இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் இலங்கைக் குடியரசுத் தலைவர் சிங்கள வெறியன் இராசபக்சேயும் செய்து கொண்ட இந்திய - இலங்கை ஒப்பந்தங்களைக் கைவிட வலியுறுத்தி 18.06.2010 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

          கடந்த 2010 சூன் 8ஆம் நாள் இனக்கொலையாளி இராசபட்சே தில்லி வருகையைக் கண்டித்தும், இந்திய அரசு இராசபட்சேயை வரவேற்கக் கூடாது என்று வலியுறுத்தியும் தமிழகமெங்கும் கண்டன இயக்கங்கள் நடைபெற்றன.

          “இனக்கொலையன் இராசபக்சே திரும்பிப்போ” என்று முழங்கி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகமெங்கும் நடைபெற்றன. இதில் அவ்வமைப்பில் உறுப்பு வகிக்கும் கட்சிகளும் இயக்கங்களும் மட்டுமின்றி த.தே.பொ.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் பங்கேற்றன.

          அதே நாளில், நாம் தமிழர் இயக்கம், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், பா.ம.க. மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டன இயக்கங்கள் நடத்தின.

          ஆயினும் தமிழகத்தின் உணர்வுகளைப் புறந்தள்ளி இந்திய அரசு இனக்கொலைக் குற்றவாளி இராசபட்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தது. 9.06.2010 அன்று மன்மோகன் சிங் - இராசபட்சே கூட்டறிக்கையும், இந்திய இலங்கை ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. கையெழுத்திடப்பட்ட ஏழு ஒப்பந்தங்களையும் ஆய்வு செய்தால் இந்திய - சிங்கள ஆரிய கூட்டணி ஈழத்தமிழருக்கு எதிரான ஐந்தாம் கட்டப் போரை புதிய வடிவில் தொடங்கியிருப்பது தெளிவாகும்.

          இந்தியாவும் இலங்கையும் படைப் பரிமாற்றம் செய்து கொள்ளவும், சிங்களப் படைக்கு இந்தியா உயர்தரப் பயிற்சி அளிக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

          இலங்கைக்கு உள்ளிருந்தோ வெளியிலிருந்தோ பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமானால் இந்தியா படை உதவி செய்யும் என்று உறுதியளிக்கப் பட்டுள்ளது. இலங்கைக்கு எந்த வெளிநாட்டிலிருந்தும் படைவகை அச்சுறுத்தல் இல்லவே இல்லை. எதிர்காலத்தில் ஈழத்தமிழர்களிடையே இருந்து போராட்டம் எழுமானால் அதனை முளையிலேயே படைகொண்டு அழிப்பதற்குத்தான் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்திய இராணுவம் சிங்களப் படைக்கு உயர்தர பயிற்சி அளிப்பதும் இதே நோக்கத்திற்காகத் தான்.

          இன்றும் இலங்கை இராணுவத்தின் பெரும்பகுதி ஈழத்தமிழர் தாயகமான தமிழீழத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. சுமார் 15,000 சதுர கிலோமீட்டர் தமிழீழப் பரப்பில் 2000 சிங்களப் படைமுகாம்கள் நிறுவப்பட் டுள்ளன.

          அங்குள்ள ஈழத்தமிழர்கள் சிங்களப் படையின் துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டுள்ளார்கள். திரும்பிய பக்கமெல்லாம் சிங்களப் படையினர் நிற்கின்றனர்.

          கடந்த 2009 மே 17ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் தாங்கள் ஆயுதங்களை மௌனிக் கிறோம் என்று அறிவித்துவிட்ட பிறகு, விடுதலைப்புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என்று இராசபட்சே வெற்றிவிழா கொண்டாடியதற்கு பிறகு, இந்திய - இலங்கை படைப்பயிற்சி ஒப்பந்தம் எதற்காக? இந்திய சிங்கள கூட்டணி ஈழத் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை ஒருதலை பட்சமாக தொடர்கிறது என்பதற்கான சான்றே படைப்பயிற்சி ஒப்பந்தம் ஆகும்.

