 |
மகாபாரதத்தில் சந்தேகம்
ஆசிரியர்: மகாபாரதம் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலே, வாசுதேவன், தேவகிக்கு பிறக்கும் 8 வது குழந்தையால் தனது உயிருக்கே ஆபத்து வரும் என்று தெரிந்துக் கொண்ட கம்சன், தனது தங்கை என்றும் பாராமல், தேவகி மற்றும் கண்வன் வாசுதேவனை சிறையில் அடைத்தான். முதல் குழந்தை பிறந்த போது, அக்குழந்தையை விஷம் வைத்து கொன்றான், பின் சிறிது காலம் கழித்து இரண்டாம் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தையை கூரிய வாளின் உதவியோடு கொன்றான். மூன்றாவது குழந்தையை...
மாணவன்: சார் ஒரு சந்தேகம்..
ஆசிரியர்:என்ன சந்தேகம்?
மாணவன்: 8வது குழந்தை பிறந்தால் ஆபத்து என்று தெரிந்திருந்தும், வாசுதேவன், தேவகியை ஏன் ஒரே சிறை அறையில் கம்சன் அடைத்து வைத்தான்?
ஆசிரியர்: .....?
வாசகர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தின் சிரிப்'பூ' பகுதிக்கு நீங்களும் நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. துணுக்குகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|
|
 |
|