டிசம்பர் 16, ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு.

periyar kudal erode 450சென்னையில் ஜாதி ஒழிப்புக்காக பெண்கள் அறைகூவல் விடுத்த அந்த எழுச்சி நிகழ்வுகள், தோழர்களின் உள்ளங்களில் இப்போதும் பசுமையாய் பதிந்து நிற்கிறது. அடுத்து, ஈரோட்டில் கூடுகிறோம்!

மதவெறி சக்திகள், ஜாதி வெறி சக்திகள், பெண்களின் சமத்துவத்துக்கும் சுயமரியாதைக்கும் சவால் விடும் ஒடுக்கு முறைகள், மதம் கட்டமைத்த கற்பிதங்கள் -

- இவை அனைத்துக்கும் எதிராக விழிப்புணர்வு களம் நோக்கி பெண்களை அணி திரட்டும் மாநாடு இது.

மாநாட்டுப் பணிகளில் நிதி வசூலில் பெண் தோழர்கள் முழு வீச்சில் களமிறங்கி செயல்படுகின்றனர்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடக்க விழாவை எழுச்சியுடன் நடத்திய அதே ஈரோட்டில்...

மீண்டும் கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் உணர்வாளர்களும் ஒன்று கூட இருக்கிறார்கள்.

கொள்கை உறவுகளின் ஒன்று கூடுதலிலும் சந்திப்பிலும் நமக்கு நாமே நம் உணர்வுகளை கூர் தீட்டிக் கொள்கிறோம்.

மத விழாக்களும் மூடநம்பிக்கை சடங்குகளையும் முற்றாகப் புறந்தள்ளி, புதிய சமூகத்துக்கான பாதை அமைக்க களத்தில் நிற்கும் பெரியாரியலாளர்களுக்கு இந்த மாநாடுகளும் ஒன்று கூடல்களும்தான் நமக்கான சமுதாய விழா!

ஈரோடு நோக்கி திரளுவோம்; தமிழகத்தைச் சூழ்ந்து நிற்கும் மதவாத ஜாதிய பார்ப்பன பாசிசத்தை முறியடிக்க தமிழர்களின் இளைஞர் சக்தி தயாராகவே இருக்கிறது என்பதை உணர்த்திக் காட்டுவோம்!

வாருங்கள், தோழர்களே!