Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
பிப்ரவரி 2008
சொல்லப்பட வேண்டிய கருத்துக்கள், அறியப்பட்ட வடிவங்களில்....

சாய் பராஞ்சிபே இந்தித் திரைப்பட உலகில் மிகவும் குறிப்பிடத்தக்க பெண் இயக்குனர். தீபா மேத்தா, மீரா நாயர் போன்ற பெண் இயக்குநர்களின் வரிசையில் பிரஸ்தாபிக்கப்பட வேண்டியவர். இவரின் சமீபத்திய "சாஜ்" என்ற திரைப்படம் பாலிவுட் உலகின் பின்னணி இசைப்பாடகர்கள் இருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. குறிப்பாக மங்கேஸ்கர் சகோதரிகளின் வாழ்க்கையை இப்படத்தில் இனம் கண்டு கொள்ளலாம். இரண்டு சகோதரிகள். ஒருவர் மீது ஒருவர் பாசம் கொண்டவர்கள். எதையாவது சாதித்து தங்கள் பெயரை நிலைநாட்டவேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள். ஒவ்வொருவரின் முன்னேற்றத்திலும், ஆசாபாசங்களிலும் அக்கறை கொண்டவர்கள். இவர்களின் உலகில் காணப்படும் போட்டி, பொறாமை, அன்பு, பாசம் இவற்றை சாய் வெளிப்படுத்தியிருக்கும் விதத்தில் பெண் சார்ந்த பிரச்னைகளின் தீவிரத்தை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. சப்னா ஆஸ்மியும், அருணா ஈரானியும் இந்த இசைச் சகோதரிகளாக நடித்திருந்தனர். ஜாகீர் உசேனின் இசை குறிப்பிடத்தக்கதாகும்.

சாயின் சமீபத்திய படம் "சக்கசக்க..." பல்வேறு விதமான சுற்றுச் சூழல் சம்பந்தமான விஷயங்களைக் கலவையாக்கி முழு நீள பிரச்சாரப் படத்தை குழந்தைகளை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டிருக்கிறது. வீதிகளில் குப்பை பொறுக்கும் பையனின் நகர சந்தடியிலிருந்து தனியே இருக்கும். இருப்பிடத்திற்கு கள்ளநோட்டுக்காரர்கள் வந்து போகிறார்கள். அப்பகுதியை நாலைந்து குழந்தைகள் இனம் கண்டு கொள்கிறபோது அவர்களுக்கு சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதை குழந்தைகளுக்கான மொழியில் விடுவிப்பது இப்படம். சுற்றுச் சூழல் மாசு, மண்புழு வளர்ப்பு, பிளாஸ்டிக் பொருள் தவி£ப்பு, குழந்தைகள் கடத்தல், நுண்ணுயிர்களுக்கான அக்கறை மூலம் பல்லுயிர் பெருக்கம் போன்ற அறிவை குழந்தகள் பெற்றுக் கொள்வது உட்பட எக்கச்சக்கமானக் கருத்துக்களை இந்தப்படம் முன்வைக்கிறது.

பாத்திரங்களுக்கிடையிலான உரையாடல்கள், குழந்தைகளின் கனவுகள், சிறு சிறு சம்பவங்கள் மூலம் இவை முன்வைக்கப் படுகின்றன. குழந்தைகளுடன் மாய உருவத்தில் வந்து உலாவிப் போகும் மலையாள நடிகர் மது நடித்திருக்கும் கதாபாத்திரம் கருத்துக்களை இடைச்சொருகலாக சொல்ல பயன்பட்டிருக்கிறது. பிரச்சாரத் தொனியுடன் இவற்றை ஒரு துப்பறியும் கதையூடே சாய் குழந்தைகளுக்காக முன்வைக்கிறார். இவை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. குழந்தைகளின் உலகில் இருந்து கண்டெடுக்கப்பட்டவைகளை அடையாளம் கண்டுகொள்வதாக இருக்கிறது. குழந்தைகளுக்கான கருத்துக்கள் வெகுசன ஊடகத்தில் சொல்லப்படும்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை குறித்து சாய் அக்கறை கொண்டிருக்கிறார். ஜெர்மனியின் 'டிடிஎச்' என்ற தன்னார்வ நிறுவன உதவியுடன் இதை சாய் தயாரித்திருக்கிறார்.

இதேபோல் நீர் பிரச்னையையட்டிய பல விடயங்களை மதுரை ரங்கநாதன் 'கோடங்கி' என்ற படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். இராசாயன தொழிற்சாலைகளால் மண் மாசுபடுவது, குழந்தைகளின் உடல்நலம், சுத்தமான தண்ணீர், காய்ச்சிய தண்ணீரை குடிக்க வேண்டிய அவசியம் மற்றும் தண்ணீர் மாசுபாடு சம்பந்தமான விஷயங்களை ரங்கநாதன் இந்த ஒருமணி நேர படத்தில் முன்வைக்கிறார். மதுரை சித்திரைத் திருவிழாவில் இப்படம் தொடங்குகிறது. பக்தர்கள் கூட்டம். மாறுவேடத்தினர் தண்ணீர் பிரசாதம் வழங்குவோர் மத்தியிலிருந்து தண்ணீர் பற்றிய அக்கறையை உரையாடல்களாக, சர்ச்சைகளாகத் தொடங்குகிறார். கருப்பண்ணசாமி வாள் ஏந்தி ஊர் முழுக்க வந்து மக்களைச் சந்திக் கிறார். மக்கள் தண்ணீர், உடல்நலம் போன்ற பிரச்னைகளிலிருந்து தங்களை காத்துக்கொள்ள கருப் பண்ணசாமியின் அறிவுரையைக் கோருகிறார்கள். கருப்பண்ணசாமி யின் சுற்றுச்சூழல் பற்றிய கருத்துக்களால் படம் விரிவடை கிறது. சுத்தமான குடிநீர் எனும் கருத்து பல்வேறு ரூபங்களில் விரிவ டைகிறது. மக்களோடு இணைந்த சிறு கதையாடல்கள் மூலம் நீர் பிரச் னை அலசப்படுகிறது இப்படத்தில்.

வாழும் வள்ளுவம் உட்பட 30 குறும்படங்களை எடுத்தவர் ரங்க நாதன். 'வெதை நெல்லு' போன்ற நீண்ட படங்கள் மூலம் கிராம பொருளாதார சீரழிவையும் அதிலி ருந்து மீட்டெடுக்கும் முயற்சியாக மகளிரின் சுய உதவிக் குழுக்களின் முயற்சியையும் அங்கீகரித்து வெளிப் படுத்தியவர். "வெதை நெல்லு" படம் கனவு திரைப்பட விருதையும் பெற்றது.

இவரின் சமீபத்திய 'கோடங்கி' திரைப்படம் நீர் பிரச்னையை பொது மக்களின் குரலாக்கி சிறு தெய்வம் கருப்பண்ணசாமியின் ஆவேச ஆட்டத்தோடு வெளிப்படுத்தியிருக் கிறது. கருப்பண்ணசாமியின் ஆவேசம், சூழலை மாசுபடுத்தக் கூடாது என்ற அக்கறை கொள்ளப்பட வேண்டியவர்களின் குரலாக இருக்கிறது. சுற்றுச் சூழலில் அக் கறை கொண்டவர்களின் ஆதங்கமாய் இருக்கிறது. நெருக்கம் மிகுந்த சிறு கதையாடலாய் ரங்கநாதன் கோடாங்கி படத்தை வடிவமைத்திருக்கிறார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com