Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
அஞ்சலி
ஐயா மறைந்தார்!

கடந்த 40 ஆண்டுக்காலமாக தமிழகத்தில் ஹோமியோபதி மருத்துவத்தில் தலைசிறந்தவராய் விளங்கிய தோழர் புலவர் த.ச.ராசாமணி ஐயா 28.2.2009 அன்று தமது 78 ஆவது வயதில் காலமானார். மதுரை நாடார் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராய்ப் பணியாற்றியவர். ஆரம்ப காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராய் இருந்து ஆசிரியர்களின் நலன்களுக்காகப் போராடியவர். பின்பு ஹோமியோபதி மருத்துவத்தில் முழுமையாக ஈடுபட்டார். ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவம் பார்க்க முடியும் என்பதை நிரூபித்தவர்.

அவர் தனுக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அவரது சீடர்கள் இன்று தமிழகத்தில் நூற்றுக்கணக்கில் மருத்துவர்களாய் சேவை செய்து வருகிறார்கள். அவர் ஆலமரமாய் நில்லாது வாழைமரமாய் கன்றுகளைப் பரப்பிப் பதியவைத்தார். பலருக்குத் தீராத நோய்களுக்கு மருத்துவம் செய்து தீர்த்துவைத்தவர். தாய்லாந்து மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட அவரிடம் வந்து மருத்துவம் செய்து சுகம் பெற்றனர்.

ஐயா தனது ஒரே மகளான செல்வியின் பெயரால் மருத்துவமனையை மதுரையில் உருவாக்கினார். தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றனர். மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் சிகிச்சைக்கு வந்தால் பணம் பெற மாட்டார். ஐயா நோய்வாய்ப்பட்ட நம் தோழர்களை என்னிடம் அனுப்புங்கள், நான் குணமாக்குகிறேன் என்பார். என்மீதும் மாநில செயலாளர் தோழர் என்.வரதராஜனிடமும் அளவற்ற அன்பு செலுத்தியவர். ஐயா எழுதிய இயங்கியலும் ஹோமியோபதியும் என்ற நூல் மருத்துவர்கள் அனைவரிடமும் பரவியுள்ளது. அவர் "மருத்துவத்தை மக்கள் நலம் காப்பது என்று மட்டும் பார்க்காமல் வர்க்க நலன் காப்பது என்றும் பார்க்க வேண்டும்" என்று முழங்கினார்.

ஐயா தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் புதூரில் பிறந்தவர். இளவயதில் புல்லுக்கட்டு விற்றுப் படித்தவர். ஏழ்மையாய் வாழ்ந்தாலும் படித்து முன்னேற வேண்டும் என்று வலியுறுத்துவார். மதுரையில் செம்மலரைப் பரப்புவதில் மிகுந்த அக்கறை செலுத்தியவர். அவர் ஒரு சிறந்த மருத்துவர் மட்டுமல்ல; ஒரு நல்ல இலக்கியவாதியாகவும் இருந்தார். தமிழாசிரியராகப் பணியாற்றிய காலத்தில் செம்மலரில் பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

அவரது மகள் செல்வி, மருமகன் டாக்டர் காசிராஜன், அவரது முன்று பேரன்கள் ஐயாவின் வழியைத் தொடரட்டும்.

ஐயாவுக்கு நமது புகழஞ்சலி!
எஸ்.ஏ.பி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com