aungsan suu kyiஉலகில் அதிகமான பெளத்த விகாரைகள், அதைவிட நாட்டின் ஜனத்தொகையில் அதிக பெளத்தத் துறவிகள், நம் இலங்கை நாட்டைப் போன்று தேரவாத பெளத்தம், ஆசியாவில் அதிக அரிசி உற்பத்தியில் உச்சம் தொட்ட நாடு, அறுபதுகளில் ஒரு பணக்கார நாடு… இப்படியிருந்த நாடு இன்று மிகவும் வறிய நாடுகளின் பட்டியலுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த நாடு பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்தது. ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் சுபாஷ் சந்திரபோஷ் அவர்களைப் போன்று ஜப்பானின் ஆதரவுடன் ஆங்சாங் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியை ஏற்படுத்தினார். அவர் இன்று கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூச்சியின் அப்பா.

ஆங்சாங்கின் தொடர் போராட்டம் காரணமாக பிரிட்டிஷ் அரசு சுதந்திரம் வழங்க முன்வந்தது. அப்போது 48களில் முதலாவது தேர்தலில் ஆங்சாங் 98 வீதமான ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்தார். அவரது ஆட்சி ஆறு மாதங்கள் மட்டுமே நீடித்தது எதிர்க்கட்சியின் சதியின் மூலம் அவர் உட்பட அவரது அமைச்சரவையில் பலரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுமார் ஐம்பது ஆண்டுக் காலம் இராணுவத்தின் இரும்புக் கரங்களில் இருந்த அந்த நாடு மீண்டும் ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்த காலம் சுமார் ஆறு வருடங்கள் மட்டுமே. இரும்புப் பெண்மணியாகக் கருதப்படும் ஆங்சாங் சூச்சி அந்த நாட்டின் ஜனாதிபதியாக முடியாது.

காரணம் அவர் திருமணம் செய்தது ஒரு ஆங்கிலேயரை என்பதே. முழுமையான பெளத்தப் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் மட்டுமே அந்த நாட்டை ஆள முடியும். இன்று இராணுவத்தின் அடக்குமுறையில் சுமார் ஐந்தாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் (இது இராணுவக் கணக்கு). இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில் ஜனநாயகக் காவலர்களாக மக்கள் இருக்க வேண்டுமே ஒழிய இராணுவமல்ல. பாதுகாப்புப் படை என்பது எல்லைக் காவலர்கள், அவ்வளவுதான்.

குறிப்பு: பர்மிய இராணுவ ஆட்சிக்குப் பின்னணியில் சீனாவின் ஆசிர்வாதம் இருப்பது இன்னொரு கதை.

- வரதன் கிருஸ்ணா