Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
மறந்துபோன அதிசயப் பெண்கள்

மனித வாழ்வை மேம்படுத்தவும், மகத்துவ மிக்கதாக்கவும், விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் உதவின. இக்கண்டுபிடிப்புகளில் ஆண் விஞ்ஞானிகள் அளவுக்குப் பெண் விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்புகள் பிரபலமாகப் பேசப்படுவதில்லை. மிஞ்சிப்போனால் ரேடியத்தைக்கண்டுபிடித்த மேரிகியூரி பற்றி மட்டும் தெரியும்.

காரின் கண்ணாடியை சுத்தமாக்கும் வைப்பரை மேரி ஆண்டர்சனும், காரை ஸ்டார்ட் செய்யும்போது சூடேற்றும் கருவியை மார்க்ரெட் வில்காக்சும் கண்டு பிடித்தனர். உடலுக்குள் மருந்தைச் செலுத்தும் ஊசியை (சிரிஞ்ச்)க் கண்டுபிடித்தவர் லெதிதா கீர் ஆவார்.

சமையல் செய்யும் கேஸ் ஸ்டவ்வை எலிசபெத் ஹாக் 1867ம் ஆண்டு கண்டுபிடித்தார். வாட்டர் ஹீட்டரை 1917ம் ஆண்டு இடாஃபோர்ப்ஸ் உருவாக்கினார். அணைக்கட்டுகளை கெட்டிப் படுத்தும் முறையை ஹாரித் ஸ்ட்ராங் என்ற பெண்மணி கண்டு பிடித்தார். நீர்மூழ்கிக் கப்பலில் எரியும் விளக்கையும், நீருக்குள்ளிருந்து கடலின் மேற்பரப்பைப் பார்க்கக் கூடிய டெலிஸ்கோப்பையும் சாரா மாதெர் கண்டுபிடித்தார். ரயிலைத் தூக்கும் எலிவேட்டரை 1881ல் மேரி வால்ட்டன் உருவாக்கினார். வயர்லெஸ் கருவியில் துவங்கி இன்றைய செல்போன் வரைக்குமான அடிப்படைக் கண்டுபிடித்தவர் ஆஸ்திரிய நடிகையான ஹெடி லமார் ஆவார்.

கண் பார்வையற்றோருக்கான பிரிண்ட்டரை 198ம் ஆண்டு ராச்செல் என்ற பெண்மணி கண்டுபிடித்தார்.

இத்தனை கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பெண்களுக்கு 1800ம் ஆண்டு வரையிலும் பேட்டன்ட் உரிமை இல்லாதிருந்தது என்பது பெரிய சோகம். இதனால், பெண்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் பலவற்றில் அவர்களது பெயர்களே இல்லாமல் போய்விட்டது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com