சென்னை அயனாவரம் பகுதியில் 11 வயதுள்ள ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமி 17 மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருக் கிறார்கள்.

விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நெஞ்சைப் பதறச் செய்யும் கொடுமையை செய்த அனைவரும் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இப்படி ஒரு கொடூர சம்பவம் மக்கள் மனதில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள சூழலில் வதந்திகளை பரப்பி அதன் மூலம் இலாபம் அடைவதையே தங்கள் வேலைத் திட்டமாக வைத்துள்ள காவி வெறி கும்பல் திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த ஒருவரும் இந்த குற்றத்தை செய்துள்ள கும்பவில் ஒருவர் என “பால சுப்ரமணியன்” எனும் பெயர் உள்ள முகநூல் பக்கத்தில் பதிவிட் டுள்ளார்கள்.

இந்தப் படத்தில் உள்ள நபருக்கும் எமது திராவிடர் விடுதலைக் கழகத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எங்கள் கழகத் தோழருக்கு இவர் யார் என்றே தெரியவில்லை.

இவர் கருப்புச்சட்டை அணிந்திருப்பது போன்று காட்டி அவதூறு பரப்புகிறது காவி கும்பல். ஆனால் இவர் அணிந்திருப்பது அடர்நீல (dark blue) நிற சீருடை.இது ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் சீருடை ஆகும். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 7 பேர் இந்த சீருடையை அணிந்துள்ளார்கள். இந்தப் படத்தில் உள்ள நபரின் சீருடையிலும் இடது மேல் சட்டையில் அவர்களின் நிறுவன அடையாள பட்டை உள்ளது. மற்ற அனைவருக்கும் இந்த அடையாளப் பட்டை உள்ளது. ஆனால் இதனை கருப்புச் சட்டை போல் திரித்து பச்சைப்பொய்யை பேசி அவதூறு பரப்பும் துணிச்சல் காவிக் கும்பலுக்கு மட்டுமே உண்டு.

இந்தப் பதிவை முதன் முதலாக பதிவிட்டதாக அறியப்படும் வீரமணி எனும் பெயரில் உள்ள முகநூல் கணக்கு இப்போது இல்லை. அந்தப் பதிவைத்தான் நான் பதிவிட்டேன் என கூறிதப்பித்துக் கொள்ளும் காவிக் கும்பலின் மலிவான தந்திரம்தான் இது.அட்மின் தான் பதிவிட்டார். நான் அதற்கு பொறுப்பில்லை என கூறி தப்பிக் கொள்ளப் பார்க்கும் பாஜக தலைவர் எச்.ராஜாவின் வழிதான் இது.

19.07.2018 மாலை 5 மணிக்கு கழக தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், வடசென்னை மாவட்டச் செயலாளர் செந்தில் குனுடு மற்றும் கழகத் தோழர்கள் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.

கழகத்தின் மீது அவதூறு பரப்பும் தீய நோக்கத்தோடு அவதூறு பரப்பும் வீரமணி என்பவரால் உருவாக்கப்பட்ட செய்தியினை பாலசுப்பிர மணியம், இராமலிங்கம், வெங்கட்ராஜூ மற்றும் பலரால் பகிரப்பட்டுள்ளது.

குற்றவாளிக்கும் திராவிடர் விடுதலைக் கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் வேண்டுமென்றே கழகத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கத் தோடு அவதூறு பரப்பிய வீரமணியையும், அவருக்கு உடந்தையாக செய்தியினை வெளியிட்டு பரப்பிய பாலசுப்பிரமணியம், இராமலிங்கம், வெங்கட்ராஜூ போன்றோரின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.