Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கவிதை
நீ நேசிக்கும் பசிய தீவினை விடுவிக்க!!
Che-guevera
தமிழாக்கம்: புதுவை ஞானம்

விடியலை அறிவிக்கும் வீரமிக்க தூதுவனே !
அமைதி குலுங்கும் அகன்ற சாலைகளினூடே
வந்து கொண்டிருக்கிறோம் . . . . .
நீ நேசிக்கும் பசிய தீவினை விடுவிக்க !
மார்த்தியின் புரட்சிக்கனலை
விழிகளிலே தேக்கி வந்து கொண்டிருக்கிறோம் !
‘ வெற்றி அல்லது வீர மரணம் ! ’ என வெஞ்சூளுறைத்து
விரைவாய் வருகின்றோம் !

che உன்னுடைய முதல் வேட்டினிலே . . . .
கன்னித்துயில் கலைந்து காடு விழித்தெழும் போதினிலே
அடுக்கடுக்காய் வேட்டோசை எழும் ! . . எங்களை
உன் பக்கத்தில் காண்பாய் !

“ நிலம் . . நீதி . . உரிமை . . உணவு ! ”
உன் அறைகூவல் காற்றில் மோதித் தெறிக்கையில்
கூட்டுக்குரல் எழும்பும் ! . . எங்களை
உன் பக்கத்தில் காண்பாய் !

வேட்டையின் முடிவினிலே
கொடுங்கோன்மையின் புரையோடிய அவயங்களை
அறுவைச்சிகிச்சையால் அறுத்தெறியும்போது
பஞ்சுடன் நிற்கும் தாதியாய் - எங்களை
உன் பக்கத்தில் காண்பாய் !

விடுதலை ஈட்டிகள் விளைவித்த காயத்தை _ அந்த
ராட்சத மிருகம் நக்கியழும்போது
கனவுகள் நிறைவடைந்த இதயத்தோடு _ எங்களை
உன் பக்கத்தில் காண்பாய் !

மெடல்களும் யுதங்களும் மேனியெங்கும் ஜொலித்தாலும்
ஈக்களின் கூட்டமே அந்த ஈனர்கள் கூட்டம்
வாளை மழுங்க வைக்கும் எங்கள் வைரநெஞ்சங்கள்
ஊளை ஈக்கள் முன்னே உரம் குன்றிப் போய்விடுமோ ?

che நாங்கள்
அவர்களது துவக்குகளை ரவைகளைக்
குன்றுகளைக் கைப்பற்றுவோம். . . அவ்வளவே !

ஒருகால். . . . முன்னணியில்
எதிரியின் குண்டுகள் எங்களைச் சில்லிட்டுப் போக வைத்தால்
உன்னுடைய ‘ கியூபன் ’ கண்ணீர்த் துளிகளால்
எங்கள் எலும்புகளை மூடு . . .
அது போதும். ஏனெனில்
அமெரிக்க சரித்திரமே
எலும்புகளால் நிணத்தால்
கண்ணீர்ச்சுதை கொண்டு
கட்டப்பட்டது தான் !

மூலம் : Che-guevera 1956 Mexico
speeches and writings of Che.தமிழாக்கம் : புதுவை ஞானம்.

புதுவை ஞானம் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com