Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam wrapperMaatru Maruthuvam
ஏப்ரல் 2009

ஹோமியோபதியில் தேவையில்லை ‘பைபாஸ்’
டாக்டர் ஏ.யு. ராமகிருஷ்ணன்

ஜெர்மனியில் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல அலோபதி மருத்துவராக இருந்த சாமுவேல் ஹானிமன் கண்டுபிடித்த மருத்துவ முறைதான் ஹோமியோபதி. இது ஊசி, அறுவை சிகிச்சை இல்லாத மருத்துவ முறையாகும். அறுவை சிகிச்சைத் தவிர்க்கவும் முடியும். 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் கையாளப்பட்டு மிகவும் பிரபலமாகி பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வேரூன்றி, அங்குள்ள மக்களின் நம்பிக்கையை இம்மருத்துவ முறை பெற்றுள்ளது. தமிழகத்திலும் 400க்கும் மேற்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளனர்.

உடல் கூறில் உள்ள குறைகளை மட்டும் கண்டறிந்து சிகிச்சை அளிக்காமல், நோயாளியின் மன நிலையையும் கண்டறிந்து ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது இம்மருத்துவ முறையின் சிறப்பாகும். மேலும் ஆரோக்கியமாக உள்ள வருக்கு எது நோயை உருவாக்குகிறதோ, அப்பொருளைக் கொண்டே நோய்வாய்ப்படு பவருக்குச் சிகிச்சை அளிப்பது ஹோமியோபதியின் அடிப்படை உதாரணமாக ஜலதோஷத் துக்குக் காரணமாக இருக்கும் வெங்காயத்தைக் கொண்டு ஹோமியோபதி முறையில் மருந்து தயாரித்துக் கொடுத்தால் ஜலதோஷத்துக்குச் சிறந்த மருந்தாக இருக்கும்.

அறிவியல்பூர்வமாக ... நோய்களுக்கு அலோபதி மருத்துவத்தில் உள்ள எக்ஸ்ரே, ரத்த அழுத்தம், ஈசிஜி போன்ற தேவையான சோதனைகளைச் செய்து நோயின் தன்மையை அறிவியல் பூர்வமாக உறுதி செய்துகொண்ட பிறகே ஹோமியோபதி மருத்துவ முறையிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடக்க காலத்தில் பத்தியங்கள் இருந்தன என்றாலும் தற்போது பத்தியம் மிக மிகக் குறைவு. நாள் ஒன்றுக்கு 6 தடவை காபி குடிப்பவராக இருந்தால் இரண்டு தடவைக்கு மேல் குடிக்க வேண்டாம் என்றுதான் சொல்வோம்.

பக்க விளைவுகள் கிடையாது : இம் மருத்துவ முறையில் வேதியியல் பொருள்கள் கலக்காமல் மாத்திரைகள் தயாரிக்கப்படுவதால் நோயாளி களுக்கு எவ்விதப் பக்க விளைவுகளும் ஏற்பாடாது அலோபதி மருத்துவ முறையைப் போல் நோய்க்கான மாத்திரைகளை நாங்கள் எழுதித் தருவதில்லை. ஏனெனில் நாங்கள் தரும் ஒரு மாத்திரையிலேயே வைட்டமின் சத்தும் நிறைந்து இருக்கும்.

தாவர மூரிகைகள், சாதாரண உப்பு உள்பட உப்பு வகைகள், மரப்பட்டை போன்ற இயற்கை ஆதாரங்களைக் கொண்டே ஹோமியோபதி மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. சர்க்கரை மாத்திரைக் கலவையைக் கலந்தே அனைத்து மாத்திரைகளும் தயாரிக்கப்படுவதால் ஹோமியோபதி மாத்திரைகள் கசக்காது. கடுகு போன்ற அளவுக்கே இருக்கும் மாத்திரைகள் அனைத்தும் இனிக்கும்.

