Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
பிப்ரவரி 2009
வலையுலகம் நேரம்தான் வேண்டும்

ஜா.மாதவராஜ்

பசித்த
சிலந்தியின் வலையில்
அழகிய வண்ணத்துப் பூச்சி
நீங்கள் யார் பக்கம்?

இந்தக் கவிதையைப் படித்து ஏழெட்டு ஆண்டுகளுக்கு மேலிருக்கும். எழுதியவர் ஞாபகமில்லை. கவிதையை யோசிக்க யோசிக்க சொல்வதற்கும், பகிர்வத ற்கும் நிறைய இருப்பது போல எப்போதும் தெரிகிறது. எனது தீராத பக்கங்களில் (http://mathavaraj.blogspot.com) பதிவு(post) செய்திருந்தேன்.

கவிதையைப் படித்துவிட்டு அனுஜன்யா, "நான் வண்ணத்துப்பூச்சி பக்கம்தான். பசியில் புசிக்காவிடில் சிலந்தி சாகாது; புசித்து விட்டால், என்னருமை வண்ணத்துப்பூச்சி சாகும்." என்று பின்னூட்டம் (comment) எழுதினார். கவி உள்ளத்தோடும், தர்க்கரீதியாகவும் அவரது எண்ணங்கள் வெளிப்பட்டிருந்தன. முத்துவேல் அதையும் தாண்டிச் சென்று, "நான் அவ்விடத்தில் இருந்தால், பட்டாம்பூச்சியை எடுத்து தப்பிக்க விடுவேன்" என்று தன் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினார். எல்லோரும் வண்ணத்துப் பூச்சியின் பக்கம் இருப்பதைப் பார்த்த ஒருவர் அங்கு தன் கருத்தை பொதுவெளியில் சொல்ல விரும்பாமல், எனது இ-மெயிலுக்கு ([email protected]) "நான் சிலந்தியின் பக்கம்தான், அது பசியில் இருக்கிறதே.." என்று ரொம்ப நைஸாக தன் கருத்தைச் சொ ல்லியிருந்தார்.

தன் இருத்தலின் தேவைக்காக வலைவிரித்து காத்திருப்பதுதான் சிலந்தியின் விதி. ஆனாலும், சிலந்தி சிறை பிடிப்பதாகவும், வண்ணத்துப் பூச்சி எட்டுத் தி க்கும் பரந்து திரியும் சுதந்திர தாகம் கொண்டதாகவும் படுகிறது. காற்றில்லாத இருளுக்குள் உறைந்து கிடக்கும் சிலந்திக்கும், வெளிச்சத்தின் வெளியில் அழ கின் நர்த்தனம் செய்யும் வண்ணத்துப் பூச்சிக்கும் இயல்புகள் முற்றிலும் வெவ்வேறானதாய் இருக்கின்றன. இன்னும், சிலந்தியை மூலதனத்தை விரித்து ஒரே இடத்தில் இருந்து இரையை உறிஞ்சும் முதலாளிக்கும், பூக்கள் தோறும் பறந்து பறந்து தேன் சேகரிக்கும் வண்ணத்துப் பூச்சியை உழைப்பாளிக்கும் அ¨ டயாளப்படுத்தி பார்க்க முடியும்.

இப்படியான விவாதங்களை உடனுக்குடன் வெளிப்படுத்தும் பிரதேசமாக வலைப்பூக்கள் (blog) இருக்கின்றன. இந்த மாதத்தில் வலைப்பூக்களில் முக்கியமாக பேசப்பட்டவையாக ஈழத் தமிழர் பிரச்சினை, சென்னை புத்தகக் கண்காட்சி, சத்யம் ஊழல் இருந்தன.

