Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூலை 2009

இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை - ஓர் அலசல்
மு.சங்கரநயினார்

ஒருதின போட்டிகளின் உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியா முதல் சுற்றுடன் நடையைக் கட்ட, கத்துக்குட்டி அயர் லாந்து சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்து அசத்திய இரண்டாவது இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், கிரிக்கெட்டின் தாய்நாடான இங்கிலாந்தில் கடந்த ஜூன் 5 முதல் 21 வரை நடைபெற்றது.

கிரிக்கெட்டில் புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ள வந்த அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து உள்பட மொத்தம் 12 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்றன. கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புள்ள அணிகளாக, கடந்த முறை கோப் பையை வென்ற இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் கணிக்கப்பட்டாலும், கிரிக்கெட்டில் கணிப்பு களுக்கு பிரசித்தியில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. இந்தியா, பங்களாதேசம், அயர்லாந்து ஆகிய அணிகள் ‘ஹ’ குழுவிலும், பாகிஸ்தான், இங்கிலாந்து, நெதர்லாந்து ‘க்ஷ’ குழுவிலும், ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ‘ஊ’ குழுவிலும், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து,. ஸ்காட் லாந்து ஆகிய அணிகள் ‘னு’ குழுவிலும் இடம்பெற்றிருந்தன.

முதல் சுற்றில் ஒருதினப் போட்டிகளின் உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளிடமும் தோல்வியைத் தழுவி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறாமல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் அந்நாட்டுப் பத்திரிகைகளிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டது. ஷேன் வார்னே, மெக்ராத், கில்கிறிஸ்ட் ஆகியோரின் ஓய்வுடன் ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சி துவங்கி விட்டது எனலாம். மேலும் மாத்யூ ஹைடனின் ஓய்வு அந்த அணியை மேலும் பாதித்துள்ளது என்பது கண்கூடு.

எதிர்பார்த்தது போலவே நெதர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் முதல் சுற்றுடன் தாயகம் திரும்ப, எதிர் பார்ப்பைப் பொய்யாக்கி அயர்லாந்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்து அசத்தியது. அந்த அணி இந்தியாவிடம் தோற்ற போதிலும் பங்களாதேசத்தை வென்றது. சூப்பர் 8 போட்டிகளில் வலுவான அணிகளான இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகியவற்றுடன் தோல்வியைத் தழுவி போட்டியி லிருந்து வெளியேறியது அயர்லாந்து.

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மேற்கிந்திய தீவுகள், முதல் சுற்றில் மட்டுமல்லாமல் அரையிறுதிப் போட்டியிலும் இலங்கையிடம் தோல்வியைத் தழுவி தனது கோப்பைக் கனவைக் கலைத்துக் கொண்டது. தோல்வி யையே அறியாத இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறி யது. சூப்பர் 8 போட்டிகளில் இந்த அணி பாகிஸ்தான், நியூசி லாந்து, அயர்லாந்து ஆகிய அணிகளை வென்றிருந்தது.

இருபது ஓவர் போட்டிகளின் முதல் உலகக் கோப்பையை வென்று சாதித்த இந்தியா இந்த முறையும் கோப்பையை வெல்லும் என்று கிரிக்கெட் உலகம் எதிர்பார்த்தது. ஆனால் எதிர்பார்ப்பது அனைத்துமே நடந்து விடுவதில்லை என்பதை இந்தியா நிரூபித்தது. சூப்பர் 8 போட்டிகளில் ஒரு வெற்றி யைக்கூட பெறாத இந்தியா படுமோசமாகத் தோற்று அரை யிறுதிக்குக்கூட முன்னேறாமல் வெளியேறியது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இந்தியாவிற்கு அதிக பலனைக்கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. சூப்பர் 8 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் இந்தியா தோற்றுப் போனது. வலிமை குறைந்த இங்கிலாந்திடமும் இந்தியா தோல்வியைத் தழுவியது பரிதாபமாக இருந்தது. இருபது ஓவர் போட்டிகளில் சாதித்து வரும்நியூசிலாந்து அணி சூப்பர் 8 போட்டிகளுக்கு மேல் முன்னேற முடியவில்லை. சிறந்த வீரர்களைக் கொண்ட இந்த அணியின் பந்துவீச்சு சோபிக் காமல் போனது தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.

அனைத்து விதத்திலும் சிறந்த அணியாகக் கருதப்பட்ட தென்ஆப்பிரிக்கா அரையிறுதிப் போட்டி வரை தடங்கலின்றி முன்னேறியது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டும் மிகச் சிறப்பாக இருந்தது. இந்த முறை கோப்பை தென்ஆப்பிரிக்காவுக்குத்தான் என்ற முடிவுக்கு பெரும்பா லான ரசிகர்கள் வந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் எந்த ஒரு உலகக் கோப்பைப் போட்டியிலும் அரையிறுதிக்கு மேல் முன்னேறியதில்லை என்பதை உடைத்தெறிய மீண்டும் ஒரு உலகக் கோப்பைப் போட்டிவரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை தென்ஆப்பிரிக்காவிற்கு ஏற்பட்டது. ஆம், இந்த முறை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் பரிதாப மாகத் தோற்று லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.

