இந்தியாவில் ஏகாதிபத்திய அரசாங்க அமைப்புமுறை 1833 ஆம் ஆண்டில் தொடங்கியது.

அதை நிறுவுவதற்கு நாடாளுமன்றத்தைத் தூண்டிய இரு முக்கிய நோக்கங்களில், ஒன்று, நீதித்துறை மற்றும் காவல்துறை அமைப்புகளில் நிலவிய பலவகைத் தன்மையை மாற்றி அதை ஒரே மாதிரியான அமைப்பாக, கூடுமானவரை இந்தியா முழுவதற்கும் ஒரு பொதுவான அமைப்பாக அதை வகைப்படுத்தி ஒழுங்குபடுத்துவதாகும். அச்சமயத்தில் நடப்பிலிருந்த அமைப்பின்படி, இத்தகைய பலவகைத்தன்மை இன்றியமையாததாக இருந்தது.

ambedkar 361ஏனெனில், சிவில் மற்றும் ராணுவ அரசாங்கம் மட்டுமின்றி வங்காளம் (13 ஜியோ 111சி 63 எஸ் 36), மதராஸ் (39, 4 ஜியோ 40. 111சி 79 எஸ் 11), பம்பாய் (47 ஜியோ, 111 செஸ் 2சி 68 எஸ்) ஆகிய மாகாணங்கள் ஒவ்வொன்றின் வருவாய்களுக்கும் உத்தரவிட்டு நிர்வகிக்கும் பொறுப்பு கவுன்சிலில் உள்ள சம்பந்தப்பட்ட கவர்னர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு கவர்னரும் தனித்தனியாக அவரது கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசங்களில் சிறந்த ஒழுங்கிற்கும், சிவில் அரசாங்கத்திற்கும் தேவையான விதிகளையும், அவசரச் சட்டங்களையும், விதிமுறைகளையும் வகுத்து அமல்செய்யும் அதிகாரம் பெற்றிருந்தனர்.

ஆனால், அவை பிரிட்டிஷ் அரசின் சட்டதிட்டங்களுக்கு விரோதமாக இல்லாமல் நேர்மையானவையாகவும் நியாயமானவையாவும் இருக்க வேண்டும். இந்த அதிகாரிகள் பிறப்பிக்கும் சட்டவிதிகள், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கிலேயச்சட்டம் முழுவதுடனும் 1726 இல் முதலாம் ஜார்ஜின் சாசனத்துடனும், நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்பட்ட தேதிக்குப்பின்னர் இயற்றப்பட்ட இது ஆங்கிலேயச் சட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும்.

சட்டத்தின் இத்தகைய ஒரு பரவலான அமைப்பை நிர்வகிக்கும் பணி அதிகக் குழப்பம் நிறைந்ததாக இருந்ததனால் கல்கத்தாவின் உச்சநீதிமன்றம் பின்வரும் கருத்தைக் கூறியது:

“தனி மனிதர்களின் விவாதத்திற்குரிய எந்த ஒரு உரிமையின் மீதும் எந்த ஒரு தனிநபரும் கருத்துக் கூறவோ அல்லது ஒரு மதிப்பீட்டை உருவாக்கவோ முடியாது. அதை மதித்து, மறுத்துக்கூற விரும்பும் எவரும் சந்தேகத்தைக் கிளப்பவோ குழப்பத்தை ஏற்படுத்தவோ கூடாது. ஏனெனில், பதவியில், வீட்டில் உள்ள பொதுமக்கள் அல்லது நபர்களில் ஒரு சிலர், சட்டத்துறை அலுவலர்களும் கூட, இந்தியச் சட்ட அமைப்பைப் பற்றி ஒரு சர்வாம்சமான, தெளிவான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பர் என்று எதிர்பார்க்க முடியாது. அந்த அமைப்பின் மீதமுள்ள பகுதிகளின் மீது, ஒவ்வொரு பகுதியின் முக்கியத்துவத்தையும் தயாராக, பிரபலமாக அறிந்து கொள்ள முடியாது”.(ஹெர்பர்ட் கோவெல்லின்நீதிமன்றங்களின் அரசியல் சட்ட வரலாறும் இந்தியாவில்ல சட்டமன்ற அதிகாரமும்என்ற நூலிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. –கல்கத்தா)

மற்றொரு நோக்கம், இந்த நாட்டில் குடியேறியுள்ள ஐரோப்பியர்களுக்குப் பயனுள்ள விதத்தில் பாடுபடுவதற்கு ஒரு வலுவான மத்திய அரசாங்கத்தை உருவாக்குவதேயாகும். கூட்டத்தின் நிச்சயமற்ற தன்மைகளின் கீழ் இந்த நாட்டுமக்கள் துன்புற்றனர் எனில், பிரிட்டிஷ் மக்கள் மிக மோசமான கட்டுப்பாடுகளுக்குட்பட்டு வாழ்ந்து வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயர்கள் பின்பற்றிவந்த அடக்குமுறைகள் பற்றிய வெளிப்பாடுகள், கிழக்கிந்தியக் கம்பெனியின் விவகாரங்களை விசாரிப்பதற்காக 1771 இல் காமன்ஸ் சபை நியமித்த ரகசியக் கமிட்டியின் அறிக்கையில் அடங்கியிருந்தன. அதைத் தொடர்ந்து இந்தியாவில் தனிப்பட்ட பிரிட்டிஷ் பிரஜைகள் நுழைவதையும் குடியேறுவதையும் கட்டுப்படுத்தும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன.

ஐரோப்பாவில் பிறந்த எந்த ஒரு பிரிட்டிஷ் பிரஜையும், ஏதேனும் ஒரு முக்கியக் குடியேற்றத்திலிருந்து 10 மைல்களுக்கு அப்பால் குடியிருக்க அனுமதிக்கப்படவில்லை. அதுவும் கம்பெனியிலிருந்து அல்லது இந்தியாவின் கவர்னர் ஜெனரலிடமிருந்து அல்லது சம்பந்தப்பட்ட முக்கியக் குடியேற்றத்தின் கவர்னரிடமிருந்து முன்கூட்டியே பெறப்பட்ட சிறப்பு லைசென்ஸ் இன்றிக் குடியிருக்க முடியாது.(33ஜியோ III, சி.58.எஸ்98). கட்டுப்பாட்டு வாரியத்தின் (மேலது, எஸ்,38) ஆணைக்கு உட்பட்டுக் கம்பெனியின் இயக்குநர்கள் மன்றம், இத்தகைய லைசென்ஸ்களை (மேலது, எஸ்,33) வழங்க மறுக்கும் அதிகாரத்தைப்  பெற்றிருந்தன. இந்தியாவிலுள்ள அரசாங்கங்களும் கூட தங்களுடைய சொந்த அதிகாரங்களைக் கொண்டு பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு விசேடச் சூழ்நிலைகளில் (மேலது, எஸ்,37) தவிரக் குடியிருக்கும் உரிமையை வழங்கக்கூடாது என்று கோரப்பட்டிருந்தன.

