தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்டிருக்கும் சீமான், மற்றும் ராஜீவ் மறைவு வழக்கில் தண் டனை அளிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ரவிச்சந்திரன் ஆகியோரை, ஒவியர் வீரசந்தானம், கவிஞர் பாரதி விசயன், மண்மொழி ஆசியர் இராசேந்திர சோழன் ஆகியோர் 21.09.2010 அன்று வேலூர் சிறையில் சந்தித்தனர்.

மாதங்களுக்கு மேலாக சிறைப் பட்டிருக்கும் சீமான் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் மற்ற வர்கள் ஆக அனைவரையும் ஒரு சேரக் காண நேர்ந்தது பல்வேறு மனக் கொந் தளிப்புகளை ஏற்படுத்துவதாக இருந்தது.

வலுவான எந்தச் சான்றாதாரங்களும் அல்லாத அற்பக் காரணங்களுக்காக தங்கள் இளமைக்காலம் முழுமையை யும் சிறையிலே கழித்து, இனியேனும் வெளியே வரமுடியுமா என்பதே கேள் விக் குறியாக எதிர்காலம் பற்றிய நிச்சய மின்றி வாழும் அவர்களைக் காண, இவர்களுக்கு விடிவுதான் எப்போது என்கிற கேள்வி எழாமல் இல்லை.

எல்லோரும் எல்லோரோடும் சிரித்துப் பேசி மகிழ்வாக தென்பட்டா லும், இதயத்தின் எங்கோ ஒரு மூலை யின் ஆழத்தில் புதைந்துள்ள ஒரு சோகம், வெளியுலக மனிதர்கள் போல் நாமும் சுதந்திரமாக வாழ நடமாட வாய்க்கவில்லையே என்கிற துயரம் வெளிப்படாமல் இல்லை.

ராஜீவ் மறைவு சிறையாளர்கள் ஐவரில் சாந்தன் சிறந்த சிறுகதையா சிரியர். ஏற்கெனவே இரண்டு சிறு கதைத் தொகுப்புகள் வெளிவந்துள் ளன. இதேபோல ஒவ்வொருவரும் வாழ்வில் நம்பிக்கையை இழக்காமல் விருப்பார்ந்த துறைகளில் பயின்று பட்டம் பெற்றவர்கள். இவர்கள் அனைவர் பற்றியும் ஏற்கெனவே மண்மொழியில் எழுதியுள்ளோம்.

ராஜீவ் வழக்கு சிறையாளிகளோடு இதுதான் முதல் சந்திப்பு என்பதால், பகிர்ந்துகொள்ள செய்திகள் நிறைய புதைந்து கிடக்க, யாரோடு யார் பேசுவது, யார் பேசுவதை யார் கேட் பது என்பது புரியாமல் அவரவரும் அவரவர் உள்ளக் கிடக்கையைக் கொட்டித் தீர்க்க எல்லாவற்றுக்கும் அவரவரும் திணறலோடு உம் கொட்டிக் கொண்டிருக்க, சீமான் திரா விடக் கருத்தாக்கம் திராவிட இயக்கம் பற்றிய தன் கடுமையான விமர்சனங் களை முன்வைத்£ர்.

ஆரியத்தை எதிர்த்து ஆரியத்தை விழ்த்துகிறேன் என்று மக்களைத் தட்டி எழுப்பிய திராவிடம் ஆரியத்தை விழ்த்தவில்லை. மாறாக ஆரியத்தின் இடத்தில் தான் போய் அமர்ந்து கொண்டது. இப்போது அதுதான் ஆரி யத்தைப் பாதுகாத்து வருகிறது. இந்த மாயையை மக்களிடத்தே அம்பலப் படுத்தி திராவிடக் கருத்தாக்கத்தை வீழ்த்தாமல் தமிழ்த் தேசியத்திற்கு விடிவு இல்லை. விடுதலையும் இல்லை.