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும், சாகித்ய அகாடமி பரிசு பெற்றவரின் படம் போட்டு, அவரது புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என அறிவிப்பு இருக்கும், இந்த வருடம் மேலாண்மைக்கு பொன்னுச்சாமிக்கு ஏன் இல்லை? என்று ஒருவர் கேட்டிருந்தார். "இல்லை, வருகிற வழியில் நான் பார்த்த ஞா பகம் இருக்கிறது என்று உடனே பதில் சொல்கிறார் இன்னொருவர். "கண்காட்சியில் எஸ்.ராமகிருஷ்ணனை நான் பார்த்தேன்... அவரிடம் போன் நம்பரை வாங்கியிருக்கிறேன்...ஹைய்யா...! யாருக்கும் தர மாட்டேன் அஸ்கு..புஸ்கு.." என்று சிறுகுழந்தை போல சந்தோஷப்படுகிறார் ஒரு வாசகர். "யப்பா...இந்த தடவை ஜோஸ்யம், முன்னேறும் உபாயங்கள் குறித்த புத்தகங்கள் முன்னைப் போல விற்பனையாகவில்லையாம்" என்றும் கூட சந்தோஷங்கள் பகிர்ந்து கெ ¡ள்ளப்படுகின்றன. "ஒவ்வொரு புத்தகக்கடை முன்பும், மிட்டாய்க்கடை முன்பு நிற்கும் குழந்தை போல் நின்றேன்" என்னும் ஒரு பதிவரின் வாசகங்கள் மனதில் நிழலாடிக்கொண்டு இருக்கிறது. தமிழ்நதி, தான் வாங்கிய புத்தகங்களை பட்டியலிட்டுவிட்டு, "இத்தனையையும் வாசித்து முடிக்கும் வரை மரணம் என்னை அணுகாதிருக்கட்டும்" என்று முடித்திருந்தார்.

நிறைய தமிழ் வலைப்பூக்களில், "இனப்படுகொலையை நிறுத்து!' என்று படங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. மிகுந்த வேதனையோடு கவிதைகளும், செய்தி களும், படங்களுமாய் கொட்டிக்கிடக்கிறது. படிக்கும் எவரையும் அதிர்ந்து போகச் செய்கின்றன. ஜ்யோவ்ராம் சுந்தரின் கவிதை புதிய வகையில் துயரம் ப ¡டுவதாய் இருக்கிறது.

இதுபோக திருமாவளவனின் உண்ணாவிரதத்தை ஆதரித்தும், கிண்டலடித்தும் எழுதியிருக்கிறார்கள். கள் இறக்கும் போராட்டத்திற்கு எதிராக பூரணமதுவிலக் கை அமல்படுத்த வேண்டுமென திடீரென்று போராட்டம் அறிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சி கடும் கிண்டலுக்கும், நக்கலுக்கும் உள்ளாகியிருந்தது. செந்தழல் ரவி (வலைப்பூ: தனித்திரு, விழித்திரு, பசித்திரு..) "தமிழகத்தில் கள் இறக்குவதை கண்டித்து உண்ணாவிதம் இருக்கும் தங்கபாலு பாண்டிச்சேரியில் பல்§ வறு வகை சரக்குகளையும், அரசாங்கமே சாராயக்கடை, கள்ளுக்கடை போன்றவற்றை நடத்துவதை காண்டித்து நெல்லித்தோப்பிலோ அல்லது லாப்போர்த் வீதியிலோ உண்ணாவிரதம் இருப்பாரா ?" என்று கேட்டு இருந்தார்.

நேரம்தான் வேண்டும். படித்துக்கொண்டே இருக்கலாம். எழுதவும் செய்யலாம்.



சரி. சென்ற இதழில் வலைப்பக்கம் எப்படி ஆரம்பிப்பது குறித்து தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, இ-மெயில் முகவரி கொடுக்காமல் இருந்துவிட்டேன். இந்த முறை கொடுத்திருக்கிறேன். அதுகுறித்து கூடுதல் தகவல்கள் வேண்டுமானால் எழுதுங்கள். இப்போது சில அடிப்படையான தக வல்களை மட்டும் இங்கு தருகிறேன்.

முதலில் கூகுளில் உங்களுக்கு ஒரு ஈ-மெயில் கணக்கு ஒன்று ஆரம்பித்துக் கொள்ளுங்கள். பிறகு கூகுளின் சேவைகளில் blogs என்று இருக்கும். அதில் பே ¡ய் உங்களுக்கு என்று வலைப்பக்கம் உருவாக்க கிளிக் செய்தால். உங்கள் பெயர், ஈ-மெயில் முகவரி, உங்கள் வலைப்பக்கத்திற்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள், உங்களைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்றெல்லாம் ஆங்கிலப்படிமத்தில் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். கூகிளின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு சம்மதம் தெரிவிக்க வேண்டும். இப்போது உங்கள் வலைப்பக்கம் தயார்.

