•                     இலங்கையில் தமிழினப் படுகொலையை சிங்கள அரசு செய்த காலங்களில் - அந்த அரசுக்கு தகவல் தொடர்பு பரிமாற்றங்களுக்கு உதவியது - ‘ஏர் டெல்’ அலைபேசி நிறுவனம். 

•                     ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்களை மறைக்கவும், ‘ஏர் டெல்’ சேவை செய்கிறது. இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை இந்திய தொழில் வணிகக் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) கொழும்பில் முன்னின்று நடத்தியது. இலங்கையில் மனித உரிமை மீறல்களோ, இனப் படுகொலைகளோ ஏதும் நிகழ்ந்துவிடவில்லை என்று, உலகை ஏமாற்றுவதற்காக நடத்தப்பட்டது தான் இந்த விழா. இதை நடத்திய ஃபிக்கி அமைப்பின் தலைவர் ராஜன் பார்த்தி என்பவர்தான் ‘ஏர் டெல்’ நிறுவனத்தின் உரிமையாளர்.

 •                     இலங்கை இப்போது புதிய பூமியாகிவிட்டதாகவும், அந்நிய முதலீட்டுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ள நாடு என்றும் விளம்பரம் செய்து ராஜபக்சே அரசை காப்பாற்றத் துடிக்கும் நிறுவனம் ‘ஏர்-டெல்’. 

•                     இந்த ‘ஏர்டெல்’ நிறுவனம் தமிழ்நாட்டில் தமிழர்களின் வர்த்தக சந்தையில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு, ஈழத் தமிழர் இனப் படுகொலை செய்த ‘போர்க் குற்ற’ அரசை முட்டுக் கொடுத்து காப்பாற்றத் துடிக்கிறது. 

•                     ‘ஏர்டெல்’ நிறுவனத்துக்கு பாடம் புகட்டுவது உணர்வுள்ள தமிழ் மக்களின் கடமை.

தமிழர்களே! தமிழகத்தில் ‘ஏர் டெல்’ சேவையைப் புறக்கணிப்போம்;தமிழர் என்ற உணர்வை வெளிப்படுத்துவோம்!

சிங்களர்கள் வெளியேற்றம் - கோவையில் கழகப் போராட்டம் வெற்றி 

இலங்கையில் இனப்படு கொலை செய்து லட்சக் கணக்கான தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசை சர்வதேச போர் குற்றவாளி என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அதை விசாரிக்க குழு அனுப்பியது. அந்தக் குழுவுக்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. 

தொடர்ந்து தமிழக மீனவர் களை சிங்கள கடற்படை சுட்டுக் கொன்று குவிக்கிறது. இந்த நிலையில் விளையாட்டு என்ற பெயரில் சிங்களவர்கள் தமிழ் நாட்டில் உலா வருவதை தமிழர்களால் சகித்துக் கொள்ள முடியாது. 

உலக தமிழ் செம்மொழி மாநாடு நடந்த கோவை கொடிசியா வளாகத்தில் தனியார் நடத்தும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் சில சிங்களவர்கள் பங்கேற்கிறார்கள் என்ற செய்தியை அறிந்து, அவர்களை அரசு வெளியேற்ற வேண்டும் இல்லாவிட்டால், 10.7.2010சனிக் கிழமை காலை 10 மணிக்கு கொடிசியா அரங்கு முன் ஆர்ப் பாட்டம் நடத்தும் என்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் அறிவித்தார். 

பெரியார் திராவிடர் கழகம் போராட்டம் அறிவித்தவுடன் போட்டியில் பங்கேற்க வந்த இலங்கை போட்டியாளர்கள் யுவன் திசநாயக, நிதின் திசநாயக ஆகியோரை காவல்துறை கொடிசியா வளாகத்திலிருந்து வெளியேற்றியது. 

கழகத்தின் முயற்சி வெற்றி பெற்றது. பெரியார் திராவிடர் கழகம் போராட்டத்தைத் திரும்பப் பெற்றது.