Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
ஏப்ரல் 2007

‘தலித் முரசு' நிறுவனர் வழிகாட்டுகிறார்!

‘தலித் முரசு' இதழை 13.2.1997 அன்று நாம் இணைந்து தொடங்கிய தருணத்தில், 2007 வரை இவ்விதழை நடத்த முடியுமா என்ற கேள்வி எனக்கு இருந்தது. இடையில், நான் விலகிவிட்டபோதும், பெரும் சிரமங்களுக்கிடையே இதழைத் தொய்வின்றி நடத்தி வருகிற - ஆசிரியர் குழுவையும், டாக்டர் அம்பேத்கர் மய்ய அறக்கட்டளை உறுப்பினர்களையும் நான் போற்றாமல் இருக்க முடியவில்லை. எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
பிப்ரவரி 2007 தலையங்கம் கண்டு மிகவும் வேதனையடைந்தேன்.

இருப்பினும் ஒரு பத்திரிகை என்பது, பொதுமக்களின் வாங்கும் சக்தியால்தான் நிலைத்து நிற்க முடியும். தலித் சமுதõயத்தில் அதிகம் படித்தவர்கள், பெரிய அரசுப் பணிகளில் உள்ளவர்கள், தனியார் துறை அதிகாரிகள் மற்றும் தலித் தலைவர்கள், ஆர்வலர்கள், வசதி படைத்தோர் அனைவரும் குறைந்தபட்சம் ஆயுள்/ஆண்டு சந்தா செலுத்தினால் மட்டுமே இதழைத் தொடர்ந்து நடத்த முடியும். ஆனால், இவற்றிற்காக நான் எடுத்த முயற்சிகள் எல்லாவற்றிலும் தோல்வி கண்டேன் என்பதை எனது நண்பர்கள் அறிவார்கள்.

என்னைப் பொறுத்தவரை, நான் ‘தலித் முரசு' இதழுக்கு ஆயுள் சந்தா ரூ. 1,000 செலுத்தி பத்தாண்டுகளாகிறது. எனவே, பத்தாண்டுகள் முடிந்த ஆயுள் சந்தாதாரர்கள் அனைவரும் - மீண்டும் ரூபாய் ஆயிரம் அனுப்பி புதுப்பித்தால் நலம் எனக் கருதுவதால், இதனுடன் ரூ. 1,000க்கான காசோலையை இணைத்துள்ளேன்.

- பெ. சந்திரகேசன், சென்னை

(‘தலித் முரசு'க்கு முதல் வாழ்நாள் கட்டணம் செலுத்தியவர் திரு. பெ. சந்திரகேசன் என்பது குறிப்பிடத்தகுந்தது. - ஆர்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com