2.4.2011 சனிக் கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு சேலம் விசயராகவாச்சாரியார் அரங்கத்தில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் சேலம் மக்கள் குழு சார்பாக டந அயளாயடந (தீ பந்தம் ஏந்திய பெண்) என்ற நாடகம் நடைபெற்றது. ஓஜோஸ் என்ற இளம்பெண் ஒருவர், இந் நிகழ்ச்சியை தனி ஒருவராக நிகழ்த்திக் காட்டினார். சிவிக் சந்திரன் என்பவர் மலையாளத்தில் நடத்திய இந்நிகழ்ச்சியை, ஓஜோஸ் ஆங்கிலத்தில் பல நகரங்களில் நடத்தி வருகிறார். ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறக் கோரி சுமார் பத்து ஆண்டுகளாக உண்ணாநிலையிலிருந்து போராடும் கவிஞர் இரோம் சர்மிளா சாணு என்பவரை கதாபாத்திரமாக்கி அவரது வரலாற்றை சித்தரிக்கும் நாடகம் இது.  மணிப்பூரின் வரலாறு, மணிப்பூரில் தொடரும் அவலங்கள், யகளயீய (ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 1958) சட்டத்தின் முறைகேடுகள் ஆகியவற்றை விளக்கும் இந்நாடகம் சுமார் 45 நிமிடம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி இந்நிகழ்வில் பார்வையாளராக கலந்து கொண்டார்.