கட்டிடக்கலையில் பொன்னான விகிதம்.
குருமூர்த்தி
கணித இயலில் பொன்னான விகிதம் என்பது ஒரு சுவையான எண். இந்த எண்ணின் மதிப்பு 1.618 ஆகும். ஒரு செவ்வக உருவத்தின் நீளத்தை அகலத்தால் வகுத்து வரும் ஈவு 1.618 ஆக இருக்குமானால் அந்த செவ்வக வடிவம் மிகவும் அழகான வடிவம் என்று நம்முடைய கண்கள் ஏற்றுக்கொள்கின்றன.
1.618 என்னும் பொன்னான விகிதம் பண்டைக்காலம் முதலே பயன்பாட்டில் இருந்து வருகிறது. பார்ப்பதற்கு அழகான தோற்றங்களை உடைய கட்டிடங்கள் இந்த விகிதத்தில்தான் உருவாக்கப்பட்டன.
 
பண்டைக்காலத்தில் எகிப்தியர்கள், மெசபட்டோனியர்கள் மற்றும் கிரேக்கர்கள் இந்த பொன்னான விகிதத்தின் பயன்பாடு பற்றி அறிந்திருந்தார்கள்.
 
அவர்கள் கட்டிய கட்டிடங்களில் இந்த பொன்னான விகிதத்தை பயன்படுத்தி கட்டியிருப்பதை இந்தப் படங்களின் மூலம் அறியலாம்.2500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட பார்த்தினோன் கட்டிடம் பொன்னான விகிதத்தின் அடிப்படையில்தான் கட்டப்பட்டுள்ளது.
கி.மு.2500 ல் கட்டப்பட்ட எகிப்திய பிரமிடுகளின் அளவுகள் நமக்கு பிரமிப்பை உண்டாக்குகின்றன. பிரமிடுகளின் அடிப்பாகம் ஒரு சதுரவடிவமானது. ஒவ்வொரு பக்கமும் சுமார் 230 மீட்டர் நீளமுடையது. பிரமிடின் உயரம் 146 மீட்டர். இப்போது பொன்னான விகிதம் கிடைக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்வோம்.
  

புகழ்பெற்ற ஓவியர் லியனார்டோ டாவின்சியின் ஓவியத்தில் மனித உருவத்தின் அளவுகள் பொன்னான விகிதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
மைக்கேல் ஆஞ்சலோவின் இந்த ஓவியத்தில் பொன்னான விகிதத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐங்கோணம் பயன்படுத்தப்பட்டுள்ளதைப்பாருங்கள்.
 
பொன்னான விகிதத்தைக்குறிப்பிட நாம் என்னும் கிரேக்க எழுத்தை பயன்படுத்துகிறோம். Phidias என்னும் கிரேக்க சிற்பியின் நினைவாக இந்தக்குறியீட்டிற்கு அவருடைய பெயரே வழங்கப்பட்டுள்ளது.
தகவல்:மு.குருமூர்த்தி
வாசகர்களின் கவனத்திற்கு...
நீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. |
|