செல்லுபடியாகக் கூடிய லைசென்ஸ்களையும் கூட, அவை நியாயமென்று கருதினால் செல்லுபடியாகாது (53 ஜியோ. III, சி,155, எஸ்,36) என்று அறிவிக்கவும் அதிகாரம் பெற்றிருந்தன. போலி லைசென்ஸ்களைத் தயாரித்தல், (மேலது, எஸ்,120) லைசென்ஸ் இன்றிக் குடியேறுதல் (33 ஜியோ, III,சி 52, எஸ் 131) ஆகியவை அபராதம் அல்லது சிறை தண்டனைக்குரிய குற்றங்களாக ஆக்கப்பட்டன. அரசாங்கச் சேவையிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது பதவி விலகியவர்கள், தங்களுடைய குடியிருப்புக் காலம் முடிந்த பின்னர் பத்து மைல் வரையறைக்கு அப்பால் நடமாடிக் கொண்டிருந்தால், கள்ளத்தனமாக வர்த்தகம் செய்பவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டனர் (மேலது, எஸ்,134) லைசென்ஸ் பெறாத பிரிட்டிஷ் பிரஜைகள் (53 ஜியோ, III சி, 155எஸ், 104) நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்(மேலது, எஸ்.108).

லைசென்ஸ் பெற்றவர்கள் அவர்கள் குடியிருக்கும் மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தில் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கோரப்பட்டனர் (மேலது, எஸ், 35) உள்ளாட்சி அரசாங்கத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவர்கள், பிரிட்டிஷ் இந்தியாவில் (24 ஜியோ, III,சி.25, எஸ்.44) அல்லது சுதேச மாநிலங்களில் (26 ஜியோ, III, சி.57,எஸ்.67) புரியும் எல்லாவிதச், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும், இந்தியாவிலும் அதே போன்று கிரேட் பிரிட்டனிலும் நடப்பிலுள்ள சட்டத்தின்படி நடக்கக் கடமைப்பட்டிருந்தனர். சிக்கல்களை ஏற்படுத்தாத அளவுக்கு அவர்களைச் செயலிழக்கச்  செய்வதற்காகப், பணம் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதற்கும், உள்ளூர் மன்னர்களை (37 ஜியோ, IIIசி. 142,எஸ்.28) ஊக்குவிப்பதிலும், அல்லது வெளிநாட்டுக் கம்பெனிகளின் அல்லது ஐரோப்பிய அன்னிய வர்த்தகர்கள் வளருவதற்கு உதவி செய்வதற்கும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதேபோல, உள்ளூர் மக்களை அவர்களுடைய அடக்கு முறையிலிருந்து பாதுகாப்பதற்காக உள்ளூர் மக்களுக்கு ஆண்டுக்கு 12% வட்டிக்கு அதிகமாகப் பணம் கொடுப்பதிலிருந்து அவர்கள் தடை செய்யப்பட்டிருந்தனர். அதில் ஏற்படும் ஒவ்வொரு தவறுக்கும் கடன் தொகையின் மதிப்பைப்போல (13 ஜியோ, IIIசி. 63, எஸ்.30) மூன்று மடங்குத் தொகையைத் தண்டனையாக அவர்கள் இழக்க நேரிடும். தாக்குதல் அல்லது அத்துமீறல் (53 ஜியோ, IIIசி. 155, எஸ்.185) மற்றும் உள்ளூர் மக்களுக்குத் தர வேண்டிய சிறுகடன்கள் (மேலது, எஸ்.86) போன்ற விஷயத்தில் அவர்கள் சமாதான நீதிபதிகளின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டனர். மேலும் ஐரோப்பாவில் பிறந்த ஒவ்வொரு பிரிட்டிஷ் பிரஜையும் தமது மாவட்ட அலுவலகத்தில், தமது உள்ளூர்ப் பணியாட்கள், ஏஜென்ட்டுகள், பங்குதாரர்கள் (21, ஜியோ, IIIசி. 70, எஸ்.13) ஆகியோர்களின் பெயர் மற்றும் இதர விவரங்களைப் பதிவு செய்யுமாறு கோரப்பட்டனர். அவ்வாறு செய்யவில்லையெனில், கூட்டு நிறுவனத்தைத் தொடங்கியதன் காரணமாகப் பெறும் உரிமையை இழக்க நேரிடும் அல்லது மாகாணங்களுக்குள் (மேலது, எஸ் 16) உள்ள எந்த ஒரு நீதிமன்றத்திலும் தொடுக்கப்படும் வழக்குகளின் மூலம் அவ்வாறு திரும்பப் பெற இயலாது.

இந்தக் கட்டுபாடுகளினால் தங்கள் நிலையை எண்ணி ஆளும் இனம் பொறுமை இழந்து காணப்பட்டது. ஆனாலும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இந்திய சாம்ராஜ்யத்தின் ஸ்திரத் தன்மைக்குக் கிஞ்சிற்றும் பாதகம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற காரணத்தினால் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால், காலப்போக்கில் உள்ளூர் மன்னர்கள் மீது பெறப்பட்ட தொடர் வெற்றிகளின் பயனாக இந்திய சாம்ராஜ்யம் நிலைபெற்றபோது, இக்கட்டுப்பாடுகளுக்கெதிராகக் கடும் விமர்சனப் புயல் எழுந்தது. இக்கட்டுப்பாடுகளைக் கண்டு வாளாவிருந்தவர்கள் கூட, இவை காலாவதி ஆகிவிட்டதாகக் கூறினார். காலத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தவறியபோதும் கூட, அப்போது நிலவிய அரசாங்க அமைப்பின் கீழ் ஐரோப்பாவில் பிறந்த பிரிட்டிஷ் பிரஜைகள் சுதந்திரமாக இந்தியாவில் நுழைவதைத் தவிர்க்க முடியாத அளவுக்குப் பாதிக்கும் என்பதை ஒப்புக் கொண்டது. குடியேறுபவர்களை இணக்கமாக நடத்துவதும், அவர்கள் மீது உறுதியின் கட்டுப்பாட்டை விதிப்பதும் அத்தியாவசியமானது என்பதை அது உணர்ந்தது.

