ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவை விடுவிப்பதற்காக இன்னுயிரையும், பொருளையும் இழந்தவர்கள் முஸ்லிம்கள். ஆனால் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் மூன்றாம் தர, நான்காம் தர குடிமக்களாக அரசியல்வாதிகளால் மாற்றப்பட்டு விட்டார்கள்.

அறுபத்தாறு ஆண்டுகளுக்கும் மேலான சுதந்திர இந்திய வரலாற்றில் கல்வி, சமூகம், பொருளாதாரம் என அனைத்து நிலைகளிலும் மற்ற சமுதாயங்கள் வளர்ந்துள்ள நிலையில் முஸ்லிம்கள் மட்டும் திட்டமிட்டு புறந்தள்ளப்படுள்ளனர். மக்களுடைய வளர்ச்சிக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டியது முக்கியமானதா கும். கல்வியில் முன்னேற்றம் பெற்றால்தான் அரசு வேலை வாய்ப்புகளை பெற முடியும். பொருளாதாரத்தில் முன்னேற முடியும்.

முஸ்லிம்களில் 41 சதவீதம் படிப்பறிவு இல்லாதவர்கள். 8ம் வகுப்புவரை படித்தவர்கள் 15 சதவீதம் பேர், 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் 7.8 சதவீதம் பேர், டிப்ளமோ வரை படித்தவர்கள் 4.4 சதவீதம் பேர், பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் 1.7 சதவீதம் பேர் என்று புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது. கல்வியில் முஸ்லிம் சமுதாயம் பின் தங்கிய நிலையில் காணப்ப டுவதால் அரசு வேலை வாய்ப்புகளிலும் அதே பின் தங்கிய நிலை பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் அனைத்து மாநி லங்களிலும் முஸ்லிம் மக்கள் தொகை சதவீதத்தைவிட குறை வான அளவிலேயே அவர்கள் அரசு பணிகளில் அமர்த்தப்பட்டு கின்றனர். முஸ்லிம்கள் அதிக அளவு வாழும் பீகாரிலும், உத்தி ரப்பிர தேசத்திலும் முஸ்லிம்க ளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு அளவு கூட அரசுப் பணிகள் வழங்கப்படவில்லை.

கர்நாடகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 12.2 சதவீதம். ஆனால் 8.5 சதவீதத்தினர்தான் அரசுப் பணிகளில் உள்ளனர். குஜராத்தில் முஸ்லிம்கள் 9.1 சதவீ தம் உள்ளனர். வேலை வாய் ப்போ 5.4 சதவீதம் மட்டும்தான். தமிழகத்தில் 5.6 சதவீதம் முஸ் லிம்கள் வாழ்கின்றனர் என்று அரசு புள்ளி விபரம் காட்டிய போதும் 2 சதவீதத்திற்கும் குறை வானவர்களே அரசுப் பணியில் உள்ளனர். இதுவும் கூட கீழ் மட்டத்தில் உள்ள வேலைதான். உயர் பதவிகளில் பல மாநிலங்களில் பூஜ்ஜியம்தான் நிலவுகிறது.

நீண்ட காலப் போராட்டத் திற்கு பிறகு கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்தான் 3.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு தமிழகத்தில் கிடைத்துள்ளது. முஸ்லிம்க ளுக்கு கல்வியும், வேலை வாய்ப் பும் மறுக்கப்பட்டதால் சமூகப் பொருளாதார நிலையும் மோச மான நிலையில் உள்ளது. சுதந்திர இந்தியாவில் நகர்ப்பு றங்களில் வசிக்கும் முஸ்லிம்க ளில் 44 சதவீதத்தினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வதாக சச் சார் கமிட்டியின் அறிக்கை கூறு கிறது.

படிப்பும் இல்லை, வேலையும் இல்லை. சுய தொழில் தொடங்க லாம் என்று வங்கிகளில் கடன் கேட்டால் முஸ்லிம்களுக்கு கடன் கொடுக்க எந்த வங்கியும் முன்வருவதில்லை. கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்களில் 3.2 சதவீதம் பேருக்குத்தான் வங்கிக் கடன் வழங்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கிராமப்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 60.2 சதவீதம் பேர் நிலமற்றவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். அதனால் குறைந்த கூலிக்கு வேலை செய்யும் கூலி யாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

ஒரு சில மாநிலங்களில் குறைவான சதவீதத்தில் வழங்கப் பட்டுள்ள இட ஒதுக்கீட்டைக் கூட வறுமையின் காரணமாக நிரப்ப முடியாமல் போகிறது. படிப்பறிவும் இல்லாமல், சட்டங் களை நடைமுறைப்படுத்தும் பத விகளிலும் இல்லாமல் இருப்ப தால் சுயநல ஆதிக்க சாதியினர் முஸ்லிம் சமுதாயத்தை வேட் டைக் காடாக மாற்றியுள்ளனர்.