‘பைபாஸ்’ அறுவைச்சிகிக்சையை தவிர்க்கலாம்! :

கொழுப்புப் பொருள்கள் காரணமாக இதய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு முதரில் நெஞ்சில் வலி ஏற்படுகிறது. அடைப்பின் அளவு அதிகமாக மாரடைப்பு வரை செல்கிறது. எண்ணெயில் பொரித்த பண்டங்களை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதால் இதய ரத்தக் குழாயில் கொழுப்பு சேர்ந்து இப்பிரச்சினை ஏற்படுகிறது. கொழுப்புச் சத்துப் பொருள்களைத் தவிர்த்து, காய்கறிகளையும் பழங்களையும் அதிக அளவில் சாப்பிட வேண்டும்.

அலோபதி மருத்துவத்தில் அடைப்பை நீக்குவதற்கான பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அடைப்பின் அளவு 70 சதவீதம் வரை இருந்தால் அறுவை சிகிச்சை இல்லாமல் ஹோமியோபதி மருத்துவ முறையில் ஓராண்டுக்குள் நல்ல பலன் கிடைக்கும்.

சிகிச்சை முறை : அலோபதி மருத்துவ முறையைப் போன்றே அடைப்பின் அளவை அறிய ‘ஆஞ்சியோகிராம்’ சோதனை செய்ய வேண்டும். ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு அளவுகளை ‘டிரட் மில்’ கருவி மூலம் அறிந்து சிகிச்சை தொடங்கப் படும். ஆஞ்சியோகிராம் சோதனைக்கு ரூ. 25ஆயிரம் வரை செலவாகும். அடிப்படை மருத்துவச் சோதனைகளைச் செய்த பிறகு தினம் ஒரு ஹோமியோபதி மாத்திரையைச் சாப்பிட்டால் போதும். நான்கு மாதம் கழித்து அதிகச் செலவு பிடிக்கும் ஆஞ்சியோகிராம் செய்யாமல், தாரியம் ஸ்கேனிங் படச் சோதனை செய்து இதயத்தில் உள்ள ரத்த ஓட்ட அளவு மூலம் நோயாளியின் முன்னேற்றத்தை மதிப்பிட முடியும். மாரடைப்பு ஏற்படும் நோயாளிகள் தங்களது எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.

ஆஸ்துமா : சுற்றுச்சூழல் மாசுகள், காற்றில் அதிக ஈரப்பதம், சுத்தம் இல்லாமை ஆகியவற்றால் ஏற்படும் ஒவ்வாமை, பரம்பரைத் தன்மை ஆகியவை காரணமாக ஆஸ்துமா நோய் ஏற்படு கிறது. நாய், பூனை போன்ற வீட்டு வளர்ப்புப் பிராணிகளால் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா நோய் வர வாய்ப்பு உண்டு. சுவாசக் குழல் வழியாகச் சரியான முறைப்படி நுரையீரலுக்குக் காற்று வந்து செல்லாது. சுவாசக் குழாய் சுருங்கி விடுவதால் மூச்சு முட்டும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போது இந் நோய் தாக்குகிறது. குழந்தை முதல் பெரியவர் வரை யாரையும் எப்போது வேண்டுமானாலும் இந்நோய் தாக்க வாய்ப்பு உண்டு.

அறிகுறிகள் : சாதாரணமாக உட்கார்ந்திருக்கும்போது ஓய்வு எடுக்கும்போதும் மூச்சு வாங்குதல், இருமல், சளியுடன் இருமல் ஆகியவை ஆஸ்துமாவின் அறிகுறிகளாகும். இது தொற்றுநோய் அல்ல. ஹோமியோபதி மருத்துவ முறையில் ஆஸ்துமாவைக் குணப்படுத்துவதற்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் உள்ளன. ஒவ்வாமைப் பொருள்கள் சுவாசக் குழாயைத் தாக்குவதை மாத்திரைகள் தடுத்து விடுகின்றன.

நோய் தீவிரம் இல்லாத சாதாரண நோயாளி தொடர்ந்து ஆறு மாதங்கள் மாத்திரைகள் சாப்பிட வேண்டும். நாள் ஒன்றுக்கு ஒரு மாத்திரை வீதம் மொத்தம் 180 மாத்திரைகள் சாப்பிட வேண்டும். ஒவ்வொரு மாதமும் மருத்துவரை நோயாளி சந்திக்க வேண்டும். நோயாளியின் உடல் நல முன்னேற்றத்துக்கு ஏற்ப மாத்திரைகளின் வீரியத்தை மாற்றி மாற்று மாத்திரைகள் அளிக்கப்படும்.

