உலக முதல் மொழியாக நிறுவப்பட்டு வரும் உயர்தனிச் செம்மொழி நம் தமிழ் மொழியாகும்.  ஆதி மனிதன் பேசிய முதல் மொழியாகக் கருதப்படும் தமிழ் மொழியின் இலக்கணம், உயிரினங்களை ஆறு வகைகளாகப் பிரிக்கிறது.  அவையாவன:

ஓரறிவுயிர் – தொடு உணர்வைக் கொண்டவை – மெய்

ஈரறிவுயிர் – மெய் + வாய்

மூவறிவுயிர் – மெய் + வாய் + மூக்கு

நாலறிவுயிர் – மெய் + வாய் + மூக்கு + கண்

ஐந்தறிவுயிர் – மெய் + வாய் + மூக்கு + கண் + செவி

ஆறறிவுயிர் – மேற்கண்ட ஐந்து அறிவுடன் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு.

உயிரின் இயல்பு உணர்தல்.  உணர்வின் வெளிப்பாடு அறிவு என்னும் அடிப்படையில் இவ்வகைப்பாடு அமைந்துள்ளது.  தமிழ் இலக்கணம் உயிருள்ளவற்றை ஆறாவது அறிவின் அடிப்படையில் உயர்திணை, அஃறிணை என இரண்டாகப் பிரிக்கிறது.

உயிரினங்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்ட அறிஞர் தார்வின், உலகில் உள்ள பொருட்களை உயிரற்ற பொருட்கள், உயிருள்ள பொருட்கள் என இரண்டாகப் பிரித்தாரே தவிர, ஆறாவது அறிவு பற்றிக் குறிப்பிடவில்லை.  ஏனெனில் முதல் ஐந்து அறிவில் ஒவ்வோர் அறிவிற்கும் ஓர் உறுப்பு இருக்கிறது.  ஆறாவது அறிவுக்கு உறுப்பு புலனாவதில்லை.  எனவே ஆறாவது அறிவுக்கு எனத் தனியாக உறுப்பு இல்லாததால், ஆறாவது அறிவு என்பதை இன்றைய அறிவியல் ஏற்க மறுக்கிறது.  இந்நிலையில் மனிதனுக்கு மட்டுமே இருப்பதாக நம்பப்படும் ஆறாவது அறிவு என்பதை அறிவியல் வழியில் நிலைநாட்டிக் காட்ட முடியுமா?  என்பதைக் குறித்து உலகளாவிய கருத்தரங்கம் நடக்கவிருக்கிறது.  

இடம்: சென்னை பல்கலைக்கழகம்

காலம்: 2011 அக்டோபர் 4,5,6 .

  1. அறிவியல் அறிஞர்களையும் ஆன்மீக அறிஞர்களையும் உலகளாவிய அளவில் அழைத்து, பல்துறை நோக்கில் ஆறாவது அறிவைக் குறித்து உலகளாவிய இக்கருத்தரங்கை நடத்த, சென்னைப் பல்கலைக்கழக மெய்யியல் துறை முன்வந்துள்ளது.
  2. இக்கருத்தரங்கிற்கான நிதியுதவியைச் செய்ய, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் முன்வந்துள்ளது.
  3. இக்கருத்தரங்கில் உலகத்தமிழர் ஆன்மவியல் இயக்கம் தமிழர் ஆன்மவியல் கூறும் ஆறாவது அறிவு பற்றிய கருத்துகளை அறிஞர்கள் முன் எடுத்து வைக்கிறது. இவற்றுடன்
  4. கடவுள் இருக்கிறார் என நம்பும் உலகிலுள்ள ஆத்திக சமயங்களை அழைத்து உலகளாவிய கலந்துரையாடலை நடத்தி வரும் கத்தோலிக்கத் திருச்சபை
  5. கடவுள் இல்லை என நம்பும் நாத்திகர்களை அழைத்து நாத்திகர் உலக மாநாட்டை நடத்தியுள்ள திராவிடர் கழகம்

ஆகிய இரண்டு அமைப்புகளும் சேர்ந்து ஐந்து அமைப்புகள் உலகளாவிய இக்கருத்தரங்கை நடத்தவிருக்கின்றன.

Pin It