 |
கவிதை
ப.கவிதா குமார் கவிதைகள்
1) தான் சப்தம் எழுப்புவதால்
மழை வராதென்று
தவளைக்குத் தெரியும்.
மழை வந்தால் கூட
தன்னால் வரவில்லையென்றும்
அதற்குத் தெரியும்.
தவளைக்குத தேவை
மழையல்ல. . . .
தண்ணீர்.
2) பயந்து பயந்து
வாழ்வதைக்காட்டிலும்
பயப்படாமல்
செத்துப்போகவே விரும்புகிறேன்.
3) சுடு செங்கல்களுக்குள்
சுருண்டு படுத்திருக்கும்
பாம்பைப் போல்
உனக்குள்
புதைந்திருக்கிறது வன்மம்.
எதிர் எதிர் சந்திப்புகளில்
உரையாடல்களில்
பரஸ்பரம் கரம்குலுக்கலில்
தெரியவில்லை உஷ்ணம்.
தென்றலுக்குத் தலையசைக்கும்
சிறுபூவின் சந்தோசத்தோடு
நாட்களை எண்ணுகையில்
வேருக்கு ஊற்றினாய் வெந்நீர்.
ஆயினும்
தழைக்கிறது நட்பு.
- ப.கவிதா குமார் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|