Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
டிசம்பர் 2008


‘அகிம்சை'யின் பயங்கரம்!

“இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 18 லட்சம் மக்கள், காவல் துறையினரின் துன்புறுத்தல்களுக்கு ஆட்படுகின்றனர். இதில் பாதிப்பிற்குள்ளாகும் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் மத சிறுபான்மையினராகவோ, தலித்துகளாகவோ இருக்கின்றனர்.'' - இந்தியாவில் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான தேசிய திட்டத்தின் அறிக்கையிலிருந்து.

தலித்முரசு


ஆசிரியர்
புனித பாண்டியன்

ஆசிரியர் குழு
இளங்கோவன்
அழகிய பெரியவன்
யாக்கன்
காவ்யா
விழி.பா. இதயவேந்தன்

ஆண்டுக் கட்டணம்: ரூ.100
நூலகக் கட்டணம்: ரூ.200
வாழ்நாள் கட்டணம்: ரூ.1000

தொடர்பு முகவரி
203, ஜெயம் பிரிவு - சித்ரா அடுக்ககம்
9, சூளைமேடு நெடுஞ்சாலை
சென்னை-600 094
தொலைப்பேசி: 044-2374 5473
Email: [email protected]

தலித்முரசு - முந்தைய இதழ்கள்

மும்பையில் சில தீவிரவாதிகளால் ஒன்றுமறியாத மக்கள் கொல்லப்பட்டபோது, பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்தனர். உலக நாடுகளும் கண்டித்தன. இன்று இஸ்ரேல் அரசு, பாலஸ்தீனத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகளைக் கொன்று குவிக்கும்போது, இதே உலகம் அதைக் கண்டும் காணாமல் இருக்கிறது. இஸ்ரேல் அரசின் வான்வழித் தாக்குதலைக் கண்டித்து உடனடியாக ஆர்ப்பாட்டம் நடத்திய இடதுசாரிகள் கூட, இலங்கை அரசு தன் சொந்த நாட்டு மக்கள் மீதே குறிப்பாக கடந்த ஆறு மாதங்களாக நடத்தும் வான் வழித் தாக்குதலை கண்டிக்க முன்வரவில்லை. ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலைகளைக் கண்டிப்பவர்கள், தாய்த்தமிழகத்தில் தமது சொந்த சகோதரர்கள் மீது நடைபெறும் சாதிப்படுகொலைகளைக் கண்டிப்பதில்லை. ஆம், பயங்கரவாதத்திற்கு எதிரான கண்டனங்களிலும் பாரபட்சங்கள் நிலவுகின்றன.

உரிமை கோரும் எந்தவொரு சமூகத்தையும், தீவிரவாதிகளாக சித்தரித்து, அவர்கள் ‘கொல்லப்பட வேண்டியவர்கள், சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள்' என்ற மனநிலையை ஆளும் வகுப்பினரும், அரசும் ஊடகங்களின் துணையுடன் கட்டமைக்கின்றன. இதை இடையறாது செய்து, அம்மக்களுக்கு எதிராகவே சட்டங்களை உருவாக்கி, அவர்களை துன்புறுத்துவதும், இறுதியில் ‘என்கவுன்டர்' என்ற பெயரில் கொல்லுவதும் எளிதாகி விடுகிறது. இதற்கு பொது மக்களும் உடன்படுகின்றனர்.

மும்பை பயங்கரவாதத்தை காரணம் காட்டி, தற்பொழுது ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்' (யுஎல்ஏபி) என்றொரு ‘புதிய பொடா'வை மய்ய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்திற்கும் கட்டுப்படாத இந்நிரந்தரச் சட்டம், எந்தவொரு விவாதமுமின்றி ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்புதிய சட்டத்தில் அதிகபட்ச காவல் நாட்கள் 15லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலேயே ஒருவரை ஆறு மாதங்கள் வரை சிறையில் வைத்திருக்க முடியும். பயங்கரவாதத்திற்கு உதவி செய்ததாக ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டாலே, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கவும் இச்சட்டம் அதிகாரமளிக்கிறது. இத்தகைய கூறுகள், ஒரு நெருக்கடி நிலைமைக்கு இணையான சூழலை உருவாக்கி இருக்கின்றன.

சாதிய, மதவாதமயமாகியுள்ள காவல் துறையினருக்கு அளிக்கப்படும் கூடுதல் அதிகாரங்களே, மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கின்றன. அது மட்டுமல்ல; சாதிய, மதவாத சமூகத்தின் பிரதிநிதிகள் தான் ஆட்சியிலும், நிர்வாகத்திலும், காவல் துறையிலும் மலிந்து கிடக்கின்றனர். சமூகத்தில் மனித உரிமைப் பண்பாட்டை வளர்த்தெடுக்காததன் விளைவாகவே, இச்சமூகப் பிரதிநிதிகள் அதிகாரத்திற்கு வரும்போது அத்துமீறுகின்றனர். அதிகாரத்தின் அத்துமீறல்களுக்கு சமூகமே களம் உருவாக்கித் தருகிறது. அது, தங்களுக்கு எதிராக மாறும்போது மட்டுமே பொது மக்கள் எதிர்வினையாற்றுகின்றனர்.

பொதுமக்களிடம் ஒரு சாதாரண ‘பிக்பாக்கெட்' திருடன் சிக்கினால், மக்கள் போலிசை மிஞ்சும் கொடுங்கோலர்களாகவே மாறிவிடும் நிகழ்வுகள், நாள்தோறும் நம் கண்முன் நிகழ்கின்றன. அதே நேரத்தில், மாபெரும் ஊழல்வாதிகளை இம்மக்கள் வேடிக்கை (காவல் துறை போல) பார்ப்பதோடு, அவர்களை "மக்கள் தலைவர்'களாக பாலாபிஷேகம் செய்து கொண்டாடவும் தயங்குவதில்லை.

எனவே, பயங்கரவாதத்தை ஒருபோதும் தேசியப் பிரச்சனையாக்கக்கூடாது. அதற்கு மூல காரணமாக இருக்கும் ஜாதி - தீண்டாமை, வறுமை, சமத்துவமின்மை, பாகுபாடுகள், உரிமை மீறல்கள் ஆகியவைதான் தேசியப்பிரச்சனையாகக் கருதப்பட வேண்டும். அய்க்கிய நாடுகள் அவையின் துன்புறுத்தல்களுக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுக்கும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. "அகிம்சை' இந்தியாவிற்குள் ஒளிந்திருக்கும் இத்தகு "பயங்கரங்கள்' முடிவுக்கு வரும் போதுதான் - பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். அதேபோல ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இருப்பவர்கள், இனவாதத்திற்கு ஆதரவாக இருப்பதும்; இனவாதத்தை எதிர்ப்பவர்கள், சாதியத்திற்கு ஆதரவாக இருப்பதுமான முரண்பாடுகள் முடிவுக்கு வந்தால்தான் பயங்கரவாதத்தைத் தடுக்க முடியும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com