Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
பிப்ரவரி 2009
பன்மை வாசிப்பைக் கோரும் குடிமக்கள் காப்பியம்

ம. மணிமாறன்

நிகழும் சகல செயல்களின் வலிமையையும் காலமே தீர்மானிக்கிறது. அ-புனைவு இலக்கியங்களின் மீது ஏற்றப்படும் ருசி புனைவை இருளுக்குள் தள்ளிடும் காலமிது. இருளையே தன் படைப்பின் சூல் எனக்கொண்டு காவல் கோட்டம் தமிழ் வாசக பரப்பில் பரம்மாண்டமான விருட்சமாக நடப்பட்டுள்ளது.

முடி அரசு, குடிமக்கள் எனும் இருபெரும் எதிர்வுகள் இரண்டு பாகம். 115 அத்தியாயங்கள் மதுரா விஜயத்தில் துவங்கி, பட்ட சாமியில் நிறைவடைகிறது. குமாரகம்பணனின் விஜயநகரப்படை அரவநாட்டின் பழம்பெரும் நகரான மதுரையை அடைந்த நாளில் துவங்குகிறது நாவல். அமண மலையின் ஆம்பல் குளத்தில் நீந்திக் கிடந்த கங்கா தேவியே தன் எழுத்தானி கொண்டு மதுரா விஜயத்தை எழுதிப் பார்க்கிறாள்.

நாவல் மதுரையைப் பற்றிப் பேசுகிறது என ஒற்றைவாயீயில் எவரும் சொல்ல முடியாது. மதுரையம்பதி அழிந்து அழித்து உருமாறியபடி நாவலெங்கும் விhயீகிறது. அழிவின் சூட்சுமம் ஆதியில் கடம்பவனமென இருந்த நகரை தன் ஒற்றை முலை திருகி எhயீத்தாளே கண்ணகி அவளின் சினம் கொப்பளிக்கும் நெருப்பின் துண்டத்தில் கனன்று கொண்டே இருக்கிறது. நெருப்பின் ஒன்றைத் துளி மதுரையின் அடி ஆழத்தில் புதைந்திருக்கிறதோ எனும் மனநிலையை நாவலை வாசகன் வாசித்தறியும் பொழுதினில் உணர்ந்து கொண்டே இருப்பான்.

மரணம், யுத்தம், வன்கொலை, ஆதிக்கத்திற்கு, எதிரான கலகம், கண்ணீர், சாகசம், வாழ்வை அதன் வழியில் நேர்மையாக எதிர்கொள்ளும் எளியமக்களின் சத்தியம் என நாவல் முழுக்க எழுதப்பட்ட வரலாற்றின் பக்கங்களுக்கு வெளியே நிறுத்தப்பட்ட வெகுமக்களின் வாழ்வைப் பற்றிப் பேசுகிறது.

இதுவரையிலான தமிழ்நாவல்கள் யாவும் ஒற்றைத் தளத்தில் தான் பயணப்பட்டுள்ளன. காவல் கோட்டம் தன் பிரதிக்குள் பல்வேறு திறப்புகளை கொண்டுள்ளது. வாசகன் சகல திறப்புகளுக்குள்ளும் உள் நுழைந்து வெளியேறும் போது அவன் அடையும் மனநிலை புதியதாக இருக்கும். நான் இதுவரை அறிந்தவற்றையெல்லாம் புரட்டிப் போட்டு வேறு ஒன்றாக்கும் சக்தியும் நாவலுக்கு இருக்கிறது.
கொல்லாவாருகள், பிறமலைக்கள்ளர்கள் எனும் இரு இனக்குழு மக்களின் வாழ்வியலை நாட்டார் வழக்காறுகள், சொல்கதைகள், பழமொழிகள், விடுகதைகள் என அடுக்கித் தொடர்வதால் நாவலை வட்டார வழக்குச் சிமிழுக்குள் சிலர் அடைக்க முயற்சிக்கலாம்.