சட்டமியற்றுவதற்கும் நிர்வாகம் செய்வதற்கும் சக சமமான, சுதந்திரமான அதிகாரங்களைப் பெற்றிருந்த வெவ்வேறு அரசாங்கங்கள் தமது சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் வெவ்வேறு கண்ணோட்டங்களையும் உறுதியற்ற கோட்பாடுகளையும் கொண்டு நுழையும் குடியேறுபவர்கள் சம்பந்தமாக இந்த அதிகாரங்களைப் பிரயோகிக்கும்போது, அவர்களனைவரும் ஒரே அமைப்பில் ஒன்று திரண்டால் அப்போது அவர்களைச் சமாளிப்பது கடினம் என்பதையும் உணர்ந்த நாடாளுமன்றம் அஞ்சியது.

ஒரே சீரான கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டு இணக்கமாக நடத்துவதைத் தவிர, பிரிட்டிஷ் பிரஜைகள் தாராளமாக நுழையும்போது அது இந்த நாட்டு மக்களின்மீது அடக்குமுறையை மீண்டும் தோற்றுவித்துவிடுமோ என்ற நாடாளுமன்றத்தின் அச்சம் முற்றிலுமாக அகற்றப்படவில்லை. இது திரும்பத் திரும்ப நடை பெறக்கூடும் என்பதை உணர்ந்த நாடாளுமன்றம் அவர்களை ஒரு வலிமையான, ஒரே சீரான மத்தியக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பியது.

அப்போதுதான், தஞ்சமடைந்து விடாதிருக்க முடியும். இவ்வாறு ஒரே சீரான சட்டத்தைக் கொணரும் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தாலும் அல்லது ஒழுங்கைச் சீர்குலைக்கும் நபர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தாலும் பிரிந்துகிடந்த நீதி அமைப்புடன் கூடிய அப்போது இருந்த அரசாங்க அமைப்பு, நாம் கருத்தில் கொண்டுள்ள காரணங்களுக்குப் பொருத்தமற்றதாக இருந்தது. ஒட்டு மொத்தமாக, இந்தியா முழுவதற்கும் ஒரு சர்வ வல்லமையுள்ள சட்டமியற்றும், விவரங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் மத்திய அரசாங்கம்தான் இந்த அவசர நிலைக்கு ஒரே தீர்வு என்று கருதப்பட்டது. அதற்கேற்ப 1833 ஆம் ஆண்டின் பின்வரும் சட்டம் இயற்றப்பட்டது.

“கவுன்சிலில் உள்ள கவர்னர் ஜெனரல், (வங்காளத்தில் உள்ள வில்லியம் கோட்டையில்) மேற்கூறப்பட்ட பிரதேசங்களில் இப்போது நடப்பிலுள்ள அல்லது இனி நடப்பில் இருக்கப்போகிற எந்த ஒரு சட்டத்தையும் அல்லது விதிமுறைகளையும் தள்ளுபடி செய்யவும், திருத்தவும், மாற்றவும் தேவையான சட்டங்களையும் விதிமுறைகளையும் இயற்றும் அதிகாரத்தைக் கொண்டிருப்பார்.

எல்லா நபர்களுக்கும், அவர் பிரிட்டிஷாராக இருந்தாலும் அல்லது இந்நாட்டவராக இருந்தாலும், வெளிநாட்டவராக இருந்தாலும் மற்றவர்களாக இருந்தாலும், எல்லா நீதிமன்றங்களும் அவை மேதகு மன்னரின் சாசனங்களினால் உருவாக்கப்பட்டவையாக இருந்தாலும் அல்லது வேறுவிதமாக அமைக்கப்பட்டவையாக இருந்தாலும், அவற்றின் ஆளுகைக்கும் உட்பட்டவையாக இருந்தாலும், எல்லா இடங்களுக்கும், மேற்கூறப்பட்ட பிரதேசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும், மன்னர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கம்பெனியின் எல்லா ஊழியர்களுக்கும் கம்பெனியின் கூட்டிலுள்ள மாகாணங்களில் உள்ள ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய சட்டங்களையும் விதிமுறைகளையும் இயற்றும் அதிகாரத்தையும் கொண்டிருப்பார்….” (1.பார்க்க : வில் IV, சி, 85 3மற்றும் 4 இன் பிரிவு 43, கிழக்கிந்தியக் கம்பெனியுடனான ஓர் ஏற்பாட்டைச் செயல்படுத்தவும், மேதகு மன்னரின் இந்தியப் பிரதேசங்களைச் சிறந்த முறையில் ஆட்சி புரியவுமான ஒரு சட்டம் பார்க்க.)

இவ்வாறு, கவுன்சிலில்  உள்ள இந்தியாவின் கவர்னர் ஜெனரலுக்குப் பிரத்தியேகமாக சட்டமியற்றும் அதிகாரத்தை வழங்கி ஒரு மத்திய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னர் சட்டத்தின் மூலமாகத் தங்களது சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் சிவில் மற்றும் பம்பாய் மாகாணங்கள் அப்படியே இருந்திருக்குமானால், அது சர்வ வல்லமை படைத்ததாக இருந்திருக்க முடியாது. மாறாக நாடாளுமன்றம் அந்த உரிமைகள் களையப்படாதிருந்திருக்குமானால், இந்த ஆளும் அதிகாரங்களுக்கிடையிலும், புதிதாக உருவாக்கப்பட்ட ஏகபோகச் சட்டமியற்றும் அதிகாரத்திற்கும் இடையிலும் மோதலுக்காக வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும்.

