periyar 368முன் காலத்திலிருந்த அரசர்கள் மூடர்களும் அயோக்கியர்களுமாய் இருந்ததால், இம்மாதிரி கோயில் சூழ்ச்சிகளுக்கு அவர்களும் அனுகூலமாயிருந்து வந்திருக்கின்றார்கள்.

சில அரசர்களுக்கு இம்மாதிரியான கோயில் மூலமாகவே ஆட்சியும் அனுகூலமும் ஏற்பட்டிருக்கின்றன. ஆகையால் கோயில்கள் என்பவை, சோம்பேறிக் கூட்டமும், அரசர்களும் சேர்ந்து தங்கள் சுயநலத்திற்காகப் பாமர மக்களை ஏமாற்றுவதற்குச் செய்த சூழ்ச்சியேயாகும். அவ்விதச் சூழ்ச்சியை ஒழிக்கவே யாம் கோயில் பிரவேசம் கேட்கின்றோம்.

(குடிஅரசு  19.05.1932)