அதன் காரணமாகத்தான் பம் பாய், மீரட், பாகல்பூர், பீவாண்டி, கோவை, குஜராத், லக்னோ என நாட்டின் பல இடங்களில் நடை பெற்ற மதக் கலவரங்களில் முஸ் லிம்கள் தங்கள் உயிர்களையும், பொருளையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தக் கலவரங்களை விசாரிப் பதற்காக அமைக்கப்பட்ட கமி ஷன்களில் ஒரு முஸ்லிம் நீதிபதி கூட நியமிக்கப்படவில்லை என் பதிலிருந்து அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சி வலையை புரிந்து கொள் ளலாம்.

ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, அநீதிக்கு ஆளான மக்களின் அவல நிலையை வெளியுலகுக்கு கொண்டு செல்ல வேண்டிய ஊடகத்துறையில் முஸ்லிம்கள் உரிய அளவு அங்கம் வகிக்காத காரணத்தால் முஸ்லிம்களைப் பற்றிய தவறான பிரச்சாரங்களே செல்லப்படுகிறது.

இந்திய முஸ்லிம்கள் அத்தனை பேரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்றும் அவதூறுப் பிரச்சாரத்தை முன்னிலைப்படுத்துகின்றனர். மற்றவர்கள் தவறுகள் செய்தால் தனிப்பட்ட மனிதனின் தவறுகளாகவும், முஸ்லிம் தவறு செய்தால் சமுதாயத்தை மையப்படுத்தியும் பிரச்சாரம் செய்கின்றனர்.

முஸ்லிம்களின் வேதனையான நிகழ்வுகளை ஆய்வு செய்த நீதியரசர் சச்சார் தனது ஆய்வறிக்கையில், “தேச விரோதிகள் என்றும் தாஜா செய்யப்படுகின்றனர் என்றும் ஒரே நேரத்தில் குத்தப்பட்ட இரட்டை முத்திரையை இரட்டைச் சுமைகளாக முஸ்லிம்கள் சுமந்து கொண்டு இருக்கின்றனர். நாங்கள் தேச விரோதிகளோ, பயங்கரவாதிகளோ அல்ல என்று தினமும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம்கள் இருக்கின்றனர்...'' என்று தனது ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த அவல நிலை நீக்கப்பட வேண்டுமென்றால் முஸ்லிம் மக்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் அரசினால் முழு வீச்சு டன் செயல்படுத்தப்பட வேண் டும். ஒரு சில மாநிலங்களில் நாம் பேராடிப் பெற்ற குறைவான சதவீத தனி இட ஒதுக்கீட்டின் பலனைக் கூட பெறமுடியாத வாறு சங்பரிவார சக்திகள் காரிய மாற்றி வருகின்றனர்.

சச்சார் கமிஷன் பரிந்து ரையை நடைமுறைப்படுத்துதல், வகுப்புக் கலவர தடுப்புச் சட்ட மசோதா, தேசிய அளவில் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக் கீடு ஆகியவற்றை மத்திய அரசு நிறைவேற்றவிடாமல் சங்பரிவார சக்திகள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றன.

முஸ்லிம்களுக்கான மேம் பாட்டுத் திட்டங்கள் நிறைவேற வேண்டுமானால், அவல நிலைகள் மாற வேண்டுமானால், நாடெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து போராட்ட வியூகங்களை வகுக்க வேண்டும்.

சுதந்திரமடைந்து 66 ஆண்டு கால வரலாற்றில் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் ஒருங்கிணைப்பைக் கூட ஏற்படுத்த முடியவில்லை என்பது வேதனையான உண்மை. பல தலைமைகள், பல சாதிப் பிரிவுகள், பிறப்பின் அடிப்படை யில் ஏற்றத் தாழ்வுகள், பல கட்சிகள், உள்கட்சி சண்டைகள் என்று பிரிவினைக்காக பல காரணங்கள் இருந்தபோதிலும் இவற்றையெல்லாம் மறந்து எந்தக் காரணம் கொண்டும் முஸ்லிம்கள் மேம் பாடு அடையக் கூடாது என்பதற் காக சங்பரிவார சதிகாரர்களும், இந்துத்துவா சூழ்ச்சிக்காரர்களும் ஒன்றுபட்டு முஸ்லிம்களை அழிப்பதற்காக விழப்போடு இருக்கிறார்கள்.  ஒரு இறை, ஒரு மறை, ஒரு தூதர் என்று ஒன்றுபடுவதற்கு பல காரணங்கள் இருந்தபோதிலும் நாமோ சுயநலம் கொண்டு பிரிந்து கிடப்பதால் செயல் இழந்து போயிருக்கிறோம்.

Pin It