அமைதி, ஒழுங்கு, நல்லாட்சி ஆகியவற்றிற்குப் பொறுப்பேற்றுள்ள மத்திய அரசாங்கம் மாகாண அரசாங்கங்கள் இயற்றிய சட்டங்களின்படி ஆட்சிபுரிய மறுத்திருக்கக்கூடும். புதிதாக ஏற்படுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்பில் உள்ள பலவீனமான அம்சங்களைக் களைவதற்காக, நாடாளுமன்றம் பொறுப்புள்ள அரசாங்கங்கள் என்ற முறையில் இதுவரை உயர் அந்தஸ்தைப் பெற்றுவந்த பம்பாய் மற்றும் மதராஸ் மாகாணங்களிடமிருந்து அந்த அந்தஸ்த்தைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி புதிய அரசியல் கூட்டம் கூறியதாவது:

“……….மாகாணங்கள் ஒவ்வொன்றின் நிர்வாக அரசாங்கமும்….. ஒரு கவர்னராலும் மூன்று கவுன்சிலர்களாலும் (இதற்கு முன்பு இவ்வாறு அல்ல) நிர்வகிக்கப்படவிருந்தது” (வில் IVசி85 3மற்றும்4 இன் பிரிவு 43, கிழக்கிந்தியக் கம்பெனியுடன் ஓர் ஏற்பாட்டைச் செயல்படுத்தவும் மேதகு மன்னரின் இந்தியப் பிரதேசங்களை சிறந்த முறையில் ஆட்சிபுரியுமான ஒரு சட்டம்.)

“அதேசமயம் இந்தியாவிலுள்ள எல்லாப் பிரதேசங்கள் மற்றும் வருவாய்களின் சிவில் மற்றும் இராணுவ அரசாங்கம் முழுவதன் மேற்பார்வை, இயக்கம், கட்டுப்பாடு ஆகியவை கவுன்சிலில் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் என்று அழைக்கப்பட்ட ஒரு கவர்னர் ஜெனரல் மற்றும் கவுன்சிலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.” (அதே நூல், எஸ்.56, பிரிவு 57 இன் மூலம் மாகாணங்களில் உள்ள கவுன்சிலர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அல்லது அவர்களைத் தற்காலிகமாகப் பதவிநீக்கம் செய்யவும்; மாகாணத்திலுள்ள நிர்வாக அரசாங்கத்தை ஒரு கவர்னர் மட்டுமே நடத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டது. பம்பாயிலும் மதராசிலும் நிர்வாகக் கவுன்சிலர்களை முறையே மூன்றிலிருந்து இரண்டாகக் குறைக்க 1833 இல் இந்த அதிகாரம் பிரயோகிக்கப்பட்டது.)

இவ்வாறு இந்தியாவில் ஏகாதிபத்திய அரசாங்க அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டதற்கு வெகுகாலத்திற்கு முன்னரே வங்காள அரசாங்கம், (3 மற்றும் 4 வ்ர் IV சி.85.எஸ்39) பகை நடவடிக்கைகளைத் தொடங்கும் விஷயத்தில் அல்லது எந்த ஒரு இந்திய மன்னர் அல்லது அதிகாரத்திற்கும் எதிராகப் போர் அறிவிப்பு அல்லது போர் தொடுக்கவும் அல்லது சமாதான ஒப்பந்தம் அல்லது இதர ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தவும் அல்லது இதர ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளவும், அவசர காலத்தில் தவிர, மதராஸ் மற்றும் பம்பாய் மாகாணங்களின் அரசாங்கத்தையும் நிர்வாகத்தையும் மேற்பார்வை செய்து கட்டுப்படுத்தவும் மட்டுமின்றி, மேற் கூறப்பட்ட மாகாணங்களில் வருவாய்களை வசூலித்தல் அல்லது பயன்படுத்துதல், அல்லது படைகளைப் பிரயோகப்படுத்துதல், அல்லது சிவில் மற்றும் இராணுவ அரசாங்கம் ஆகியவை போன்ற எல்லா விஷயங்களிலும் மேற்பார்வை செய்யும் அதிகாரம் உள்ளிட்டு உச்ச அதிகாரங்களைப் பெற்றிருந்தது. (13 ஜியோ.IIIசி. 52எஸ்.40) ஆனால் 1833 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த இரண்டு மாகாணங்களும் தங்களுடைய உள்நாட்டு விவகாரங்களில் வங்காளத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்தன என்று கருதக் கூடாது. மதராசும் பம்பாயும் எல்லா உத்தரவுகள் மற்றும் தீர்மானங்கள், கவுன்சிலில் அவற்றின் செயல்பாடுகள் ஆகியவற்றின் மூல நகல்களை இடையறாது, தெளிவாக வங்காள அரசாங்கத்திற்கு அனுப்பக் கடமைப்பட்டிருந்தன.

வங்காள அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டிய கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தன என்ற உண்மையினால் தங்களது உள் விவகாரங்களில் அவை கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்ற அர்த்தம் இருப்பதாக நாம் கருதக்கூடாது. வங்காள அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த அதன் எல்லை தாண்டிய அதிகாரத்தைத் தவிர, வங்காளத்திற்குச் (13.ஜியோ. III சி.63. எஸ்7) சமமாக மதராஸ் மற்றும் பம்பாய் அரசாங்கங்கள் ஒவ்வொன்றின் (33 ஜியோ. III.சி.52.எஸ்.24) வசமும் சிவில் மற்றும் இராணுவ அரசாங்கமும் கைப்பற்றப்பட்ட எல்லாப் பிரதேசங்கள் மற்றும் வருவாய்களுக்கும் உத்தரவிடும் மற்றும் நிர்வகிக்கும் அதிகாரமும் ஒப்படைக்கப்பட்டிருந்தன வங்காள அரசாங்கத்துடன் கூட அவை மேற்கூறப்பட்டபடி தமது சம்பந்தப்பட்ட ஆளுகைக்குள் சட்டமியற்றும் கூட்டு சமமான, சுதந்திரமான அதிகாரங்களைப் பெற்றிருந்தன.

ஆகவே, உண்மையான கண்ணோட்டத்தில் பார்த்தால் தங்களது நடவடிக்கைக் குறிப்புகளின் நகல்களை வங்காள அரசாங்கத்திற்கு அனுப்பியது தகவலுக்கு மட்டுமே என்றும் அதன் உத்தரவுகளை அல்ல என்பதும் தெரியவரும். எல்லா வகையிலும் வங்காள அரசாங்கமே இத்தகைய கண்ணோட்டத்தைத்தான் கொண்டிருந்தது என்பது தெரியவருகிறது.

