Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
அக்டோபர் 2007

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் - பொது விவாதம் தேவை

இளவேனில்

`மாநிலங்களின் நலனுக்காகவும், மக்களின் முன்னேற்றத்துக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடுவது ஜனநாயகம் வழங்கியுள்ள உரிமைகள். இதன் ஒரு அங்கம்தான் வேலை நிறுத்தமும் போராட்டமும்.

கேரளத்தில் 1997-ம் ஆண்டு குறிப்பிட்ட தொழிற்சங்கம், குறிப்பிட்ட பிரச்னைக்காக நடத்திய வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இப்படி ஒரு குறிப்பிட்ட பிரச்னைக்காக நடத்தப்பட்ட வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என்ற தீர்ப்பு, தற்போது பொதுவான சட்டமாக மாறியுள்ளது.

இதன் விளைவாகத்தான் தமிழகத்தில் பொது வேலை நிறுத்தத்தை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

சட்டங்கள் இரு வகைப்படும். அதில் ஒரு வகை சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் இயற்றப்படுவது.

மற்றொன்று நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் காலப்போக்கில் கடைப்பிடிக்கப்பட்டு உருவான சட்டங்கள். இவற்றின் தன்மைகள் வேறு. நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் காலப்போக்கில் உருவான சட்டங்களை நிலையாகப் பயன்படுத்தக் கூடாது. அண்மைக் காலமாக நீதிமன்றத் தீர்ப்பு வாயிலாக உருவாகும் சட்டங்கள் அதிகரித்து வருவது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.

27சதவீத இடஒதுக்கீடுச் சட்டம் அறிவிக்கப்பட்டபோது அதை எதிர்த்து தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த வேலை நிறுத்தம் சட்ட விரோதம், ஆனால் வேலை நிறுத்தம் செய்த நாள்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை முன்மாதிரியாக எதிர்காலத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

குஜராத் மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் சலுகை கேட்டு போராடியபோது இப்போராட்டத்தைத் தேசிய அவமானம் என்ற அளவுக்கு உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டது.

இப்படிப் பொதுவான விஷயங்களில் முரண்பட்ட தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன.

ஆகவே இதை தேசிய அளவில் பொது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள், சமூகநல ஆர்வலர்கள், துணிந்து தங்களது கருத்தை வெளியிட வேண்டும்.

பெரியார் இல்லை என்றால் வாரியார் ஏது?

தென்பாண்டிச் சீமையை ஆண்ட மன்னரும், வீர மங்கை வேலுநாச்சியாரின் தந்தையுமான சேதுபதியின் பெயரால், ராமேஸ்வரம் கடல் பகுதியைத்தான். சேது சமுத்திரம் என்று தமிழர்கள் அறிவார்கள். தமிழினப் பகைவர்கள் எப்போதுமே வெளிப்படை யாகப் போர் தொடுக்க முன் வருவதில்லை. ஆனால் திராவிட - ஆரியப் போராட்டம் என்பது இன்று நேற்றுத் தொடங்கியதும் அல்ல.

தேச - இன எல்லைகளைக் கடந்து மனித நேயம் வளர்த்த சான்றோர்கள் கூட, தம் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் திராவிட - ஆரியப் போராட்டத்தின் பாதிப்பை - அதன் வலியை - உணர்ந்து மனம் கசந்து ஆரிய சூழ்ச்சி குறித்து வெளிப்படையாகவே புலம்பியிருக்கிறார்கள்.

அறுபத்து நான்காம் நாயனார் என்று தமிழ்ச் சைவர்களால் போற்றப்பட்ட கிருபானந்த வாரியார் பார்ப்பன எதிர்ப் பாளரோ, திராவிட இயக்கப் பற்றாளரோ அல்ல. ஆனால் அவர் தமது இறுதி நாட்களில் நெருங்கிய சகாக்களிடம் ``பெரியார் இல்லை என்றால் வாரியார் ஏது?’’ என்று பெரியாரின் தேவையை உணர்த்தியதுண்டு.

ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறு ஆகும் - என்பது சமூக அறிவியல் புலப்படுத்துகிறது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத விதமாய் `வர்க்கம்’ என்பது இந்தியாவிலே வர்ணாஸ்ரம விதிப்படி நேர்ந்த பிறவிப் பயனாகவும், தலைவிதியாகவும் போதிக்கப் பட்டுவிட்டது. இதனால் பார்ப்பனர்கள் சிந்திக்கவும், சமூகத்தை ஒழுங்கமைக்கவும், சுகஜீவனம் செய்யவும் தெய்வீக உரிமை பெற்றவர்கள். பிற சாதியினர் வெவ்வேறு தளங்களில் உழைக்கவும் பிறந்தவர்கள் என்று பார்ப்பனர்கள் நம்புகிறார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com