எல்லோரும் ஒருமித்த இந்தக் கருத்தில் அவரவர் பங்குக்கும் திராவிட இயக்கத்தின் துரோகங்களைச் சொல்ல பேச்சு தொடர்ந்தது. வெளியே இன் னும் பார்வையாளர்கள் நிறைய பேர் காத்திருப்பதாக சிறைக் காவலர்கள் தெரிவிக்க ‘‘சரி சரி, வெளியே வந்த பிறகு ஒத்த கருத்துடைய அமைப்புகள், உணர்வாளர்களையெல்லாம் ஒன்று கூட்டி இதற்கு என்ன செய்யலாம்” என்று முடிவு செய்து கொள்ளலாம் என்கிற புரிதலோடு ஒருவருக்கொரு வர் கை குலுக்கியும் வணக்கம் தெரி வித்தும் விடை பெற்றது. எவரும் எவரையும் பிரிய மனமில்லாமல் ஓவியர் வீர சந்தனமும், சீமானும், ஒருவரையருவர் ஆரத்தழுவி விடை பெற்றுக் கொண்டது நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது. சீமான் வழக்கைப் பொறுத்தவரை அது ஆய்வு குழுவின் முன் நிற்கப் போவதில்லை, சீமான் தேசியப் பாதுகாப்புச் சட்டத் தின் கீழ் கைது செய்யப்பட்டது செல் லாது என்றே தீர்ப்பளிக்கும் என்று காவல் துறைக்கும் ஆட்சியாளர்களுக் குமே நன்கு தெரிந்திருந்தாலும், பழிவாங்கும் நோக்குடனேயே அரசு அவரை சிறையில் வைத்துள்ளது, எனவே விரைவிலேயே அவர் வெளி யில் வர வாய்ப்புள்ளது.

ராஜீவ் வழக்கு சிறையாளிகளைப் பொறுத்தமட்டில் அவர்களின் எதிர் காலம் இன்னமும் கேள்விக்குரியாகவே உள்ளது. ராஜீவ் வழக்கு என்பது வெறும் குற்றவியல் நடவடிக்கைகள் அதற்கான தண்டனைகள் என்பதைத் தாண்டிய ஓர் அரசியல் வழக்காக ஆக்கப்பட்டு விட்டது. மறைந்தவர் ராஜீவ் காந்தி அல்லாமல் வேறு யாராகவேனும் இருந்திருந்தால், இந்த அளவுக்கு இவர்களுக்கு தண்டனைகளும் சிறை வாழ்க்கையும் தொடருமா என்பது கேள்வியே. மறைந்தது சாதாரண மனிதராயிருந்திருந்தால் ஏற்கெனவே தண்டனைக் குறைப்பு பெற்று அரசால் விடுவிக்கப்பட்ட எத்தனையோ சிறை யாளிகளில் ஒருவராக இவர்களும் வெளியில் வந்திருப்பர். இப்படி அவர்கள் வெளிவர முடியாமல் உள் ளேயே கிடக்க நேர்வதற்குக் காரணம் மறைந்தது ராஜீவ் காந்தி என்பத னாலேயே.

மறைந்து போனவர்களோ உயிரோ டிருப்பவர்களோ எவரானாலும் சட்டத் தின் முன் அனைவரும் சமம் என்னும் போது ராஜிவ் காந்தி மறைவு வழக்கில் மட்டும் இப்படிப் பாரபட்சம் காட் டுவது அநீதியானது, இந்திய அர சமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமைக்கு எதிரானது.

எனவே இந்த நிலையில் நாம் கோர வேண்டியது ராஜீவ் மறைவு வழக்கில் சிறைப்பட்டிருக்கும் அனைவருக்கும் தண்டனைக் குறைப்பு செய்து அவர் களை விடுவிக்கவும் மரண தண் டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அதை வாழ்நாள் தண்டனையாக மாற்றி இருபது ஆண்டுகள் அவர்கள் சிறைப் பட்டிருந்த காலத்தைக் கணக்கில் கொண்டு அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தான்.

சீமானைப் பொறுத்தவரை அவர் எந்தவித நிபந்தனையும் இன்றி விடு தலை செய்யப்பட வேண்டும என்பதை வலியுறுத்த வேண்டும்.

