Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

ஹைபுன்கள்
நிலாமுகி

சந்தடி மிக்க திருவிழாவில் தொடர்ந்து சஞ்சாரம்
வண்ணங்கள் பலவாய் வடிவம் காட்டியது நெகிழி

வண்ணத்துப்பூச்சியே மயங்குமாறு
சிரித்தன போலிப் பூக்கள் வாங்க விருப்பமில்லா
வாசமில்லா ரோஜாக்களைத் தாண்டி
மனமின்றித் தொடர்ந்தது நடை

பால்நிறப் பூப்பூக்கும் பதியனிடப்பட்ட ரோஜாச்செடி
அருகில் சென்று வாங்கினேன் ஆசையாய்....

பூத்திருந்த பூவைக் கிள்ளிக் கொடுத்தேன்
உழைப்பிற்கு உரியவனிடம்
கொண்டுவந்து நீரூற்றிப் பராமரித்துக் காத்திருந்தேன்
எனக்கேயான பூவுக்காய்....

அரும்பியது அடுத்த மொட்டு முகமன் கூறினேன்
முதிரும்நாள் ஒவ்வொன்றிலும் ...

ஆயத்தமானேன் மலரும் தருணத்தை
மனதில் படம்பிடிக்க ....
காத்திருந்தேன் வாச நிமிடங்களை
வாங்கி இதயம் நிறைக்க...

தவிர்க்கவியலா வெளியூர் பயணம்
குறிப்புச்சீட்டு தந்துவிட்டு
குடும்பத்தோடு இடம்பெயர்ந்தேன்
திரும்பி வந்து பார்க்கையில்
உதிர்ந்து கிடந்தன சருகுகளாய் இதழ்கள்!

பயன் பாடின்றியே கழிந்துவிடுகின்றன
பலவற்றின் பருவங்கள்!

கதிரவனின் வெப்பமா
நினைப்பா உறைகின்றாய்
சூரியகாந்தி

ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இன்னலை ஊட்டி
முடக்கிப் போடுகிறாய் ஆளை இயங்கவிடாமல் ....
சுவையரும்புகளில் கசப்பையேற்றி
மறுக்க வைக்கிறாய் உணவை,

சுவாசமாய் இருந்த சுறுசுறுப்பு
ஆசுவாசமாய் படுத்திருக்கிறது
கட்டிலுக்கு அடியில் கால்களை நீட்டி....

கால்களில் முளைத்திருந்த இறகுகள் வெட்டப்பட்டு
இறுகிக்கிடக்கின்றன தசைநார்கள் வீங்கி
வெளிவேலைகளுக்குத் தரமுடிகிறது
கேள்விகளுக்கு மத்தியிலும் விடுப்பு விண்ணப்பம்

ஓய்வெடுக்கச் சொன்ன மருத்துவ அறிவுரையை
மதிக்க வியலாமல் காதைக்கிழிக்கிறது
படுக்கவிடாமல் அழைப்பு மணியோசை
வந்திருப்பவர் பட்டியல் விரிகிறது மனத்திரையில்
உனதுபெயரை அடிக்கோடிட்டு
உத்வேகத்தோடு எழுந்து சமதரையில்
தடம்புரள்கின்றன பாதங்கள்

விபத்தின்றி தாழ்திறக்கையில்
உள்ளுக்கு விழுங்கிய மாத்திரைகளைச் செரித்து
தூக்கி எறிகிறேன் நோய்க் கிருமிகளை ....

தளைத்துப் பிணித்திருந்த
நோயை முடக்கிப் போட்டுவிட்டு இயங்குகிறேன்
திமிரத் தெம்பிருப்பின்
காலனும் காலடியில்
சிக்கன் குனியா


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com