உணவுப் பொருள்கள் காரணமாகவும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரும். எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, சாக்லேட் கலந்த இனிப்புகள் ஆகியவை ஒத்துக்கொள்ளாதவர்கள் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஹோமியோபதி மருத்துவ சிகிச்சையில் ஆஸ்துமாவுக்கு நிரந்தர நிவாரணம் கிடைக்கும்.

அறுவை சிகிச்சை இல்லாமல் சிறு நீரகக்கற்களை அகற்றுதல் :

உப்புத் தன்மை கலந்த குடிநீரைத் தொடர்ந்து குடித்து வருவதாலும் தக்காளி போன்ற யூரிக் அமிலம் நிறைந்த பழங்களை அதிகம் சாப்பிடுவதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். பசலைக் கீரையை அதிகம் சாப்பிடுவதாலும் கற்கள் உருவாகும். நடுத்தர வயதினருக்கும் முதியவர்களுக்கும் பெரும்பாலும் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை ஏற்படுகிறது.

அறிகுறிகள் : விலா எலும்புகளுக்குக் கீழ் கடும் வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறு நீரில் ரத்தம் வெளியேறுதல் ஆகியவை சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் எக்ஸ் ரே அல்லது அல்ட்ரா சோனோகிராம் செய்து கற்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். அல்ட்ரா சோனோகிராம் சோதனையில் கற்கள் இருப்பது உறுதியாகிவிட்டால் தக்காளி, பசலைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. ஹோமியோபதி முறையில் தினம் ஒரு மாத்திரை வீதம் தொடர்ந்து சாப்பிடவேண்டும். கற்கள் சிறியதாக இருந்தால் ஒரு வாரத்திற் குள்கூட கரைந்து சிறுநீரில் வெளியேறி விடும். சிறுநீரைச் சேகரிப்பதன் மூலம் கற்கள் வெளியேறுவதை நோயாளியே உறுதி செய்து கொள்ளமுடியும்.

1 செமீ. விட்டமுள்ள பெரிய கற்களாக இருந்தால் 6 மாதங்களுக்குத் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால் பலன் கிடைத்துவிடும். பிரச்சினை தீர்ந்தவுடன் மீண்டும் அல்ட்ரா சோனோகிராம் செய்து கற்கள் முழுமையாகக் கரைந்துவிட்டதை உறுதி செய்து கொள்ள முடியும்.

அலோபதி மருத்துவ முறையில் சிறுநீரகக் கற்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப் படுகிறது; அல்லது ‘ரிதோடிரிப்ஸி’ என்ற கருவி சிகிச்சை மூலம் கற்கள் உடைக்கப்பட்டு சிறுநீர் மூலம் வெளியேறுகின்றன. மீண்டும் மீண்டும் கற்கள் உருவாக வாய்ப்பு உண்டு. ஆனால் ஹோமியோபதி மருத்துவ முறை சிகிச்சையில் கற்கள் மீண்டும் உருவாக வாய்ப்பே இல்லை. ஆயுள் முழுவதுக்கும் கற்கள் குறித்துக் கவலை இல்லாமல் இருக்கலாம்.

பித்தப் பையில் கற்கள்:

கல்லீரலுக்குப் பின்புறம் பித்தப்பை உள்ளது. பித்தப் பையில் உள்ள நீர் கொழுப்புச் சத்துப் பொருள்களைக் கரைத்து ஜீரணிக்க உதவுகிறது. கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பால் பொருள் களை அதிகம் சாப்பிடுவதால். கொழுப்புச் சத்துகள் கரையாமல் பித்தப் பையிலேயே படிந்து கற்களாக மாறுகின்றன. பித்தப் பையில் கற்கள் உருவாவது ஆண்களைவிட பெண்களுக்கே அதிகமாக உள்ளது.