அடுத்து எந்த மாதிரியான வடிவத்தில் (templates) உங்கள் வலைப்பக்கத்தை அமைக்கப் போகிறீர்கள் என்று பல மாதிரிகள் காண்பிக்கப்படும். அதில் ஒன் றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வலைப்பக்கத்தை நிர்வகிக்கும் உங்களது பிரத்யேக பகுதிக்கு (dash board) இப்போது நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அதில் edit posts என்று ஒரு பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்தால் ஏறத்தாழ MS word போன்ற பகுதிக்கு நீங்கள் செல்வீர்கள். அதில் இருக்கும் கட்டத்திற்குள்தான் பதிவுக்கான எழுத்துக்கள் வரவேண்டும். எழுதிவிட்டு, publish என்று இருக்கும் பாட்டனை அழுத்தினால், உங்கள் பதிவு, உங்கள் வலைப்பூவில் உலகம் பூராவும் தெரியும்.

சரி, இப்போது எப்படி தமிழில் எழுதுவது? யூனிகோட் என்பது புதுவகையான எழுத்து முறை. விண்டோஸ் எக்ஸ்பியில் லதா என்று எழுத்துரு (font) இருப்பதால் இதற்கென்று தனியே எழுத்துரு தேவையில்லை. மிக எளிய வழி ஒன்றை சொல்கிறேன். இந்த முகவரிக்குச் (http://www.higopi.com/ucedit/Tamil.html அல்லது http://ezilnila.com/tane/unicode_Writer.htm ) செல்லுங்கள். தமிழ் எழுதி என்று பக்கம் வரும். அந்தப் பக்கத்தை உங்கள் கணிணிக்குள் முழுமையாக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இண்டர்நெட்டை நீங்கள் துண்டித்துக் கொண்டு offlineல் 'தமிழ் எழுதி' யை திறக்கலாம். அதில் தமிழ் என்று இருக்கும் பகுதியை தேர்வு செய்யுங்கள். இப்போது நீங்கள் ஆங்கிலத்தில் டைப் அடிக்க.. அடிக்க, கட்டத்துக்குள் தமிழில் எழுத்துக்கள் வரும். தமிழ் உச்சரிப்புக்கேற்ற ஆங்கில எழுத்துக்களை டைப் அடிக்க வேண்டும். உதாரணமாக செம்மலர் என்றால் cemmalar என்று ஆங்கிலத்தில் டைப் அடிக்க வேண்டும். தீக்கதிர் என்றால் thiikkathir என்று டைப் அடிக்க வேண்டும். அந்த தமிழ் எழுதிப் பக்கத்திலேயே எந்தெந்த தமிழ் எழுத்துக்களுக்கு எந்தெந்த ஆங்கில எழுத்துக்களை டைப் அடிப்பது என்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். முதல் சில நாட்கள் சிரமப்படும். பிறகு பழக்கமாகிவிடும். இந்த 'தமிழ் எழுதியில்' கவிதையையோ, கதையையோ, கட்டுரையையோ எழுதி, மொத்தத்தையும் copy செய்து, dash board வழியே edit posts வழியே சென்று அங்கிருக்கும் பதிவு செய்யப்பட வேண்டிய பகுதியில் paste செய்து, பிறகு publish செய்யலாம்.

யூனிகோட் முறையில் எழுதுவதற்கு வேறு சில முறைகள் இருக்கின்றன. தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.



வலைபூக்களில் சில:

ஜ்யோவ்ராம்சுந்தர் (வலைப்பூ: மொழி விளையாட்டு)

எழவு கொட்டுதல்

ஈராக்கில் செய்தது போல் விமானத்தில் இருந்து குண்டு வீசும் காட்சிகளை தொலைக்காட்சியில் அழகாகக் காட்ட முடியுமா? நொறுக்குத் தீனியுடன் பொ ழுதுபோக்க ஏங்கித் தவிக்கிறார்கள் பிள்ளைகள்.