முடி அரசு எனும் முதல் பாகம் முழுக்க கேட்கும் போர் ஒலிகளும், குதிரைகளின் குழம்படிச் சந்தமும், வேட்டை நாய்களின் மூச்சிரைப்பும், ரத்தப்பலிகளும், அதிகார வெறி நிகழ்த்தும் வஞ்சக சூழ்ச்சிகளும் மதுரையின் அறுநுனூறு ஆண்டுகால வரலாற்றைப் பேசும் சாயீத்திர நாவல் இதுவென அடையாளப்படுத்த இடம் தரும்.

அதிகாரம் கைமாறி வந்த நுட்பத்தை சந்திரஹாசத்தையும், சாளுவக் கட்டாhயீயையும் பின் தொடரும் வாசகன் அறிவான். இரண்டாம் அத்தியாத்திற்குள் நிகழும் அதிகாரத்திற்கு எதிரான வெகுமக்கள் யுத்தத்தின் ரத்தப் பலிகளையும் கலக அரசியலையும் கடந்திட முடியாது கனத்துக் கிடக்கிறது மனம். எனவே இதை அதிகார நுன் அரசியல் பேசும் எனக் சொல்லி பார்க்கலாம்.

தலைமுறை பலவாக மதுரையை தன் காவல் எல்லைக்குள் வைத்திருந்த தாதனுனூரை குடிக்காவல் முறைமையில் இருந்து வெளியேற்றத் துடிக்கிறது காலணியம். ஐரோப்பியக் கப்பல்கள் விரைந்து செல்ல புரம்பன் கடவைத் திட்டமி;டும் காலனியம் முல்லைப் பொயீயாறு திட்டத்தைத் தள்ளிப் போடுவது ஏன்? எனும் கேள்வியும். தொழில் நுட்ப கலைஞர்களை குற்றவாளிகளாக்கி பாம்பன் கடவுப் பணிக்காக பயன்படுத்திட சிறைச்சாலையை பாம்பனின் அமைத்திடும் சூட்சுமத்தை வாசித்தறியும் வாசகன் இது காலனிய அரசியலைப் பேசும் நாவல் எனச் சொல்லக் கூடும்.

அதிகாரத்திற்கு அனுக்கமாகவும், நெருக்கமாகவும் இருந்து ருசியேறிய நாவுடன் சகல பகுதி மக்களையும் சூருட்டத்துடித்த பிராமணிய மேலாதிக்கம் குறித்த தெறிப்புகள் நாவலின் பக்கமெங்கும் சிதறிக்கிடக்கின்றன. 12 ரூபாய் சம்பளமும், அதிகாரமும் அய்யரை போலிசாக்கிய இடத்தைக் கடக்கும் வாசகனுக்கு நாவல் மற்றொரு தளத்தில் பயணப்படும்.


கனக நுனூகாவில் துவங்கி, மங்கம்மாள், மீனாட்சி, என வளர்ந்து குஞ்சரத்தம்மாள், ராஜாம்பாளில் உயிர் பெறும் நாவல், மாயாண்டிப் பொயீயாம்பிள்ளையின் மகள் அங்கம்மாள் கிழவியை அடையும் நம் உயிர் போய்விடும் போல் இருக்கிறது. எத்தனை பெண்கள். தன்னேயே பலியாக தருகிறார்கள் அவர்களின் வலியையும், வேதனைiயும் பதிவுறுத்தியதால் நாவலை பெண்ணிய வாசிப்பில் நகரும் கதைகளின் தொகுதி என்று அடையாளத்திடும் சாத்தியமும் உண்டு.

நான் நாலைந்து கதவுகளையே திறந்திருக்கிறேன். நுட்பமாக வாசித்தறியும் வாசக நெஞ்சில் ஆயிரம் கதவுகளைத் திறக்கும் சக்தியும், ஆற்றலும் கொண்டது காவல் கோட்டம். பன்முக வாசிப்பிற்கு இடமளிக்கும் முதல் தமிழ் நாவலே காவல் கோட்டம்.