          சிங்களக் காவல் துறை யினர்க்கு இந்தியாவில் உயர்தர பயிற்சி அளிப்பதற்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சிங்களக் காவல் துறையின் தமிழின அடக்கு முறையில் இந்தியா நெருக்கமாக பங்காற்றுவதை அதிகரிக்கவே இந்த ஒப்பந்தம்.

          ஏற்கெனவே இராடார் கொடுத்தும், புலிகளின் நடமாட்டம் குறித்த செயற்கைக்கோள் தகவல் களை வழங்கியும், கடற்பரப்பில் காவல் கண் காணிப்பில் ஈடுபட்டும் சிங்கள ஆக்கிரமிப்பிற்கு துணை செய்த இந்தியா அது போதாதென்று செயற்கைக் கோள் தகவல் மையம் ஒன்றை இலங்கையில் நிறுவ ஒப்பந்தம் செய்துள்ளது.

          பலாலி படைத்துறை விமான தளத்தை செப்பனிட்டு கொடுத்து ஈழத்தமிழர் மீதான் வான் தாக்குதலுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த இந்திய அரசு, இப்போது மேலும் அந்த படை விமான தளத்தை மேம்படுத்தி கொடுக்கும் என்றும் இன்னொரு ஒப்பந்தம் கூறுகிறது. போர்த் தயாரிப்பு தொடர்வதையே இது எடுத்துக் காட்டுகிறது.

          யாழ்ப்பாணத்திலும், அம் பன் தோட்டாவிலும் இந்தியாவின் துணைத் தூதரகங்கள் நிறுவப் படும் என்ற இன்னொரு ஒப்பந்தம் கூறுகிறது. சின்னஞ்சிறிய இலங்கைத் தீவில் மூன்று தூதரக அலுவலகங்கள் ஏன்? ஒவ்வொரு நாட்டிலும் இயங்கும் தூதரகங்கள் அவை நிறுவப்பட்டுள்ள நாடுகளில் உளவு வேலை பார்ப்பது உலகறிந்த செய்தி. தங்கள் தங்கள் நாட்டிற்கு உளவு பார்ப்பது தூதரகங்களின் அறிவிக்கப் படாத அடிப்படை பணி.

          அந்த வகையில் யாழ்ப் பாணத்திலும், அம்பன் தோட்டா விலும் அமைக்கப்படும் இந்திய துணைத் தூதரகங்கள் ஈழத்தமிழர் களிடையே உளவு பார்க்கும் பணியையே முதன்மையாக நிறை வேற்றும் என்பது திண்ணம். உறுதியான விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுத்து விடாமல் புதிய புதிய ஒட்டுக் குழுக்களை ஏற்படுத்தி சீர்குலைக்கும் ‘திருப் பணி’யை இத்துணை தூதரகங்கள் நிறைவேற்றும்.

          ‘வடக்கில் வசந்தம்’ என்ற பெயரில் ஈழத்தமிழர்களின் விளை நிலங்களை சிங்களர்கள் ஆக்கிரமித்து சாகுபடி செய்ய ஏற்கெனவே இராசபட்சே அரசு செயல் திட்டங்கள் வகுத்துவிட்டது. இந்தியாவின் தேசிய வேளாண் கழகத் தலைவர் எம்.எஸ். சுவாமிநாதன் இந்த ஆக்கிரமிப்புக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். ஏராளமான மானியங்களையும் உதவிகளையும் வழங்கி இந்த சிங்கள ஆக்கிரமிப்பிற்கு இலங்கை அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

          முள்வேலி முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழர்கள் தங்கள் சொந்த ஊரில் வாழ வழியற்று தவிக்கின்றனர். அவர்களுடைய நிலங்களை சிங்களர்கள் கைப்பற்றி சாகுபடி செய்து வருகின்றனர். தமிழர்களது குடியிருப்புகள் ஒன்று தரைமட்டமாக்கப் பட்டுவிட்டன அல்லது படைமுகாம்களாக பயன் படுத்தப்படுகின்றன அல்லது அவர் களது வீடுகளில் சிங்கள படை யாட்களும் சிங்கள குடி மக்களும் குடியேற்றப்பட்டு விட்டனர்.