அறிகுறிகள் : பித்தப் பையில் கற்கள் இருந்தால் வயிற்றின் மேல் பாகத்தில் கடும் வலி இருக்கும். உடனடியாக ஹோமியோபதி மருந்துக் கடைக்குச் சென்று ‘மேக்னீஷியா ஃபாஸ்’ மாத்திரைகளை வாங்கி வந்து, அரைமணி நேரத்துக்கு 2 மாத்திரைகள் வீதம் மொத்தம் 4 மாத்திரைகள் சாப்பிட்டால் வலி நிவாரணம் கிடைக்கும். பின்னர் மருத்துவரிடம் சென்று சோதனை செய்துகொள்வது அவசியம்.

பித்தப் பையில் உள்ள கற்களையும் அறுவை சிகிச்சை இல்லாமல் ஹோமியோபதி மருத்துவ முறையில் அகற்றிவிடலாம். அலோபதி மருத்துவத்தில் பிரச்சினையைத் தீர்க்க பித்தப்பையை அகற்றி விடுகிறார்கள். ஆனால் ஹோமியோ பதியில் 6 மாதம் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால் கற்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து மலத்தில் வெளியேறி விடும். ஆறுமாதம் கழித்து எக்ஸ்ரே எடுத்தோ அல்லது அல்ட்ரா சோனோகிராம் செய்தோ கற்கள் வெளியேறி விட்டதை உறுதி செய்து கொள்ளலாம். அறுவை சிகிச்சையிலிருந்து விடுதலை!

குடல்வால் அழற்சி (அப்பண்டிசைட்டிஸ்) :

குடல் வாலில் வீக்கம் ஏற்படுவதால் இந்நோய் ஏற்படுகிறது. வயிற்றின் கீழ்ப் பாகத்தில் கடும் வலி இருக்கும். ஹோமியோபதி மருத்துவ முறையில் குடல் வாலைச் சுற்றியிருக்கும் நோய்த் தொற்றுக் குச் சிகிச்சை செய்து அறுவை சிகிச்சையைத் தவிர்த்து விடலாம். வலி லேசாக இருந்தால் ஒரு வாரத்தில் நிவாரணம் கிடைக்கும். நோயின் தன்மை தீவிரமாக இருந்தால் ஹோமியோபதியில் மூன்று மாதம் தொடர்ந்து மாத்திரை சாப்பிட பிரச்சினை தீர்ந்துவிடும்.

மூட்டு வலிகள் : உடலில் எலும்புகள் இணையும் இடத்தில் உராய்வு ஏற்படுவதாலும் எலும்புகள் இணையும் இடத்தைச் சுற்றி இருக்கும் சைனோவில் திரவம் அதிகம் உற்பத்தி ஆவதாலும் மூட்டு வலி உண்டாகிறது. பரம்பரைத் தன்மையும் காரணமாக இருக்கலாம். எலும்புகளுக்கு இருபுறங் களிலும் உள்ள தசைகளில் தளர்வு ஏற்படுவதால் இடைவெளி உண்டாகி மூட்டுவலி ஏற்படுகிறது. மூட்டுவலிகளில் பல வகை உள்ளன. கை அல்லது கால் பெரு விரலில் ஏற்படும்மூட்டு வலிக்கு கவுட் என்று பெயர். இது உடலில் யூரிக் அமிலம் அதிகம் ஆவதால் ஏற்படுகிறது. காச நோய், சோரியாஸிஸ் போன்ற தோல் நோய் காரணமாகவும் மூட்டு வலி ஏற்படலாம்.

ஹோமியோபதி மருத்துவமுறையில் தரப் படும் மாத்திரைகள் மூட்டுகளைச் சுற்றி உற்பத்தியாகும் சைனோவில் திரவ உற்பத்தியை இயல்பான நிலைக்குக் கொண்டு வரும். தசைகளை வலுப்படுத்தும். சாதாரண மூட்டு வலிக்கு 3 முதல் 6 மாதங்கள் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால் முழுப் பலன் கிடைத்துவிடும். ஆனால் 15 ஆண்டுகளாக மூட்டு வலியுடன் கஷ்டப்படு பவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ஹோமியோபதி மாத்திரை சாப்பிட்டால் முழுத் தீர்வு கிடைக்கா விட்டாலும் திருப்திகரமான பலன் கிடைக்கும்.

