பெயர்க்க முடியாத
பெருங்கோபத்துடன்
Saddamநெருப்புக் குழம்பென
திரண்டன விழிகள்
நீளும் துரோகத்தின் கைகளை
எதிர்த்து

கொடுங்கோன்மையின் குருதிக் கவிச்சி
நெஞ்சைப் பிசைய பிசைய
நரம்புகள் இறுக்கப்பட்டு
செத்து மடிந்தது மனித உரிமை

வல்லாண்மை கழுகின்
கூர்நகப் பிராண்டலில்
ரத்தக் கீறல்களாய் மாறியிருக்கின்றன
நாடுகளின் எல்லைக் கோடுகள்

சுரண்டல் சாட்டையை
சொடுக்கி அடித்து
ஜனநாயகம் என
உரக்கக் கத்துகிறது
தசை குதறும் வெறி

ஆயுதத் தேடலில் அதிகாரத்தை
நிலைநிறுத்தும் ஏகாதிபத்தியம்
நாவை சுழற்றி உதடுகளை நக்கி
உற்று உற்றுப் பார்க்கிறது
அடுத்த வேட்டைக்காய்