ஏனெனில், உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் அவை தனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் படிக் கட்டாயப்படுத்தவும் அதன் வசம் அதிகாரம் இருந்தபோதிலும் கூட, நடைமுறையில் அது தனது மேற்பார்வையையும் கட்டுப்பாட்டையும் “ ஒரு ஒழுங்கீனத்தைச் சுட்டிக்காட்டவும், அத்தகைய ஒழுங்கீனங்கள் மீண்டும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளவும்” சொல்வதுடன் நிறுத்திக் கொண்டது. இதற்கும் அதிகமாக ஏதேனும் செய்வது, “செய்யத் தகாததாகவும்” (சிஎஃப் 1331 செப்டம்பர் 14 ஆம் தேதியிட்ட கவர்னர் ஜெனரல் லார்டு வில்லியம் பென்டிங்கின் இந்திய அரசாங்கத்தின் அரசியல் சட்டத்தின் மீதான நடவடிக்கைக் குறிப்புகள்.) கருதப்பட்டது. ஒரு வேளை அவ்வாறு செய்வது அரசியல் சட்டத்திற்குகந்தது தானா என்ற ஐயப்பாடும் இருந்தது.

ஏகாதிபத்திய அரசாங்க அமைப்பைத் தொடர்ந்து ஏகாதிபத்திய நிதியமைப்பும் அவசியமாயிற்று. ஏகாதிபத்திய அமைப்பின் நிர்வாகம் தொடங்கப்படுவதற்கு முன்னர் இருந்த பல மாகாணங்கள் தமக்கே உரிய பாணியில் தனித்தனி கடிகாரங்களைப்போல் இயங்கி வந்தன. ஒவ்வொன்றும் சட்டமியற்றுதல், குற்றவியல் மற்றும் வரிவிதிக்கும் அதிகாரங்கள் போன்ற அரசுரிமை கொண்ட அதிகாரங்களைப் பெற்றிருந்தன. அவை சுதந்திரமான நிதியமைப்பைக் கொண்டிருந்தன.

அமைதி, ஒழுங்கு தனது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் நல்லாட்சி போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பராமரிப்பதற்கான பொறுப்பைக் கொண்டிருந்தன. வரி விதிப்பு முறையை மாற்றியமைத்து அல்லது வரி விதிப்பதன் மூலம் பணத்தை ஈட்டவும், அல்லது தனது கட்டுப்பாடுகளைச் சமாளிப்பதற்குக் கடன்வாங்கவும் சுதந்திரம் பெற்றிருந்தன. தங்களுடைய வழிவகைகளுக்காக மாகாணங்கள் அடிக்கடி ஒன்று மற்றதன் செல்வாதாரங்களைச் சார்ந்திருந்தன. அதற்குக் காரணம் அவற்றின் நிதியமைப்பு தனித்தனியாக இருக்கவில்லை.

மாறாக அவை கிழக்கிந்தியக் கம்பெனிக்குச் சொந்தமான ஒரு பொதுவான நிதியமைப்பின் அங்கங்களாக இருந்தன. அவை அனைத்தும் 1833 ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி மாற்றப்பட்டன. அது பல்வேறு பிரதேசங்களின் வருவாய்கள் மற்றும் அரசாங்கங்களைக் கவுன்சிலில் உள்ள இந்தியாவின் கவர்னர் ஜெனரலின் பொறுப்பில் ஒப்படைத்தது. வருவாய்களும் சேவைத்துறைகளும் சட்டத்தின் மூலமாக இந்திய அரசாங்கத்தின் வருவாய்களாகவும் சேவைத் துறைகளாகவும் ஆயின. மாகாணங்கள், இந்திய அரசாங்கத்தின் வரி வசூலிக்கும், செலவழிக்கும் ஏஜென்சிகளாக மாறின. புதியவரிகள் விதிக்கவோ அல்லது தங்களது பெயரில் பழைய வரிகளை வசூலிக்கவோ தடை செய்யப்பட்டன. அதே போன்று அவை நிர்வகித்து வந்த சேவைத் துறைகளும் கூட இந்திய அரசாங்கத்தின் பொறுப்புக்கு மாறியது சேவைத் துறைகளின் பராமரிப்புக்காக ஒருங்கிணைந்த நிதியிலிருந்து பல்வேறு மாகாணங்களுக்கும் இந்திய அரசாங்கம் நிதிகளை ஒதுக்கீடு செய்தது.

இந்திய அரசாங்கத்தின் முன் அனுமதி இன்றி அந்த நிதியை மாகாணங்கள் எந்த ஒரு புதிய பதவியை உருவாக்கவோ அல்லது ஊதியம், கிராஜூவிடி அல்லது அலவன்சு (கட்டுப்பாடு இயக்குநர்களின் தபால் வங்காள அரசாங்கத்திற்கு அனுப்பியது. எண்44. டிசம்பர் 10, 1854 உண்மை நகல் இந்திய அலுவலகக் குறிப்புகளில் உள்ளது) வழங்கவோ செலவிடக்கூடாது என்று சட்டத்தின் மூலம் வகை செய்யப்பட்டது. பொதுக்கடனுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட மாகாணமும் இனிப் பொறுப்பல்ல. இதர மாகாணங்களின் வருவாய்களுக்கிடையில் பொதுக்கடன், முதலாவது அல்லது இரண்டாந்தரப் பொறுப்பு வகிக்கும் பிரச்சினையும் இப்போது இருக்கவில்லை. மாகாணங்களின் கடன் அனைத்தும் இந்திய அரசாங்கத்தின் கடன்களாயின. அவை இந்தியாவின் ஒட்டு மொத்த வருவாய்களிலிருந்து திருப்பிச் செலுத்தக் கடமைப்பட்டவையாயின. சுருக்கத்தில், பலனளிக்கும் துறையிலிருந்து நிதி ஆதாரங்களையும் பங்களிப்பையும் பிரிக்கும் அமைப்புக்கும் ஏறக்குறைய இணையாக இருந்த நிதியமைப்பு, நிதி ஆதாரங்களையும் பலன்களை வினியோகிப்பதையும் கொண்ட ஒரு கூட்டு அமைப்பாக மாற்றப்பட்டது. ஏனெனில் 1833 ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி இயற்றப்பட்ட ஓர் அரசாங்கத் தீர்மானம் கூறுவதாவது:

“நிர்வாக வசதிக்காகத் தனித்தனி ஸ்தலக் கட்டுப்பாடுடைய அரசாங்கங்களைக் கொண்ட மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த போதிலும் கூட பிரிட்டிஷ் இந்தியா, உண்மையில் கிரேட் பிரிட்டனைச் சார்ந்து நிற்கும் ஒரே மகத்தான சக்தியாக, பிரிக்கப்படாத நலன்களைக் கொண்டு, ஒரே நிதியமைப்புடன், எல்லா அத்தியாவசியமான மற்றும் பொதுவான கோட்பாடுகளில் ஒரே அரசாங்கத்தினால் கவுன்சிலில் உள்ள கவர்னர் ஜெனரலினால் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்தியாவின் செல்வாதாரங்கள் அனைத்தும் ஒரே காரியத்திற்காக மட்டுமே பிரயோகப்படுத்தக் கூடியதாக இருந்தன. அதனுடைய கட்டுப்பாடுகளை நிறைவேற்றவும் இங்கிலாந்தில் அதனுடைய நிர்வாகம் தொடர்பான கட்டுப்பாடுகளை நிறைவேற்றவும், பிரிட்டிஷ் இந்தியாவின் நிதி தேவைப்படும் எந்த ஒரு பிரிவுக்கும் வழக்கமாக அந்த நிதி எங்கிருந்து வந்ததோ அதை வெளிப்படுத்தாமல் நிதிகள் சப்ளை செய்யப்பட்டன. (இந்திய அரசாங்கம், நிதித்துறையின் தீர்மானம், 1843 நவம்பர் 22).

கம்பெனியிடமிருந்து 1858 இல் முடியரசு ஆட்சிப்  பொறுப்பை மேற்கொண்ட போது ஏகாதிபத்திய நிதியமைப்பு சர்வாம்சமானதாக மாறியிருந்ததை இந்திய அரசாங்கம் கண்டது.

“எந்த ஒரு மாகாணமும் சட்டமியற்றும் தனி அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை, எந்த ஒரு தனியான நிதி ஆதாரங்களையும் கொண்டிருக்கவில்லை, பொதுச் சேவைத் துறையில் எந்த ஒரு நியமனங்களையும் உருவாக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ அதிகாரம் பெற்றிருக்கவில்லை. கடைசியாகக் கூறப்பட்ட கட்டுப்பாடு சம்பந்தப்பட்ட இந்திய அரசாங்கத்தின் மேற்கோள்கள், மாகாண நிர்வாகத்தின் எல்லாத் துறைகளிலும் தலையிடும் வாய்ப்பை அரசாங்கத்திற்கு வழங்கியது.” (பிரிட்டிஷ் இந்தியாவின் அதிகாரங்களைப் பரவலாக்குதல் சம்பந்தமான ராயல் கமிஷனின் அறிக்கை)

இராணுவம், அரசியல், சட்டரீதியான அல்லது நிர்வாகக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது அரசாங்கத்தின் ஏகாதிபத்திய அமைப்பின் சாதகங்கள் என்னவாக இருந்தாலும், ஒரு நிதியமைப்பு என்ற முறையில், அது அதன்மீது திணிக்கப்பட்ட சுமைக்குச் சமமற்றதாக இருந்தது என்பதுதான் துயரமளிக்கும் உண்மையாகும். ஆரம்பம் முதலே அது நிதிப்பற்றாக்குறை என்ற கொடிய வியாதியினால் துன்புற்று வந்தது. எப்போதாவதுதான் நிதியமைச்சர்களின் முயற்சிகள் சமநிலையை ஏற்படுத்துவதிலும் நெருக்கடி நிலைமையைப் போக்குவதிலும் வெற்றிகரமாக அமைந்தன. பற்றாக்குறைகள் எந்த அளவுக்கு மோசமாக இருந்தன என்பதைப் பின்வரும் புள்ளி விபரங்களிலிருந்து காணலாம். (திரு.வில்சன் எழுதிய 1860-61க்கான பிரிட்டிஷ் இந்தியாவின் நிதி அறிக்கையிலிருந்து சியின் எச்.1860 இல் நிதி அறிக்கை பக்.100)

ஏகாதிபத்திய நிதியமைப்பின் பற்றாக்குறை

ஆண்டு உபரி (பவுண்ட்) பற்றாக்குறை (பவுண்ட்)
1834-35 ---- 194.477
35-36 1,441,513 ----
36-37 1,248,224 ----
37-38 780,318 ----
38-39 ---- 381,787
39-40 ---- 2,138,713
40-41 ---- 1,754,852
41-42 ---- 1,771,603
42-43 ---- 1,346,011
43-44 ---- 1,440,259
44-45 ---- 743,893
45-46 ---- 1,496,865
46-47 ---- 971,322
47-48 ---- 1,911,986
48-49 ---- 1,473,225
49-50 354,187 ----
50-51 415,443 ----
51-52 531,265 ----
52-53 424,257 ----
53-54 ---- 2,044,107
54-55 ---- 1,707,364
55-56 ---- 972,791
56-57 ---- 143,597
57-58 ---- 7,864,222

 

இந்திய நிதித்துறையின் பற்றாக்குறைகளைத் தோலுரித்துக் காட்டும் இப்பரிதாப நிலையை ஆழமாகப் பார்ப்பவர் எவரும் டிஸ்ரேலியின் கருத்துகளைப் பாராட்டத் தவறமாட்டார், காமன்ஸ் சபையில் அவர் கூறிய கருத்துக்கள் வருமாறு:-

