றிய விவாதத்தில் திரு செந்திலின் கருத்தினை ஆமோதித்து நான் இந்த கோணத்தில் பார்க்கவில்லையே என்று ஆதங்கப்பட்ட சிங்கப்பூரகத்தின் சிறந்த எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் ஆச்சர்யத்தையே ஏற்படுத்தினார்.)

திரு.பாண்டியனை பற்றி சொல்ல வேண்டுமானால் இந்த கட்டுரை பத்தாது. புத்தகம் படிப்பதிலும் விவாதத்திலும் இவரது பங்களிப்பு எனக்கு ஆச்சர்யத்தையே தந்தது. கதை பற்றிய கட்டுரை தயாரிப்பதிலும் பின் கதை சார்ந்த வரலாற்று தகவல்களை திரட்டி தருவதிலும் அவர் மேற்கொள்ளும் சிரமங்கள் எங்களுக்காகவே(நாங்க ரொம்ப கொடுத்துவச்சவங்க). அவரது கருத்து கிராமம் மற்றும் நகர வாழ்க்கையின் முரண்பட்ட பக்கங்கள் பின் சமுக பழக்க வழக்கதின் மாற்றம் நோக்கி இந்த நாவல் பயனிப்பதாக அமைந்தது. மேலும் எழுத்தாளர் எம்.ஜி.சுரேஸ் லத்தீன் அமெரிக்கர்களின் வாழ்வியல் முறையுடன் கள்ளர்கள் வாழ்க்கை முறையும் ஒற்றுமை இருப்பதாக கூறினார். விவாதத்தின் போது தென் மாவட்டங்களின் வறட்சி நிலை பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்று தொட்டுச்சென்றது. எல்லோரும் ஒத்துகொண்டது சமுதாய புறக்கணிப்பு. இதன் காரணமாகவே இத்தகைய வாழ்வியல் முறைகள் ஆரம்பமாவதாக கூறினர்.

சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரன் அவர்கள் கதை விவாத்தில் பங்கேற்று அவரின் கருத்துகளை தொகுத்து வழங்கினார். திரு பாண்டியனும் அவரது கருத்தினை தொகுத்து வழங்கினா.;

நான் நெடுங்குருதியை படிக்கும்போது திரைக்கதையின் தாக்கம் நாவலில் அதிகம் இருப்பதாக உணர்ந்தேன். இது பற்றி எழுத்தாளர் எம்.ஜி. சுரேஸ்சிடம் விவாதித்த போது அவரும் ஒத்துக்கொண்டு ஒரு சில கதை வரிகளை மேற்கோள் காட்டினார். எழுத்தாளர் சுரேஸ் வருவது முன்பே தெரிந்திருந்தால் அவரின் நாவலே விவாதத்திற்கு எடுத்திருக்கலாம் என்பது அனைவரின் ஆதங்கமாகவே இருந்தது (தப்பிச்சிட்டிங்களே சுரேஸ் சார்)

நண்பர் உத்திராபதி மற்றும் பாண்டியன் வாசகர்வட்டத்தின் அடுத்தகட்டமாக குறும்படங்கள் திரையிடுவது பற்றி விவாதித்தனர்;. (முயற்சிக்கு வாழ்த்துக்கள்)

கதைவிவாதத்தில் ஒப்பிடு பற்றி பேசும் போது திரைப்படங்ளின் மேல் விவாதம் திசைமாறியது. புதுப்பேட்டை மற்றும் குரு திரைப்படம் மீது இந்த விவாதம் திரும்பியது. பலர் குருவை விட புதுப்பேட்டை நன்றாக வந்துள்ளது என்றனர். எழுத்தாளர் எம்.ஜி.சுரேஸ் புதுப்பேட்டையின் கதை கருதான் குருவும் என்றார். ஆனால் திரைக்கதை ரசிகர் வட்டம் வேறு. பின் அனைவரின் விவாதமும் குரு திரைப்படத்தின் மீதே அமைந்தது.

விவாதத்தின் பின் தொலைபேசிவழி எழுத்தாளர் எம்.ஜி.சுரேஸை தொடர்புகொண்டு சிங்கப்பூரகத்தின் வாசகர் வட்டம் பற்றிய கருத்தை கேட்ட போது

எழுத்தாளர் எம்.ஜி.சுரேஸ் சொன்னது: பிரான்ஸ் கனடா போன்ற ஜரோப்பிய நாடுகளிள் தான் புலம்பெயர்ந்த தமிழர்கள் திவீர இலக்கிய வாசிப்பு உள்ளது என்னும் தவறான கருத்து தமிழகத்தில் நிலவுகிறது. நானும் இங்கு வரும் வரை அந்த எண்ணத்திலே வந்தேன். ஆனால் இங்குள்ளவர்கள் எழுத்தாளர் கோடங்கி புதுமைப்பித்தன் பற்றி பேசும் போது என் கருத்தினை மாற்ற நேர்ந்தது என்றார். மேலும் தீவிர இலக்கிய ஆர்வம் சிங்கப்பூர் மலேசிய தமிழர்களிடம் அதிகமா உள்ளது.

- பாண்டித்துரை ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com