          இந்த நிலையை உறுதி செய்ய வேளாண்சார் இந்திய இலங்கை ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. இதன்படி இந்திய அரசு இலங்கையில் வேளாண் ஆய்வு மையம் ஒன்றை நிறுவிக் கொ டுக்கும். சிங்களர்களின் ஆக்கிரமிப்பு பண் ணைகளுக்கு இந்த மையம் பணியாற்றும் என்பது தெளிவு.

          ரூ. 4000 கோடி செலவில் இலங்கையில் தொடர்வண்டி பாதை அமைத்துத் தருவதற்கும் ரூ. 1000 கோடி செலவில் கடல்வழி கம்பி அமைத்து 500 மெகா வாட் மின்சாரம் வழங்கவும் இந்திய அரசு முன்வந்துள்ளது.

          அணுக் கதிரியக்கத்தின் அனைத்து பாதிப்புகளையும் தமிழர்கள் மீது சுமத்திவிட்டு கூடங்குளத்தில் சூலை மாதத்தி லிருந்து உற்பத்தியாக இருக்கிற அணு மின்சாரத்தை சிங்களனுக்கு வழங்குவதற்கு வழியேற்படுத்தப் பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின்சாரத்தில் தடங்கல் ஏற்படு மானால் நெய்வேலி மின்சாரத்தை அனுப்பவும் இந்திய அரசு தயங்காது. மதுரை தொகுப்பு நிலையத் திலிருந்து(எகீஐஈ) மின்சாரம் எடுத்து சென்று இராமேசுவரத் திலிருந்து அமைக்கப் படவுள்ள கடலடி கம்பிகள் வழி இலங்கைக்கு தமிழக மின்சாரம் எடுத்துச் செல்லப்படும்.

          ஏற்கெனவே தமிழகத்தின் தண்ணீர் உரிமையை மறுத்து வருகிற கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகியவற்றுக்கு தமிழக மின்சாரத்தை எடுத்துக் கொடுத்தது போதாதென்று, ஈழத்தமிழர்களை இனக்கொலை செய்த சிங்களனுக்கும் தமிழக மின்சாரம் வழங்கப்பட இருக்கிறது. தமிழ்நாடு மின்வெட்டில் அவதிப் படுவது குறித்து தில்லி வல் லாட்சிக்கு எந்த கவலையுமில்லை.

          பண்பாட்டுப் பரிமாற்றம் என்ற பெயரால் ஈழத்தமிழர் தாயகத்தை சிங்கள - பௌத்தமய மாக்குவதற்கும் போதை பண் பாட்டில் ஈழத்தமிழ் இளைஞர்களை சிதறடிப்பதற்கும் இன்னொரு ஒப் பந்தம் வழி செய்கிறது. ஏற்கெனவே தமிழர் என்ற தனி அடையாளமோ தமிழர் தாயகம் என்ற வரலாற்று நிலமோ எதுவும் இல்லை, எல்லோரும் இலங்கையர் தான், இலங்கை தீவு முழுவதும் சிங்கள பெரும்பான்மைக்கு உரியது தான் என்று இராசபட்சே கும்பல் கொக்கரித்து வருகிறது. தமிழீழ நகரங்களும், கிராமங்களும், வீதி களும் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது. ஊர்கள், தெருக்கள் ஆகியவற்றின் தமிழ்ப் பெயர்கள் சிங்கள மொழியில் மாற்றப்பட்டு வருகின்றன. வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஆலயங்கள் உள்ளிட்ட சைவ வழிபாட்டு இடங்கள், கிறித்துவ தேவாலயங்கள் சிதைக்கப்பட்டு ஆங்காங்கே புத்த கோயில்கள் முளைக்கின்றன.