“இந்தியாவின் நிர்வாகம் எப்போதும் திறமையானவர்களின் கைகளில் இருந்து வந்துள்ளது. அந்த நிர்வாகம் உருவாக்கிய தலை சிறந்த நிர்வாகிகள் ஏராளம். மிகப்பெரிய தலைவர்களும் ஏராளமானவர்கள் இருந்துள்ளனர். தந்திரசாலிகளான ராஜியவாதிகள், பெரிய மாவட்டங்களின் சிறந்த நிர்வாகிகள், அவர்கள் வசம் அரசாங்கம் ஒப்படைத்திருந்த ஏராளமான பொறுப்புகள், ஆயினும் இந்தியாவின் நிதி நிலைமை எப்போதுமே குழப்பதில் ஆழ்ந்து வந்துள்ளது, மகத்தான மனிதர்கள் பலரை இந்தியா உருவாக்கியுள்ளது. ஆனால், ஒரு நிதி மந்திரியை அது உருவாக்கவில்லை போல் தோன்றுகிறது.” (சர்.சார்லஸ் உட்கின் நிர்வாகம், வெஸ்ட், பக்கம் 65-66)

இந்த வீழ்ச்சிக்கான காரணங்கள் நமக்குப் புரியாதவையல்ல. இந்திய நிதித்துறையின் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாகப் போதுமான நிதிக்கொள்கை இல்லாததுதான் என்று கூறமுடியும். இக்கொள்கை தவறானதாக இருந்தது என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அரசுப் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சேகரிக்கப்பட வேண்டிய வருவாய்களின் அளவை, செலவிடப்பட வேண்டிய செலவினங்கள்தான் தீர்மானிக்கவேண்டும் என்று வாதிடுவது வழக்கமானதுதான். ஆனால், இந்த வழக்கமான மேற்கோளுரை இதனுடைய வரையறைகள் எங்கெல்லாம் தமக்குரிய மதிப்பைப் பெறத் தவறியுள்ளனவோ அங்கெல்லாம் அவை அழிவு கரமானவையாக இருந்ததை அனுபவம் காட்டியுள்ளது. அரசின் அதிகரித்துவரும் செலவினங்களைச் சமுதாயத்தின் வளர்ந்துவரும் செல்வத்திலிருந்துதான் பெற முடியும் என்றும் கூற முடியாது.

வளமான நிதிக்கான சோதனை, தேவையான அளவுக்கு வருவாயை உருவாக்கக் கூடிய திறமையில்தான் அடங்கியுள்ளது என்றும் கூட வலியுறுத்திக் கூற முடியாது. வருவாயை உருவாக்கும் வழிமுறை என்பது ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் உற்பத்தித் திறனுக்கு அஞ்சத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இப்பிரச்சினையின் ஓர் அம்சமாகும். ஒரு வரிவிதிப்பு முறை அதன் யோசனையற்ற வரிவீதத்தினால் சமூக எழுச்சிகளை ஏற்படுத்தக் கூடும்.

அதே போன்று, வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் மீது விதிக்கப்படும் யோசனையற்ற வரி வீதம் சமுதாயத்தின் உற்பத்தி சார்ந்த சக்திகளை முடக்கிப் பொருளாதாரத்தைச் செயலிழக்கச் செய்து அரசை மிகக் கீழ்நிலைக்குத் தள்ளிவிடும் என்பதையும் மறுக்க முடியாது. ஆகவே, பணத்தை வசூலித்துச் செலவிடும் உடனடிக் குறிக்கோளுக்கு அப்பால், அரசின் நிதி நிர்வாகப் பொறுப்பேற்றவர்கள் தொலைநோக்குக் கொண்டிருக்கவேண்டும் என்று அறிவுடைமை கோருகிறது. ஏனெனில், நிதியை “எப்படிச்” செலவிடவேண்டும் என்பது மிக முக்கியமானது. நடைமுறையில் அதை அசட்டை செய்வது கூடாது.

ஒரு சமுதாயத்தின் வழிவழிவந்த செல்வச் செழிப்பிலிருந்துதான் அரசு எதையும் பெறமுடியும். அதற்குச் சேதம் ஏற்படுத்தும் அரசு தனக்குத்தானே சேதம் ஏற்படுத்திக் கொள்வதில் தான் முடியும். இந்த உண்மைகளை யோசனையின்றிப் புறக்கணித்ததனால் அரசுகள் தகர்ந்து பட்டதற்கான உதாரணங்கள் வரலாற்றில் ஏராளம். இதற்குக் கூடுதல் அத்தாட்சி வேண்டுமெனில் அதற்கு இந்தியாவில் நிறுவப்பட்ட ஏகாதிபத்திய நிதி அமைப்பு ஈடு இணையற்ற உதாரணமாகத் திகழ்கிறது.

நடைமுறையில் ஏகாதிபத்திய வருவாய் அமைப்பு விதித்த நிலவரிவீதம் மிகமிக அதிகமாகும். நினைவுக்கெட்டாத காலந்தொட்டு இந்தியாவில் நிலம் அரசுக்குச் சொந்தமான ஆஸ்தி என்று கருதப்பட்டுவந்துள்ள காரணத்தினால், குடியானவர் அரசுக்குச் செலுத்தவேண்டிய வரியின் வடிவத்தில்தான் இந்தியாவில் வரி விதிப்புச் சிந்தாந்தம் இழையோடுகிறது குடியானவர் நிலத்தின் உரிமையாளர் அல்ல. மாறாக, அவர் நிலத்தை உழுது பயிரிடுபவராக இருக்கிறார். அவருக்கு நிலத்தை அரசு குத்தகைக்கு விட்டுள்ளது. ஆகவே, அந்த நிலத்திலிருந்து கிடைக்கும் மொத்தப் பொருளாதார வாடகையையும் அரசு கேட்டுப்பெறுவது குவியப்படுத்துகிறது. இந்த யூகத்தின் அடிப்படையில்தான் தேவை அல்லது நியாயம் என்ற பிரச்சினையைப் பொருட்படுத்தாமல் நிலவரி விதிக்கப்பட்டுள்ளது.

அரசு நிலப்பிரபுத்தனத்தின் இந்தச் சட்டரீதியான கட்டுக் கதையைத் தவிர, நிலவருவாயை உயர்த்துவதை நியாயப்படுத்துவதற்காக பிசியோகிரசி என்ற பொருளாதாரக் கோட்பாடும் நடப்பிலிருந்தது. புரோடுயிட் நெட் என்ற, இயற்கை முறைக்கு ஏற்றது என்று கருதும் சித்தாந்தம் இந்தியாவில் நிலவரியை நிர்ணயிப்பதிலும் நிர்வகிப்பதிலும் அதனுடைய செல்வாக்கைச் செலுத்தியது என்று நம்புவதற்கான காரணங்கள் உள்ளன.

