Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூன் 2008

கச்சத் தீவு-மீட்கப் போவது எப்போது?
ம.மு. தமிழ்ச்செல்வன்

கச்சத் தீவை இழந்த காலகட்டத்திலேயே நாம் காவிரி நீர் உரிமையினையும் இழந்தோம். 1924இல் காவிரி நீரை தமிழகம் பயன்படுத்துவதற்கு ஏதுவாக ஆங்கில ஆட்சி ஓர் ஒப்பந்தம் செய்து கொடுத்திருந்தது. அந்த ஒப்பந்தம் 1974இல் புதுப்பிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையாகத் தமிழக விவசாயிகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். ஆனால் அன்றைய தமிழக அரசு வழக்கைத் திரும்பப் பெற்றது.

காவிரியும் கச்சத் தீவும்

1974ஆம் ஆண்டு தமிழகத்தின் உயிர் நாடியான காவிரி நீர்ச் சிக்கலைத் தொடங்குவதற்குத் தமிழக அரசு கருநாடகாவுடன் ஒப்பந்தம் இடாததே ஆகும். அதே போன்று தமிழகத்திற்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவை தமிழகத்திடம் ஆலோசிக்காமல் கூட அன்றைக்குப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் இலங்கைக்குத் தூக்கிக் கொடுத்தார்.

தமிழக அரசின் நடவடிக்கை

அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் 29-6-1974ஆம் நாள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். மத்திய அரசிற்குத் தன் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். அதற்காகத் தொடர்ந்து போராடுவோம் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவித்தார்.
ஆனால் இந்திரா காந்தி அவர்கள் கச்சத்தீவு சிங்களவருக்கே உரியது என்று முடிவு செய்து 28-6-1974 அன்று இந்திய இலங்கை உடன்பாட்டில் நாம் கச்சத்தீவை இழந்தோம்.

வரைபடத்தில் கச்சத் தீவு மறைப்பு

1800 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க அறிஞர் தாலமி வரைந்த வரைபடத்தில் கச்சத் தீவு இராமநாதபுர மாவட்ட வரைபடத்திலேயே இடம்பெற்றிருந்தது. இலங்கை வரைபடத்தில் இடம்பெறவில்லை. ஆனால் 15-7-1972 இல் தமிழக அரசின் ஆவணக் காப்பகம் மூலம், இராமநாதபுர மாவட்ட அரசுப் பதிவு இதழ் (கெசட்) திருத்திய புதுப்பதிப்பை (The Tamilnadu Gazetteer Partaining to Ramanathapuram) வெளியிட்டது. 1062 பக்கங்கள் கொண்ட அந்த அரசுப் பதிவிதழில் தொடக்கத்தில் இராமநாதபுர மாவட்ட வரைபடம் உள்ளது. அதில் இந்திய எல்லையும், இந்தியக் கடல் எல்லையும் காட்டப்பட்டுள்ளன. ஆனால் அதிர்ச்சி தரும் செய்தி என்னவெனில், அந்த வரைபடத்தில் கச்சத் தீவு இல்லை.

தமிழ்நாடு அரசின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அந்த அரசிதழின் வரைபடத்தில் இந்திய எல்லைக்குட்பட்ட கச்சத் தீவு விடுபட்டுப் போனதற்கு யார் காரணம் என்று கண்டறியப்பட வேண்டும்.

அந்தோணியார் கோவில்

கச்சத்தீவில் அமைந்துள்ள அந்தோணியார் கோவிலில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாவிற்கு தமிழக மக்கள் சென்று வழிபடலாம் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் தமிழக மீனவர்களும், தமிழக மக்களும் கச்சத்தீவின் பக்கம் செல்லக்கூட இலங்கை இராணுவம் அனுமதிப்பது இல்லை. மீறிச் செல்பவர்களை பயங்கரவாதி, தீவிரவாதி என்று முத்திரை குத்தி இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

இயற்கை வளங்கள் கொள்கை

கச்சத்தீவில் பெட்ரோலியம், இயற்கை வாயு மற்றும் வேறு வகையான உலோகங்களும், கடலுக்கடியில் மணல், கனிமம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவ்வளங்கள் இரு பகுதியில் இருந்தாலும் அவற்றை எடுப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் இந்திய அரசும் சிங்கள அரசும் கலந்து பேசிப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உடன்பாடு உள்ளது.

ஆனால், கச்சத் தீவில் கிடைக்கும் அனைத்து இயற்கை வளங்களையும் சிங்கள அரசு மட்டுமே அனுபவித்து வருகிறது. உடன்பாட்டில் உள்ளதை சிங்கள அரசு மதிக்காதது மட்டுமின்றி இந்திய அரசை ஏளனமும் செய்கிறது.

மீனவர்கள் படுகொலை

தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றால் அவர்கள் கச்சத்தீவில் தங்கி தங்கள் உடைமைகளை உலர்த்திக் கொள்ளவும், மீன் வலைகளை உலர்த்திக் கொள்ளவும் உடன்பாட்டில் உள்ளது. ஆனால் கச்சத்தீவின் அருகில் சென்றாலே இலங்கை இராணுவம் மீனவர்களை சுட்டுக்கொல்கிறது.

இலங்கை இராணுவத்தின் வெறிச்செயல்

தமிழக மீனவர்கள் கச்சத்தீவின் அருகிலே அல்லது எல்லை ஓரத்திலேகூட மீன் பிடிக்கச் சிங்கள இராணுவம் அனுமதிப்பது இல்லை. மீறும் மீனவர்களை சுட்டுக்கொல்கிறார்கள். இதுவரை 300 மீனவர்களுக்கு மேல் வெறிபிடித்த சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளதாக அரசு கணக்குக் காட்டுகிறது. ஆனால் உண்மையில் இறந்தோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கக்கூடும். பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியும், மீன் வலைகளை அறுத்தும் அட்டூழியம் செய்து வருகிறது சிங்கள இராணுவம்.

சிங்கள மீனவர்கள்

சிங்கள மீனவர்கள் வழி தவறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்துவிட்டால் அவர்களை இராஜ மரியாதையோடு இந்திய இராணுவம் உபசரித்து அனுப்பி வைக்கிறது. எல்லையைத் தாண்டி வந்த சிங்கள மீனவர்களை என்றைக்காவது இந்திய இராணுவம் சுட்டுள்ளதாகவோ, அவர்களின் படகுகளை, வலைகளைச் சேதப்படுத்தியுள்ளதாகவோ செய்தி வந்துள்ளதா?

ஆனால் கச்சத்தீவு நம்முடையது என்று எவ்வளவோ சான்றுகளுடன் விளக்கிக் கூறியும் எடுத்துக் காட்டியும் இந்திய அரசு இலங்கைக்குத் தரை வார்த்தது. அப்படி தாரைவார்க்கும் போது போடப்பட்ட உடன்படிக்கையை சிங்கள இராணுவம் காலில் போட்டு மிதிப்பது மட்டுமின்றி, இதுவரை ஆயிரக்கணக்கான மீனவர்களைக் கொன்றுள்ளது. இதுதான் சிங்கள அரசு இந்தியாவை மதிக்கும் லட்சணம்.

முடிவுரை

இந்தியாவின் உரிமையைக் காக்கவும், மீனவர்களின் உரிமையை மீட்கவும் கச்சத்தீவை உடனடியாக நாம் சிங்கள அரசிடம் இருந்து மீட்டாக வேண்டும். அதற்குத் தமிழக அரசும் இந்திய அரசும் என்ன செய்யப் போகிறது?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com