          இதனை உறுதி செய்யவே பண்பாட்டு பரிமாற்ற ஒப்பந்தம் செயல்படும். இதுமட்டுமின்றி உடலும் உள்ளமும் சோர்ந்து போயுள்ள ஈழத்தமிழர்களிடையே போதைப் பண்பாட்டைப் பரப்பி அவர்களை உருக்குலைக்கவும் திட்டமிட்ட சதி இந்த ஒப்பந்தத்தின் வழியாக அரங்கேறுகிறது.

          போரினால் விதவைகளாகி யுள்ள சிங்கள பெண்கள் - குறிப்பாக உயிரிழந்த சிங்கள படையாட்களின் மனைவிமார்கள் மறுவாழ்விற்காக இந்தியா நிதி உதவி வழங்கும் என்று இன்னொரு ஒப்பந்தம் கூறுகிறது.

          வழக்கில் தேடப்படும் குற்ற வாளிகளை இந்தியாவும் இலங்கை யும் பரிமாறிக் கொள்ளும் என்று ஒரு ஒப்பந்தம் கூறுகிறது. இது கையெ ழுத்திடப்படுகிற போது இராசபட்சே அருகில் அமைச்சர் என்ற அந்தஸ் தோடு டக்ளஸ் தேவானந்தா நின்று கொண்டிருக்கிறார். மன்மோகன் சிங்கோடு கைகுலுக்குகிறார். இந்த டக்ளஸ், கொலை மற்றும் குழந்தை கடத்தல் வழக்கில் சென்னையில் தேடப்படும் குற்றவாளி ஆவார். இந்த ஒப்பந்தம் டக்ளசுக்கு பொருந்தாது என்பதையே தில்லி அரசின் செயல் எடுத்துக்காட்டுகிறது. குற்றச்சாட்டுகளின் பெயரால் செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் இளைஞர்களை சிங்கள வதைமுகாம்களுக்கு அனுப் புவதற்கே இந்த ஒப்பந்தம் பயன் படும்.

          ஈழத்தமிழர்களுக்கு எதிரான அனைத்துத் திட்டங்களும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன. அதே நேரம் ஈழத்தமிழர்களுக்கு சற்றேனும் கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கோ அவர்களது வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கோ எந்த ஏற்பாடும் இல்லை.

          தமிழக முதலமைச்சர் கருணாநிதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியும் தனது கூட்டணி கட்சி களின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் இராசபட்சேவை சந்திக்க வைத்தும் கபட நாடகத்தை அரங்கேற்றினார். அதனால் தமிழர்க்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

          உயர்மட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு மன்மோகன் சிங் கும் இராசபட்சேயும் வெளியிட்ட கூட்ட றிக்கையும் கூட தமிழ ருக்கு ஆதரவான எந்த வாக்குறுதியும் வழங்க வில்லை.

          சொத்தையான இராஜீவ்- ஜெய வர்த்தனா ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்த 13ஆவது சட்டத் திருத் தத்தை நிறைவேற்றி இலங்கைத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று மன்மோகன் சிங் மேற்கண்ட கூட்ட றிக்கையில் கோரிக்கை வைத்தார். அதைக்கூட இராசபட்சே ஏற்க வில்லை. பெரும்பான்மை சிங்களர் கள் ஏற்காத எந்த சட்டத்திருத் தத்தையும் ஏற்பதற்கில்லை என்று கைவிரிக்கிறார்.

          மொத்தத்தில் இந்திய - சிங்கள இனவெறி கூட்டணி தங்களது தமிழின அழிப்புப் போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி யுள்ளதையே மன்மோகன் சிங் - இராசபட்சே ஒப்பந்தம் எடுத்துக் காட்டுகிறது.

