 |
கவிதை
பிப்ரவரி - 14 நாவிஷ் செந்தில்குமார்
காலையில்
நிர்வாணம் பூண்ட
நீலவானம்
மின்சாரம் இல்லாததால்
அடிபம்புத் தண்ணீரில்
குளியல்
பரவசம் படிந்த
பறவையின் மொழி
எப்போதும் போல
இன்றும்
எதிர்வீட்டுக் குழந்தையின்
கையசைப்பு...
இவையன்றி
வேறென்ன சிறப்பு
இருக்கமுடியும்
இந்நாளில்?
இனியவளே
நீ காதல்
வயப்படாதவரை...
நாவிஷ் செந்தில்குமார் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|