நாவலுக்குள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சடச்சிப் பொட்டலும், ஆலமரமும், சடச்சியின் மக்களான தாதனுனூர் பொயீயாம்பிள்ளைகளும், குத்து உரல் கிழவிகளும், அவர்களின் உரையாடல்களும், அமொயீக்க மிஷினாயீப் பாதர்கள் எழுதிய கடிதங்களும் நீண்ட நாட்களுக்கு நம் நெஞ்சை விட்டு அகல மறுக்கும்.

குறிப்பாக சின்னானும், மாயாடிம் பொயீயாம்பிள்ளையும், செங்களும், டேவிட் சாம்ராஜஞம், குஞ்சரத்தம்மாளும், ராஜம்பாளும் காவியமாக நாவலுக்குள் உறைந்திருக்கிறார்ள்.

தாதனுனூரையே களவாடிச் செல்பவன் எவன் என கண்டிட நிலமெங்கும் அலையும் மாயாண்டி தொலைதூரத்துக் களவொன்றில் காண்கிறான் சின்னானை. தாய்க்கு தந்த சத்தியத்தையும், ரகசியத்தையும் பதுக்கியபடி பயணகிக்கிறான் சின்னான். களவின் நுட்பம் சின்னானை தாதனுனூருக்கு பாயீயமானவனாக்குகிறது. சாரயப் பானையில் உறிக்கிடந்த ஏகளியம் சடச்சி பொட்டலில் கொட்டிய நாளில் நெடுநாள் காத்திருப்பிற்கு தன்னையே பலியாக தந்து ஊhயீல் நடுவில் நடுகல்லாகி பட்டசாமியானான் சின்னாள்.

மாட்டாத தன்டட்டியோ தாதனுனூரை தன் கக்கத்தில் சுருட்டி எடுத்துச் சென்ற நாளில் களவின் வலியை தாதனுனூரை முதன் முதலாக அறியச் செய்தவன் செங்கன்.

தன் தாயாதி கிராமத்தை வந்தடைந்த நாள்தொட்டு பொன்னாங்கனாகவும், டேவிட் சாம்ராஜாவும் மாறி மாறிப் பயணிக்கிறான். கழுவாயி ஸத்த பிள்ளை. அவனை இக்கதிக்குள்ளாக்கிய கதைகளும், நேர்மையான பாசமும் நம்மையும் சூழ்கிறது.

ராஜம்மாளும், குஞ்சரத்தம்மாளும் காவிய நாயகிகள். தான் வாழ்ந்த ஊரக்கு வைகையாற்று நீரைக் கொணர மன்னனையும், தன் மதியூகத்தால் பிராமண மேலாதிக்கத்தையும் தோற்கடித்து மக்கள் மனதில் சலங்கைத் தெய்வமானாள் ராஜம்பாள். தாதுவருஷத்தில் பசித்துக் கிடந்த மதுரைக்கு தன்னையே அமுதசுரபியாக்கி பசியைத் தீர்த்தாள் குஞ்சரம்மாள். நாட்டுப்பாடல்களில் கூட இப்போது இருவரும் இல்லாமல் போனது சோகமே.

நாவலில் வி°வநாதன் கோட்டைக் கட்டுவதும், பிளாக்பர்ன் கோட்டையை தகர்க்க நில ஆசை காட்டி மக்களை இறக்குவதும், துடியான காவல் தெய்வங்கள் வடக்கு வாசல் சொல்லத் தம்மனுடன் அடைக்கலமாகி தன் நாடு நோக்கி போவதும் என வாசன் ஆடிப் போவான் நாவலின் ஊடே.

ஒற்றை வாயீ ஓராயிரம் தரவுகளை உள்ளடக்கிக் கிடக்கிறது பிரதிநெடுகிலும். மாயாண்டி பொயீயாம்பிள்ளை போலிஸிற்கு சென்றவர் திரும்பவேயில்லை. ஒருவேளை மருதுவின் மகனோடு அவாயீன் தந்தை தீவாந்திரமாக நாடு கடத்தப்பட்டது போல கடத்தப்பட்டு இருப்பாரோ எனும் வாயீ நமக்கள் சிவகங்கையின் பாளைய வரலாற்றை கடத்துகிறது.