எச்சரிக்கை : அலோபதி மருத்துவத்தில் மூட்டு வலிக்காக ஸ்டீராய்ட் (ஹார்மோன்களை ஊக்குவித்து வலி நிவாரணம் பெறுதல்) மாத்திரைகளைச் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து புதிய நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். பக்க விளைவுகளை முழுமையாகத் தெரிந்து கொண்டே அலோபதி மருத்துவத்தில் மூட்டுவலிக்கு மருந்து சாப்பிட வேண்டும்.

முதுகு வலி : இது உலகப் பிரச்சினை. இது இல்லாதோர் மிகச் சிலரே. இஷ்டம் போல் உட்காருவது. திரும்புவது. வேலை செய்யும்போது இஷ்டம் போல் நாற்காலியில் உட்காருவது. ‘ஷாக் அப்சார்பர்’ போதிய அளவுக்கு இல்லாத வாகனங்களில் பயணம் ஆகியவை காரணமாக முதுகு வலி ஏற்படுகிறது.

முதுகு எலும்புத் தண்டுவடத்தில் உள்ள எலும்புகளில் தேய்மானம் ஏற்பட்டு, எலும்பு களுக்கு இடையே உள்ள இடைவெளி குறுகி நரம்புகள் அழுத்தப்படுவதால் வலி ஏற்படுகிறது. ஹோமியோபதி மருத்துவ முறையில் எலும்புகளை அகலப்படுத்தி நரம்புகள் அழுத்தப்படுவதைத் தடுக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில உடல் பயிற்சிகள் மூலம் நிவாரணம் கிடைக்கும். ஹோமியோபதி மருத்துவ முறையில் 3 முதல் 6 மாதங்களுக்குத் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.

நோய்கள் ஆரம்ப நிலையில் இருக்கும் போது சிகிச்சை பெற்று நிரந்தர நிவாரணம் பெற பக்க விளைவுகள் இல்லாத ஹோமியோபதி மருத்துவ முறை மிகச் சிறந்தது.

ஹோமியோபதி மாத்திரை பட்டியல்

காய்ச்சல், மூட்டு வலி - RHUS TOX

அதிகக்காய்ச்சல், கடும் தலைவலி - BELLADONNA

அஜீரணம், வயிற்றைக் கலக்கும் உணர்வு - NUX VOM

சீதபேதி - MERC SOL (மெர்க் சால்)

வயிற்றுப்போக்கு - VERATRUM ALBUM (வெரட்ரம் ஆல்பம்)

மாத விடாய் உள்பட எல்லாவிதமான வயிற்று வலிக்கும் - MAGNESIA PHOS (மெக்னீசியா ஃபாஸ்)

கடும் வயிற்று வலி (முன்பக்கமாகக் குனிந்தால் சிறிது நிவாரணம் கிடைக்கும்) - COLOCYNTH (கோலோசிந்த்)

வாயுப் பிரச்சினை - CARBO VEG (கார்போ வெஜ்)

மூச்சு இரைப்பு, மார்புச் சளி - IPECAC (இபிகாக்)

காயங்கள் - ARNICA (ஆர்னிகா)

காயங்கள் ஆறுவதற்கு, நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க - CALENDULA CREAM (காலண்டுல்லா கிரீம்)

எல்லா ஹோமியோபதி மருந்துக் கடைகளிலும் இந்த மாத்திரைகள் கிடைக்கும்.

ஹோமியோபதி மாத்திரைகளுக்கு கம்பெனிப் பெயர்கள் கிடையாது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை மருத்துவப் பெயரில்தான் உலகம் முழுவதும் மாத்திரைகள் விற்கப்படுகின்றன.

கடுகு அளவு இருக்கும் மாத்திரைகளை ஒரு டிராம் பாட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

வலி கடுமையாக இருந்தால், அரை மணிக்கு ஒரு முறை மூன்று மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.

பொறுத்துக்கொள்ளக் கூடிய அளவில் வலி இருந்தால் காலை, நண்பகல், மாலை, இரவு என தலா மூன்று மாத்திரைகள் சாப்பிடவேண்டும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு மாத்திரைகளைச் சாப்பிடவேண்டும்

- நன்றி : தினமணி - மருத்துவ மலர் - 1997


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com