(வேறு)

குப்பல் குப்பலாக
நாற்காலிகளும் படுக்கைகளும் வாகனங்களும்
வடிவை இழந்துவிட்ட டயர் டியூப்களும்
இடிபாடுகளுக்கிடையில் நின்று கொண்டிருக்கின்றது தெரு
காலியான (ஜன்னலாக இருந்திருக்கக்கூடிய) ஓட்டை வழியாக
எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்
பயக்கண்களுடன் சிறுமி
எண்ணிக்கையின் துல்லியம்
தகர்க்கப்பட்ட பங்கர்கள்
பக்காவாகத் தயாரிக்கப்பட்ட பட்டியல்கள்
உணவிற்கும் மருந்திற்கும்
அலைக்கழியும் மக்கள் கூட்டம்

(இதுவும் வேறு)

அறிக்கை
தீர்மானம்
சந்திப்பு
மேலும் அறிக்கைகள்
மேலும் தீர்மானங்கள்
மேலும் சந்திப்புகள்
ஒன்றிரண்டு கவிதைகள்



மாதவராஜ் - (வலைப்பூ: தீராத பக்கங்கள்)

பெண்மொழி

ஒருநாள் அவளது தோழியின் வீட்டிற்கு அவளும் அவனும் போயிருந்தார்கள். புதுமணத் தம்பதிக்கு விருந்து. அவனும், அவளது தோழியின் கணவனும் அதற்கு முன்பு ஒருவரையொருவர் தெரிந்திருக்கவில்லை. சம்பிரதாயமான அறிமுகம், பேச்சுக்களுக்குப் பிறகு அவள் அவளது தோழியோடு சமையல¨ றக்குள் சென்று விட்டாள். அவனும், அவளது தோழியின் கணவனும் ஹாலில் டி.வி பார்த்துக் கொண்டு, என்ன பேசுவது என்ன சிந்தித்தார்கள். மௌனம் ஹால் முழுக்க வியாபித்திருக்க, சமையலறைக்குள் இருந்து சிரிப்பும் பேச்சும் விடாமல் கேட்டுக் கொண்டிருந்தது. அவ்வப்போது இருவரும் ஒருவரையெ ¡ருவர் பார்த்து எதற்கென்று தெரியாமல் சிரித்துக் கொண்டார்கள். ஹாலில் இருந்த கடிகாரத்தை அவன் அடிக்கடி பார்த்துக் கொண்டான். இரண்டு மணி நேரம் கழித்து விடைபெற்று வெளியே வந்த போது அவனுக்கு அப்பாடா என்றிருந்தது.



இன்னொரு நாள் அவனது நண்பன் வீட்டிற்கு அவனும் அவளும் அதுபோலவே விருந்து நிமித்தம் சென்றார்கள். அவளும், அவனது நண்பனின் மனைவி யும் அதற்கு முன்பு ஒருவரையொருவர் தெரிந்திருக்கவில்லை. ஹாலில் அவனும் அவனது நண்பனும் உட்கார்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தார்கள். இ டையில் எழுந்துபோய் அவனது நண்பன் டி.வியை அணைத்து விட்டு, பேச்சைத் தொடர்ந்தான். நேரம் போனதே தெரியவில்லை. சமையலறையிலிருந்து எழுந்த பெரும் சிரிப்புச் சத்தங்களில் இருவரும் நினைவுக்குத் திரும்பினார்கள். "இந்த பெண்களுக்கு அப்படி என்னதான் பேசுவதற்கு இருக்குமோ' சொ ல்லியபடி, அவனது நண்பன் பேச்சைத் தொடர்ந்தான். விடைபெற்றுக் கிளம்பும் போது அவளும், அவனது நண்பனின் மனைவியும் வெகுநாள் நண்பர்கள் போல பிரிய மனமில்லாமல் பிரிந்தார்கள்.



அடுத்த இதழில் சுவராஸ்யமான சில பதிவர்களைப் பற்றியும், விவாதங்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கிய பதிவுகளைப் பற்றியும், வலைக்குழுமங்கள் பற்றியும் எழுதுகிறேன்.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com