கருப்பு வாழ்க்கை - ஆரியன்
கிராமத்து
டூரிங் டாக்கிஸ் தொடங்க
நகரத்து சித்தாள் வரை
வானத்துக்குக் கீழும்
"கறை” யோடிருக்கிறது
எங்களின் கருப்பு
வாழ்க்கை...!
வாலிபப் பருவம்
பார்க்காமலே
குழந்தைப் பருவம்
முதுமைப் பருவமாய்
முற்றிப் போகிறது...!
கட்டுமரத்தில்
வலையோடு சென்றாலும்
வசப்படாமலே
தப்பித்துப் போகின்றன
மீன்கள்...!
வாழ்வியல் வறுமை
எங்களுக்கு மட்டும் வண்ணங்களின்றியே
காட்சிக்குத் தெரிகிறது
விஞ்ஞானம் வீழ்ச்சியென்றால்
"வளர்ச்சி” என்றே வசைபாடுகிறார்கள்.
எங்களின் உழைப்பைப் பார்த்து
பரிசீலித்த பின்பும்..!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|