          ஈழத்தமிழர்களை உருக் குலைக்கும் இந்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தஞ்சையில் 12, 13.06.2010 அன்று கூடிய த.தே.பொ.க. பொதுக்குழு தீர்மானித்தது. அத னடிப்படையில் 18.06.2010 அன்று பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியோடு நடந்தன. 

சென்னை

          சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் 18.06.2010 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம் தலைமை தாங்கினார். இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் தோழர் க.அருண பாரதி, வழக்கறிஞர் இளவரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திரளான தோழர்கள் இதில் கலந்து கொண்டு, ஒப்பந்தத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

காட்டுமன்னார் கோயில்

          கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோயிலில் காலை 10.30 மணிக்கு பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப் பாட்டத்திற்கு, த.தே.பொ.க. கிளைச் செயலாளர் சிவ.அருளமுதன் தலைமை தாங்கினார். கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் கண்டன உரையாற் றினார். ஒப்பந்தத்தின் தமிழர் விரோதத் தன்மையை விளக்கி த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட் ராமன் கண்டன உரையாற்றினார். நிறைவில் தோழர் கி.அழகர்சாமி நன்றி நவின்றார். 

திருத்துறைப்பூண்டி

          திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் அருகில் நடந்த, ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் இ.தனஞ்செயன் தலைமை தாங்கி னார். மூத்த தோழர் இரா. கோவிந்தசாமி கண்டன உரை யாற்றினர். த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இரா சேந்திரன் கண்டன உரை நிகழ்த்தி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். 

தஞ்சை

          18.06.10 மாலை 5 மணிக்கு தஞ்சை ரயிலடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. நகரச் செயலாளர் இராசு. முனியாண்டி தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செய லாளர் நா. வை கறை கண்டன உரையாற்றினார். ஒப்பந்தத் தை அம்பலப் படுத்தி, த.தே. பொ.க. பொதுச் செய லாளர் தோழர் பெ.மணியரசன் கண்டன உரை யாற்றினார். 

          முதலில் அனுமதி வழங்கியும், பின்னர் அனுமதி மறுத்தும் கடைசியில் ஆர்ப் பாட்டத் தன்று மதியம் அனுமதி வழங்கு வதாகவும் அறிவித்து காவல்துறை குழப்பிய போதிலும், ஆவேசத் தோடு திரளாகத் தோழர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

மதுரை

          மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. மதுரைச் செயலாளர் தோழர் ரெ.இராசு தலைமை தாங்கினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ஆனந்தன், சித்திரை தானி ஓட்டுநர் சங்கச் செயலாளர் தோழர் இராசேந்திரன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். 

திருச்செந்தூர்

          திருச்செந்தூரில் 21.06.2010 அன்று தேரடியில், த.தே.பொ.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு குறும்பூர் கிளைச் செயலாளர் தோழர் மு.தமிழ்மணி தலைமை தாங்கினார். திரளான உணர்வாளர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட் டத்தில், தோழர் உ.ஞானசேகரன் (த.தே. பொ.க.), திரு. துரைஅரிமா (தமிழர் தேசிய இயக்கம்), திரு. பி.மி.தமிழ்மாந்தன்(த.ஓ.வி.இ.), திரு. சு.க.மகாதேவன்(நாம் தமிழர்), திரு நல்லூர் கருப்பசாமி பாண்டியன் (ம.தி.மு.க.), திரு கல்லை க. பெருமாள் (தமிழக உழவர் முன்னணி), திரு மு.இராசரத்தினம் (த.உ.மு.), திரு வெண் இளங்குமரன் (உ.ம.வி.இ.) ஆகியோர் கண்டன உரையாற்றினர். தோழர் உச்சிராஜா நன்றி கூறினார். 

          செங்கிப்பட்டி, பெண்ணாடம், ஓசூர், திருச்சி ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. அங்கு வேறு நாட்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

Pin It