ஆஸ்துமா நோயாளிக்கு உணவில் கவனம் தேவை
Dr. ப.உ. லெனின், B.H.M.S.,M.D.(H)
இதயத்திற்கு சுகம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு அரிசியைவிடச் சப்பாத்தி சிறந்தது. இத்துடன் நார்ச்சத்து மிகுந்த காய்கறி, கீரை வகைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு முதலியவற்றை நீக்கிவிட்டு, காரட், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கோதுமையைக் கஞ்சியாகவோ, சாதமாகவோ சேர்த்துக் கொள்ளலாம். ராகியைக் கஞ்சியாகச் சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சித் துவையல், கொள்ளு ரசம், முருங்கைக்கீரை, தூதுவளைக்கீரை முருங்கைக்காய், கண்டங்கத்திரி, அரைக்கீரை ஆகியவை ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.
முந்திரி, மணிலா, பலா, வாழை, பேரீட்சை முதலியவை சாப்பிட்டால் இழுப்பும், இருமலும் அதிகமாகும். வாழைப்பழம் ஆஸ்துமா நோயாளிகளின் எதிரியாகும். பச்சைத் தக்காளி சாப்பிட்டால் இழுப்பு, திணறல் ஏற்படும். எலுமிச்சைச் சர்பத் ஆகாது. ஆனால் இனிப்பான ஆரஞ்சுப் பழம் சிறந்தது. தேங்காய் ஏற்றது. பால், தயிர், மோர், கூல்டிரிங்குகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். வாயுவை உண்டாக்கும் பருப்பு, பூசணி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஆஸ்துமா நோயாளிகள் வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது அரை வயிறு சாப்பிட்டால் போதும். சாப்பிடுவதையும் முறையாகச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று கூழாக அரைத்து உமிழ் நீரில் கரைத்து விழுங்க வேண்டும். உண்ணும்போது உடலோ, மனமோ பதற்றம் அடையக் கூடாது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் உண்ண வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|