உலகப் பொருளாதார மன்றத்தின் பாலினச் சமத்துவ இடைவெளியைக் குறைக்கும் 2022ஆம் ஆண்டறிக்கை பெண்களின் பொருளாதாரம், கல்வி, உடல் நலம் மற்றும் அரசியல் பங்கேற்புக் குறித்து ஆராய்கிறது. 145 நாடுகள் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் இடம் 136. பொருளாதாரப் பங்கேற்பில் 143ஆவது இடத்தில் கடைசியிலிருந்து மூன்று இடங்களுக்கு மேலே இருக்கிறது.

திராவிட மாடலின் இந்தப் பெண்ணுரிமைத் திட்டங்கள் சனாதனத்துக்கு மனுசாஸ்திரத்துக்கு பார்ப்பனியத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சனாதனத்தை புதைகுழிக்குள் அனுப்பும்போது தான் சமூகத்தின் விடுதலை சாத்தியமாகும்.

சனாதனத்துக்கும் திராவிடத்துக்கும் எதிரான போராட்டத்தைக் கூர்மைப்படுத்துவோம்.

சனாதனத்தை பார்ப்பனியத்தை வீழ்த்த உறுதி எடுப்பதே கழகம் நடத்தும் சேலம் மாநாடு (ஏப். 29, 30).

தோழர்களே, தயாராவீர்!

ஆர்.எஸ். பாரதிக்கு பதிலடி: ‘ராசி’ மீது எனக்கு நம்பிக்கை இல்லை - உதயநிதி ஸ்டாலின்

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எனக்கு ராசி மீது நம்பிக்கை இல்லை; உழைப்பின் மீது தான் நம்பிக்கை” என்று கூறினார்.

முன்னதாகப் பேசிய தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “2019ஆம் ஆண்டிலிருந்து கடந்த 5 தேர்தல்களாக நான் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் வெற்றி கிடைத்து வருகிறது. அதற்கான ‘ராசி’ என்னிடம் இருக்கிறது” என்றார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி, “எனக்கு ராசி மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. அண்ணன் ஆர்.எஸ். பாரதிக்கு நம்பிக்கை இருக்கும் என்றால் அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

வெற்றிகளுக்கு எல்லாம் காரணம் தலைவர், கழகப் பொறுப்பாளர்களின் கடும் உழைப்பு; ராசி அல்ல” என்று மேடையில் பதிலடி தந்தார் உதயநிதி.

- விடுதலை இராசேந்திரன்