போhயீல் வெற்றியை ஈட்டிய தளபதிகளுக்கு கௌரவமாக தரப்படும் சாளுவக் கட்டாhயீயை மங்கம்மாவிடம் இருந்து கொண்டைய பெறும் இடம் மிக முக்கியமானது. கொண்டைய சக்கிலிய வீரன். என் குடிசையில் இந்த காட்டாயீயை வைக்க முடியாது என்கிறான். சக்கிலியன் போhயீல் மடியவே பிறந்தவள். அவனை தளபதியாக ஏற்கமாட்டார்கள் என்கிறான். கொல்லவாருக்களின் மூத்த குடியான சக்கிலியக் குடிக்கே முதல் மாயீயாதை. போர் வீரர்களை மலக்கிடங்குக்குள் தள்ளிய சிதியை நாவல் வேறு ஒரு மொழியில் சொல்கிறது.

தாதனுஜ்hயீன் மூன்று நாள் திருவிழா, அவர்களின் கல்யாணம், களவில் ஊருக்கு வெளியே மட்டும் தன் உற்றாரை புலிதந்த ஊhயீல் எத்தனை மரணங்கள். ஊருக்கு ரோடும், போலீ° அவுட் போ°ட்டும் வந்து சேரும் நாட்களும் நாவலுக்குள் நிறைந்திருக்கும் ஜல்லிக்கட்டும் நுட்பமான பதிவுகள்

களவும், காவலும் இரட்டைப் பிள்ளைகள், தேர்ந்த களவுக்கு கிடைக்கும் பாயீசே காவல் என்பதை திருமலைமன்னனின் அரண்மனையில் ராஜமுத்திரையை களவு செய்த நாளில் அறியத் துவங்கியது தாதனுனூர்.

குடிக்காவல் முறைமையை அப்புறப்படுத்த காலனி ஆதிக்கம் நிகழ்த்தும் தந்திரங்களும் அதனை எதிர்த்த மக்களின் யுத்தமுமே மொத்த நாவலின் பெரும்பகுதி.

நாவலுக்குள் வரவியிருக்கும் மொழிநடை மந்திரச் சொற்களால் ஆனது. அதிலும் இருளை வெங்கடேசனின் பேனா எழுதிச் செல்லும் இடங்கள் நேர்த்தியானது. “சொக்கநாதருக்கு பொட்டுக் கட்டப்பட்டவளக்கு பக்கத்தில் லாங்கினாத் வேஷ்டிகள் அவிழ்ந்து கிடந்து அமைதி பெற்றன். காமம் குடித்த இருள் பித்தேறிக் கிடந்தது. வனாந்திரத்திலும், வெட்ட வெளியிலும் சூழ்ந்திருந்த இருள் மட்டுமே நிதானம் கொண்டு தௌயீந்திருந்தது”. “பகலில் பார்க்கப்படும் நகரம் கரையான் புற்று போலத்தான். இரவில்தான் நகரம் வடிவம் கொள்கிறது. ஒளிமேலிலிருந்து கீழ்நோக்கி வருகிறது. இருள் மட்டும் தான் மண்ணில் இருந்து பல்கிப் பெருகும் தாவரம்”. “கடம்பவனத்தில் அழியாத வனப்பேச்சியின் வாசனையை இருள் அடுக்குகளில் துழாவித் திhயீகின்றனர்”.

ஒளியும், வெளியும், பிரம்மாண்டமும் நாவல் என பயணித்த பாதையில் இருளை எழுதியதால் இருளின் மக்களை கருப்பா ……. எனும் ஒற்றைச் சொல் கொண்டு நிலை நிறுத்தியதால் இது ஒருஎதிர்ப்பிலக்கியமாகும் கருப்பிலக்கியமாகவும் ரூபம் கொள்கிறது.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com