Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
ஜூலை 2006

நூல் அரங்கம்

ஜோதிராவ் புலேயின் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்
விலை ரூ.150

"இந்தியாவின் மாபெரும் சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் புலே. தீண்டத் தகாதவர்களுக்காகவும் பெண்களுக்காகவும் பள்ளிகளைத் தொடங்கிய 13.12.1960 அன்று "விடுதலை'யில் முதல் இந்தியர் ஜோதிராவ் புலேதான். இவர்கள் மத்தியில் நிலவியிருந்த அறியாமை, மூடநம்பிக்கையை அகற்றவும் அடிமை விலங்கை உடைத்தெறியவும் பாடுபட்டவர். இந்திய சமூக அமைப்பில் உள்ள நான்கு வர்ணங்களின் கட்டுமானத்தைக் கட்டிக் காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட புராணங்கள், சடங்குமுறைகள், தீண்டாமை போன்ற சதித்திட்டங்களைப் புரிந்து கொள்வதற்கு இந்நூல் உதவும். ''

தொகுப்பாசிரியர் : ஜி.பி. தேஷ்பாண்டே
பக்கங்கள் : 338
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 18
பேசி : 2433 2424


தொடரும் காலனியக் குற்றம்...
தமிழ் மலைக்குறவர்களின் வாழ்வியல்

விலை ரூ.10

"தொடரும் காலனியக் குற்றம்...' என்ற தலைப்பிலான இக்குறு நூல் பல்வேறு காரணங்களால் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவதாக, வரலாற்றில் தவறுதலாக குற்றவாளியாக மாற்றப்பட்ட ஒரு சமூகத்தின் உணர்வுகளை, அதன் இயல்பான தன்மைகளுடன் இந்நூல் பதிவு செய்கிறது. அநியாயமாக சுமத்தப்பட்ட "பழி' நூற்றாண்டு இடைவெளியில், அவர்களது இன அடையாளமாகவே மாற்றப்படும் அரசியலை ஆங்காங்கே தொட்டுச் செல்கிறது.''

ஆசிரியர் : மணி. கோ. பன்னீர் செல்வம்
பக்கங்கள் : 74
வெளியீடு : அம்பேத்கர் ஆய்வு மய்யம்,
தூய சவேயார் கல்லூரி,
பாளையங்கோட்டை -- 627 002

இந்தியாவும் புலிகளின் தீர்வுத் திட்டம்
விலை ரூ.20

"நாடாளுமன்றத்தில் சிங்களருக்கு அளவுக்கு மீறிய பெரும்பான்மை உண்டு. சிங்களவரின் தயவிலேயே தமிழர்கள் வாழவேண்டிய நிலைமை அங்கு உள்ளது. எந்தக் காலத்திலும் ஒரு தமிழன், அந்த நாட்டின் குடியரசுத் தலைவராகவோ அல்லது பிரதமராகவோ வரவே முடியாது. ஒற்றையாட்சி அரசியல் சட்டத்தின் கீழ் தமிழர்கள் எத்தகைய உரிமையும் பெற முடியாது. இந்த உண்மையை உணராமல், இலங்கையின் அரசியல் சட்டத்திற்குட்பட்டத் தீர்வைத்தான் ஆதரிக்க முடியும் என இந்தியத் தலைவர்கள் சிலர் பேசுவதில் எத்தகைய பொருளும் கிடையாது.

ஆசிரியர் : பழ. நெடுமாறன்
பக்கங்கள் : 40
வெளியீடு : தமிழ்க்குலம் பதிப்பாலயம்,
33, நரசிம்மபுரம்,
மயிலை,
சென்னை - 4
பேசி : 2464 0575


கீழிருந்து எழுகின்ற வரலாறு
விலை ரூ.50

"உழைக்கும் மக்களின் கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகள் யாவுமே பார்ப்பனிய எதிர்ப்புச் சிந்தனைகளை மய்யமாகக் கொண்டவை தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பார்ப்பனியம், இச்சமூகத்தில் தன் வேர்களைப் பரப்பியிருந்தாலும், அவ்வேர்களின் முனைகள் ஆபத்தானவை என்பதை அடையாளம் காட்டிய போக்குகள் பிற்காலத்தில் தான் வெளிப்படுகின்றன. புலே, அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் பார்ப்பனியத்தைத் தோலுரித்துக் காட்டியவர்களில் தன்மையானவர்கள்.''

ஆசிரியர் : மகாராசன்
பக்கங்கள் : 112
வெளியீடு : பரிசல், எண். 1,
இந்தியன் வங்கி காலனி,
வள்ளலார் தெரு, பத்மநாபாநகர்,
சூளைமேடு, சென்னை - 600 094
பேசி : 93828 53646


கொத்தடிமை ஒழிப்பில் சமூக அமைப்புகளின் பங்கு
விலை ரூ.50

“பிறப்பால் உயர்வு தாழ்வு காணும் சாதிய அமைப்பு, நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் தோன்றிய ஆண்டான் அடிமை முறை, மக்களை கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் தீட்டப்படும் வளர்ச்சித் திட்டங்கள், பெரிய பெரிய அணைகள், பெரிய திட்டங்களை செயல்படுத்துகின்றோம் என்ற பெயரால் மக்களை அவர்களின் வாழ்வாதார நிலங்களிலிருந்து விரட்டியடிக்கும் நிலை. இவையே கொத்தடிமை முறை என்ற தேசிய அவமானத்தை நிரந்தரப்படுத்துகிறது.''

ஆசிரியர் : அ. மகபூப் பாட்சா
பக்கங்கள் : 80
வெளியீடு : சோக்கோ அறக்கட்டளை, 143, ஏரிக்கரை சாலை, கே.கே. நகர்,
மதுரை - 625 020
பேசி : 04522583962


சமூக விழிப்புணர்வில் தமிழ் இதழ்கள்

சி.பா. ஆதித்தனார் இதழியல் ஆய்வுக் கோவை
விலை : ரூ. 180

"தலித் முரசு' தான் வெளியிடுவதற்கான செய்திகளை மிகவும் விழிப்புடன் தெரிவு செய்கிறது. வியாபாரத்திற்காகக் கொள்கைப் பிறழ்வு இதனிடம் இல்லை. சொல்லும் செய்திகளை யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ, அவர்களுக்கு ஆணித்தரமாக உணர்த்துகின்றது. தலித் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் பிரச்சினைகளை மய்யமாகக் கொண்ட இதழானாலும், உலகளாவிய அனைத்துச் செய்திகளையும் வெளியிடுகிறது. இச்செய்திகள் யாவும் படிப்போர்க்குத் தெளிவை ஏற்படுத்தித் தன்னம்பிக்கையைக் கொடுப்பனவாக உள்ளன.''

பக்கங்கள் : 376
வெளியீடு : தமிழ்த்திணை ஆய்வு இணைய இதழ்,
92, வெள்ளாந் தெரு,
மயிலாடுதுறை - 609 001


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com