காற்று பார்க்கிறது...
- அல்லிராஜ்
வீதிகள் சந்திக்கின்ற
தெருமுனை வீட்டுக்கருகே
யாருமற்ற வெற்றிடம்
கடையாகிவிட்டது
எல்லாருக்குமாக....
மண்வெட்டியால்
வாசலெல்லாம் சமனாக்கி
தற்காலிக பந்தல் நடப்பட்டது
உட்கார்வதற்கான
நீண்ட பலகைகள் உள்பட...
பக்கத்து தோட்டத்திலிருந்து
சுமந்த மாட்டுச் சாணம்
முழுவதும் வழித்தாயிற்று
உள்ளறையின்
எல்லா பக்கங்களிலும்....
கிழிக்கப்பட்ட
பழைய செய்தித்தாள்கள்
கம்பியில் குத்தப்பட்டு
தொங்குகிறது
வடை போண்டாக்கள்
பொட்டலம் கட்டப்படுவதற்கு...
கடப்பாரையினால்
முதல்குழி தோண்டி
அதற்குப் பிறகு
கட்டிமுடிக்கப்பட்ட
நேற்று வரை
செய்ததில் எதுவுமில்லை....
இன்றைய நிமிடங்களில்
எல்லாரும்
வருகிறார்களென
வைக்கப்பட்டுள்ளது
தனிக்குவளை.
- அல்லிராஜ்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|