Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
ஜூலை 2005
அறிமுகம்


இசைப் போர்
விலை ரூ.60


"நான் விவசாயத் தொழிலாளியின் மகன். என் சமூக மனிதர்களின் பாடுகளை இங்கே பாடலாக்கியிருக்கிறேன். களத்தில் என் உடம்பை அசைத்த, உணர்வுகளை உலுக்கிய, கண்களைக் குளமாக்கிய கொடுமையான காட்சிகள் எனக்குள் கோபமாய் இறங்கி வெளிப்பட்ட கலவையே எனது பாடல்கள். போர்ச் சிந்தனையுள்ள ஒரு படைப்பாளி, களத்தில் எதிர்கொள்ளும் பாடுகளைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறான் என்றும் வாழ்வின் வசந்தமான அன்பு, காதல், நேசம், அமைதி என்கிற மறுபகுதி குறித்து அக்கறை கொள்வதில்லை போன்ற குற்றச்சாட்டுகள் தவறானது. போர்ச்சிந்தனையுள்ளவன் எந்திரமல்ல. மக்களிடமிருந்து பிரிக்க முடியாத சக்தியாக இருப்பவன். அவன் வாழ்வின் பன்முகத்தன்மையிலிருந்து விலகிச் செல்வதற்கு ஒரு போதும் வாய்ப்பில்லை.''

ஆசிரியர் : தலித் சுப்பையா
வெளியீடு : தலித் தார மய்யம், 32, பாரதிதாசன் சாலை, அரசரடி, மதுரை - 625 016
பக்கங்கள் : 168




வெளிச்சங்களை புதைத்த குழிகள்
விலை ரூ.35

"இருட்டடிப்புச் செய்வதில் பார்ப்பன ஆட்சியாளர், சூத்திர ஆட்சியாளர் என்று வேறுபாடெல்லாம் கிடையாது. உதாரணத்துக்கு பாஞ்சாலங்குறிச்சியில் 1974 இல் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட கட்டபொம்மன் நினைவுக் கோட்டையில் பொட்டிப் பகடை, முத்தன் பகடை முதலானவர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைச் சொல்லலாம். வெள்ளையத்தேவன், தானாபதிபிள்ளை, ஊமைத்துரை, சுந்தரலிங்கம், சக்கம்மாள் இவர்கள் பெயர்களில் மட்டும் தோரணவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போன்று கோட்டையில் அமைக்கப்பட்டிருக்கிற சிலைகளிலும் பொட்டிப்பகடை, முத்தன் பகடை இவர்களுக்கு இடமில்லை. ஏனென்று கேட்கவும் நாதியில்லை.''

ஆசிரியர் : ம. மதிவண்ணன்
வெளியீடு : கருப்புப் பிரதிகள், 45ஏ, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, சென்னை - 5
பக்கங்கள் : 72







உலகமயமாக்கலும்
பணி அமர்வுத் தரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றமும்
விலை ரூ.10

"மெல்ல, மெல்ல நிரந்தரப் பணி என்பது காலாவதியாகி அந்த இடத்தில் ஒப்பந்த ஊழியர் இட்டு நிரப்பப்படுகின்றனர். உலகமயமாக்கலை உடனடியாகத் தடுத்து நிறுத்த முடியாது என்றாலும், இவ்விஷயங்களை நான் எதிர்க்கிறேன் என்று இதை நினைத்து வருத்தப்படுபவர்கள், பகிரங்க அறிவிப்பை வெளியிடுவதற்கு - களப்பணியாற்றுபவர்கள் முயல வேண்டும்.''

ஆசிரியர் : விஜயராகவன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம் , 2, குயவர் வீதி, கிழக்கு ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை - 15
பக்கங்கள் : 56


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.











பீக்கதைகள்
விலை ரூ.60

"வாசகனுக்கும் ஆசிரியருக்குமான இடைவெளி துடைத்தழிக்கப்பட்டு, ஆசிரியர் வாசகன் சமூகம் அனைத்தையும் ஒரே புள்ளியில் குவியச் செய்துவிடும் மிகுகலை நுட்பம் கைவந்த காலம் இது. இக்காலகட்டத்தை வெளிப்படுத்தும் பல கதைகள் இளம் எழுத்தாளர்களால் படைக்கப்படுகின்றன. அத்தகைய படைப்பாளிகள் வரிசையில் பெருமாள் முருகன் இயல்பாக இடம் பெறுகிறார் என்பதை, இத்தொகுப்பில் உள்ள பல கதைகள் வெளிப்படுத்துகின்றன.''

ஆசிரியர் : பெருமாள் முருகன்
வெளியீடு : அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை,
புத்தாநத்தம் - 621 310
பக்கங்கள் : 136


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.









ஆதித் தமிழன் மாத இதழ்
விலை ரூ.10

"50 லட்சம் மக்களுக்கான சமூக நீதி, தமிழ் நாட்டில் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. ஆட்சியிலும், அதிகாரத்திலும், மக்கள் மத்தியில் நடைமுறை வாழ்க்கையிலும் நாம் பலவாறாக புறந்தள்ளப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு, வன்கொடுமைகளுக்கு ஆதிக்க சாதிகளால் மட்டுமல்லாமல், சகோதர சாதிகளிடமே ஆளாக்கப்பட்டு, மருத்துவமனையில் உள்ள "கூர்நோக்கு அறையில்' வைக்கப்பட வேண்டியவர்களாக உள்ளோம். தாக்குகிறவர்களை முதலில் தடுத்து நிறுத்தும் கேடயமாக, இளைஞர்களின் கைகளில் போர்வாளாக இன்று "ஆதித் தமிழன்' வந்துள்ளது.''

ஆசிரியர் : எழில். இளங்கோவன்
தொடர்பு முகவரி : 20, அண்ணா தெரு, காமராசர் புரம், சென்னை - 73
பக்கங்கள் : 28


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.








தானாய் எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா
விலை ரூ.50

"பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பாட்டு சகாப்தம். எந்தப் பாடலானாலும் நஞ்சை புஞ்சை நிலத்திலெல்லாம் நெஞ்சொடியப் பாடுபட்டுக் கையும் காலுந்தான் மிச்சமெனக் கிடந்த கூட்டத்தின் துயரைப் பாடியவர், கெஞ்சிக் கிடப்பதில் பஞ்சம் தெளியாது என்று அவர்களுக்கு வழிகாட்டிய வல்லவர். பொறுமை ஒருநாள் புலியாகும், பொய்யும் புரட்டும் பலியாகுமென்று புரட்சிக்கனலை மூட்டியவர்.''

ஆசிரியர் : . சுதந்திரமுத்து
வெளியீடு : முரண்களரி, 50, அன்பில் தர்மலிங்கம் தெரு, நேருநகர், வேளச்சேரி,
சென்னை - 42
பக்கங்கள் : 122


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com