 |
கட்டுரை
களவு கூட சந்தோஷம்தான் க.செ.வெங்கடேசன்.. அபுதாபி...
குளிர்கால ரயில்வே ஸ்டேஷன்
சிமெண்ட் பெஞ்சில்
தி ஜாவின் மோகமுள்
உடனான தனிமை,
முன் வராண்டா வேப்பமர
முன்னிரவு தென்றலில்
இளையராஜாவின் இசையுடன்
ஜென்சியின் இனிமையுடனான
எப் எம் அலைவரிசை.
அலுவலகம் முடிந்து
நண்பர்கள்
பாய் கடை டீ பிஸ்குத்
தம் அரட்டை,
காலை செய்தித்தாள்,
மாலை தொலைக்காட்சி,
செய்தி, மெகா சீரியல்,
பின்னிரவு பால் பழம் தம்,
மற்றும் எத்தனை எத்தனையோ?!!..
களவு போயும்கூட
கவலையில்லை,
சந்தோஷமே!!..
என்னுடனான என்
குழந்தையின் திருடப்பட்ட
சந்தோஷ தருணங்கள்
களவு போனதில்..
- க.செ.வெங்கடேசன்.. அபுதாபி... ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|