போட்டிகளின் நடுவே சில சறுக்கல்கள் இருந்தபோதிலும் அவற்றிலிருந்து மீண்டு, இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது பாகிஸ்தான். கடந்த முறை இந்தியாவிடம் நூலிழையில் கோப்பையைத் தவறவிட்டி ருந்தது பாகிஸ்தான். இத்தொடரில் தோல்வியையே அறியாமல் இறுதிப் போட்டிகு முன்னேறியது இலங்கை அணி. இலங்கை அணியின் பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டும் மிகப் பிரமாதமாக இருந்தது. எந்தவொரு குறைந்தபட்ச எண்ணிக்கைக்குள்ளும் எதிரணியை கட்டுப்படுத்தும் இலங்கை அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. பேட்டிங்கிலும் இந்த அணி அசத்தியது. 40 வயதைக் கடந்துள்ள ஜெயசூரியா தற்போதும் இளமைத் துடிப்புடன் ஆடியதைக் காணமுடிந்தது. பந்துவீச்சில் லசித் மலிங்கா, அஜந்தா மெண்டிஸ், முத்தையா முரளீதரன் ஆகி யோர் எதிரணியினரின் ரன்வேட்டையைக் கட்டுப்படுத்தினர்.

இத்தகைய திறமைவாய்ந்த இலங்கை அணி இறுதிப் போட்டியிலும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணியின் கோப்பைக் கனவைக் கலைக்கும் புயல் சயீத் அப்ரிடி வடிவில் வந்தது. அதற்கு முன்பே அப்துல் ரசாக் என்ற புயல் இலங்கையின் பாதி ஆட்டத்தைக் குலைத்து விட்டிருந்தது. இறுதிப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி பிரம்மாண்டமான எண்ணிக் கையை நோக்கி களத்தில் இறங்கியது. ஆனால் ஆமீர் வீசிய முதல் ஓவரிலேயே இலங்கைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இத்தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக விளையாடி அதிக ரன் களைக் குவித்ததோடு மட்டுமல்லாமல், இலங்கை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துவந்ததில் பெரும்பங்கு வகித்த தில்சான் இறுதிப் போட்டியில் தான் எதிர்கொண்ட 5வது பந்தி லேயே ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற வெற்றிக் காற்று பாகிஸ்தான் பக்கம் மெல்ல வீசத்துவங்கியது. ஜெயசூரியா, முபாரக், ஜெயவர்த்தனே ஆகியோரை அப்துல் ரசாக்முறையே 17, 0, 1 ரன்களுக்கு வெளியேற்ற இலங்கை நிலை குலைந்தது. அணித்தலைவர் சங்ககாரா நிலைத்து ஆடியதும் கடைசி நேரத்தில் பந்துவீச்சாளர் மாத்யூஸ் 24 பந்துகளில் 35 ரன்கள் விளாசியதும் இலங்கைக்கு ஆறுதலாக அமைந்தது.

139 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், இரண்டாவது முறையும் கோப்பையை நழுவவிடுதல் கூடாது என்பதில் கவனமாக இருந்தது. நிதானமாகவும் அதே நேரத்தில் அதிரடியாகவும் ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கம்ரான் அக்மலும், சாக்ஸயிப் ஹசனும் வெற்றிக்கான பாதையை அமைத்துக் கொடுத்தார்கள். இவர்களுக்குப்பின் வந்த அப்ரிடியும், சோயப் மாலிக்கும் பாகிஸ்தானின் வெற்றியை உறுதி செய்து, 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே லார்ட்ஸ் மைதானத்தில் கைவிட்டுப் போன கோப்பைக்கு பரிகாரம் தேடிக்கொண்டார்கள். பயங்கர வாதத்தின் பெயரால் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அதற்கு பழி தீர்க்கும் விதமாக கோப்பையை வென்று பதிலுரைத்தது.

இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் சாதித்தவர்கள் 7 போட்டிகளில் விளையாடிய இலங்கையின் திலகரத்னே தில்சான் 317 ரன்களைக் குவித்து முதலிடம் பிடித்தார். இவரது அதிகபட்சம் அவுட் ஆகாமல் 96 ரன்கள். 3 அரை சதங்களை அடித்துள்ளார். பந்துவீச்சில் பாகிஸ்தான் வீரர் உமர் குல் 7 போட்டிகளில் விளையாடி 158 ரன்களை வழங்கி 13 விக்கெட்டுகளை வீழ்த் தினார். 6 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டு களை வீழ்த்தியது இத்தொடரில் இவரது சிறந்த பந்து வீச்சாக அமைந்தது. இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளின் சாதனையாகவும் இது அமைந்தது.

அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் இலங்கை அணி யின் குமார சங்ககரா. இவர் 9 கேட்சுகள் பிடித்துள்ளார். அதிக கேட்சுகள் பிடித்தவர் மேற்கிந்திய தீவுகளின் ஏ.டி. பிளட்சர். இவர் பிடித்த மொத்த கேட்சுகள் 6. அதிக ரன்களைக் குவித்த கூட்டணி மேற்கிந்திய தீவுகளின் கெய்ல் மற்றும் பிளட்சர். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் விக்கெட்டிற்கு இவர்கள் சேர்த்த ரன்களின் எண்ணிக்கை 133.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com