
விண்வெளியில் புதிய கிரகங்கள்
பூமியிலிருந்து 26 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் சூரியமண்டலத்துக்கு வெளியே மேலும் 16 கிரகங்கள் இருப்பதை அண்மையில் நாஸா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹிப்பிள் தொலைநோக்கியின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்ட இவை பால்வீதியின் மையத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவை தங்களது சூரியனை 10 மணிநேரத்துக்கு ஒருமுறை சுற்றி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
வானவெளி முழுவதும் இதுபோல் கோடிக்கணக்கான கிரகங்கள் இருக்கலாம் என்ற நம்பிக்கையை இந்த கண்டுபிடிப்பு ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் பல, வியாழன் போன்று வாயுக்களால் நிரம்பியுள்ளன. அவை தங்கள் சூரியனை மிக நெருக்கமான சுற்றுப்பாதையில் சுற்றிவருகின்றன. இக்கிரகங்களின் வெப்பநிலை சுமார் மூவாயிரம் டிகிரி பாரன்ஹீட்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|