 இது பற்றிய எண்ணங்களோடும் கனத்த சுமையோடும் வெளியே வர, சிறை முகப்புத் திடலில் அணி அணி யாய் இளைஞர்கள் திரள் மதுரையி லிருந்து, கடலூரிலிருந்து, திண்டுக் கல்லில் இருந்து நாம் தமிழர் இயக்கம் சார்ந்தவர்கள், சிறையாளிகளைக் காண காத்திருந்தனர். நீண்ட நேரம் காத் திருந்த சோர்வோ என்னவோ, ‘என் னாங்க இவ்வளோ நேரம்’ என்றனர்.

மற்றவர்கள் நேரத்தையும் சேர்த்து நாம் கூடுதலாக எடுத்துக் கொண் டோமோ என்று ஒரு குற்ற உணர்வு எழ ‘பேசிக்னு இருந்ததுல நேரம் போனதே தெரியல’ என்று அவர் களுக்கு பதிலைச் சொல்லி வெளியே வந்தோம். சிறையிலே இருப்பவர்கள் வெளியே வருவது எப்போது

சீமான் கைதும் நுட்பக் காரணங்களும்

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்பட்டிருந்த சீமான் விடுதலையானது உணர்வாளர் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியே என்றாலும் விடுதலையான தன்மையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சீமான் கைது குறித்து நாம் மண்மொழியில் எழுதும்போது, சீமானின் நடவடிக்கைகள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வராது என வழக்கின் தகுதி அடிப்படையிலேயே சீமானுக்கு விடுதலை வழங்கும் என்று நம்பிக்கையோடு குறிப்பிட்டிருந்தோம். தீர்ப்பை அப்படியேதான் எதிர்பார்த்தோம்.

ஆனால் சீமான் விடுதலை செய்யப்பட்டது வழக்கின் தகுதி அடிப்படையில் அல்ல.  நுட்பக் காரணங்கள் அடிப்படையில். அதாவது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஒருவரைச் சிறைப்படுத்தும் அதிகாரம் மாநகரக் காவல் ஆணையத்துக்குத்தான் உண்டே தவிர துணை ஆணையருக்கு அந்த அதிகாரம் இல்லை.  சீமான் சிறைப்பட்டிருப்பது துணை ஆணையர் ஆணையின் பேரில்.  ஆகவே இது செல்லாது என்று தீர்ப்பளித்தே நீதிமன்றம் சீமானை விடுதலை செய்துள்ளது.

அப்படியானால் இந்த ஆணையை ஆணையர் அளித்திருந்தால் அது செல்லும் என்பதுதானே பொருள்.  அதாவது தமிழக அரசு நினைத்திருந்தால் இதே ஆணையை காவல் ஆணையர் வழி வெளியிட்டு, மீண்டும் சீமானைச் சிறைப்படுத்தி யிருக்கலாம், சிறைப்படுத்த முடியும் என்பதே பொருள்.  தொடர் வம்பு வேண்டாம் என தமிழக அரசு முடிவு செய்திருக்கலாம்.  அது வேறு செய்தி. 

ஆனால் இந்த நுட்பக் காரணங்கள் சார்ந்த குறைகள் நிவர்த்திக்கப்பட்டால் இதே குற்றச்சாட்டுகளின் கீழ் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சீமானைக் கைது செய்தது செல்லும் என்பதே தற்போதுள்ள நிலை.  ஆகவே ஆபத்து எப்போதும் தலைக்குமேல் தொங்குகிறது என்பதே இதன் பொருள்.

இது ஏதோ சீமான் சம்பந்தப்பட்ட செய்தியாக மட்டுமே பார்க்கவேண்டாம்.  உணர்வாளர்கள் ஒவ்வொருவருக்குமான பிரச்சினை இது.  தேர்தல் நெருங்க நெருங்க ஆதிக்க எதிர்ப்பாளர்கள் யார் மீதும் எதுவும் எப்படியும் பாயலாம் என்பதில் நாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.

Pin It