“பிரெஞ்சுப்  பொருளாதார நிபுணர்களின் கோட்பாடாம் ‘எல்லா வரிகளையும் நிலத்தின் மீதே சுமத்துதல்’ என்பது…… சரியானதோ அல்லது தவறானதோ. ஆனால், அது இந்தியாவின் நடப்பிலுள்ள முறைக்கு நிச்சயமாக உகந்ததாகும். அந்தத் தத்துவத்தை பிரெஞ்சுக்காரர்கள் மட்டுமே ஆதரிக்கவில்லை. மாறாக மண்ணில் விளையும் பண்டங்களின் மீதுதான் இறுதியில் எல்லா வரிகளும் சுமத்தப்படுகின்றன என்று கூறும் இங்கிலாந்திலுள்ள, மதிப்பிற்குரிய அதிகாரிகளும் அதை ஆதரிக்கின்றனர்.

ஒரு மாறுபட்ட சித்தாந்தத்தை முன்வைக்கும் நாடுகளின் செல்வம் என்ற நூலின் ஆசிரியர், தம்முடைய கருத்துகளிலிருந்தே மாறுபடுகிறார். அவருடைய முந்தைய புள்ளி விவரங்களே நம்மை இந்த முடிவுக்கு இட்டுச் செல்கின்றன (பாடென் போவெல்லின் ஊடுருவும் கண்களிலிருந்தும் தப்பித்த இந்த வியத்தகு முரண்பாட்டை காமன்ஸ் சபையின் ஆவணம் 1813-14 ஆம் ஆண்டின் 306ஐக் காணவும்.) என்று வருவாய் நிர்வாகத்தின் ஆரம்பக் கட்டங்களில் இந்தியாவில் இருந்த உயர் அதிகாரிகள் வாதிட்டதை நாம் காண்கிறோம்.

நிலவரியை உயர்த்துவதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், எந்தத் தொழிலின் முதலாவது பலன்கள் மீது மிக அதிக அளவில் வரிவிதித்து, அதன் ஒட்டுமொத்த லாபத்தைப் பறித்துக் கொள்வது என்பது அழிவுகரமானது, அரசியல் நாகரிகமற்றது. வருங்கால முயற்சிகளை லாபகரமாகப் பிரயோகப்படுத்தக்கூடிய, அதன் மூலமாகத் தனிநபர் செல்வத்தையும் பொது வருவாயையும் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு அதிகரிக்கக் கூடிய அந்தப் பண்டத்தை உருவாக்குவதற்குத் தடையாக மாறுகிறது. இத்தகைய தன்மையுடைய நிலவரியானது, தொழில்துறை எப்படியேனும் உருவாக்கியிருக்கக்கூடிய அந்தச் செல்வத்தின் உற்பத்தியையே நிச்சயம் தகர்த்துவிட்டிருக்கும்.

இந்தியாவில் நடப்பிலிருந்த வரி விதிப்பு முறையே ஒருமுனை வரிக்கான அணுகுமுறை என்று அழைக்கப்படும் அளவுக்கு நிலவரி மிக அதிகமாக இருந்தது. (இந்த அமைப்பைத் துல்லியமாக ஆய்வு செய்த திரு.டிராவெலியான் அதனுடைய பாதகமான விளைவுகளைக் கண்டு அருவறுப்படைந்து “இத்தகையதொரு அமைப்பு இருப்பதை நாம் இப்போது கண்கூடாகக் கண்டபோதிலும், இந்த அமைப்பு ஒழிக்கப்படும் பொழுது, இத்தகைய ஒரு முறையை இந்த நூற்றாண்டின் பெரும்பகுதி வரை நாம் சகித்துக் கொண்டிருந்தோம் என்பதையே இந்த உலகம் நம்புவது கடினமாக இருக்கும்” என்று எழுதினார். வங்காள மாகாணத்தில் இடம் பெயர்தல் மற்றும் நகர வரி விதிப்பு முறை பக்.6)

இந்தியாவின் மொத்த வருவாய்களில் நிலவருவாயின் வீதாசாரம் பின்வருமாறு அமைத்திருந்தது.

ஆண்டு வீதாசாரம்
1792-93 முதல் 1796-97 வரை 50.33
1792-93 முதல் 1801-1802 வரை 42.02
1802-03 முதல் 1806-07 வரை 31.99
1807-08 முதல் 1811-12 வரை 31.68
1812-13 முதல் 1816-17 வரை 52.33
1817-18 முதல் 1821-22 வரை 66.17
1822-23 முதல் 1826-27 வரை 61.83
1827-28 முதல் 1831-32 வரை 60.90
1832-33 முதல் 1836-37 வரை 57.00
1837-38 முதல் 1841-42 வரை 59.05
1842-43 முதல் 1846-47 வரை 55.85
1847-48 முதல் 1851-52 வரை 56.06
1852-53 முதல் 1855-56 வரை 55.40
64 ஆண்டுகளுக்கான சராசரி 54.07

விவசாயத் தொழிலின் வளவாழ்வை நிலவரி தடுத்ததைப் போலவே சுங்கவரிகள் நாட்டிலுள்ள உற்பத்தியாளர்களின் வளர்ச்சியைக் குன்றச் செய்தது. உள்நாட்டுச் சுங்கவரி, வெளிநாட்டு சுங்கவரி என்று இருந்தன. இரண்டுமே வர்த்தகத்திற்கும் தொழில்துறைக்கும் பாதகமாக அமைந்தன. உள்நாட்டுச் சுங்கவரியில் (இந்த அமைப்பைத் துல்லியமாக ஆய்வு செய்த திரு.டிராவெலியான் அதனுடைய பாதகமான விளைவுகளைக் கண்டு அறுவறுப்படைந்து “ இத்தகையதொரு அமைப்பு இருப்பதை நாம் இப்போது கண்கூடாகக் கண்டபோதிலும், இந்த அமைப்பு ஒழிக்கப்படும் பொழுது, இத்தகைய ஒரு முறையை இந்த நூற்றாண்டின் பெரும்பகுதி வரை நாம் சகித்துக் கொண்டிருந்தோம் என்பதையே இந்த உலகம் நம்புவது கடினமாக இருக்கும்” என்று எழுதினார்.

வங்காள மாகாணத்தில் இடம் பெயர்தல் மற்றும் நகர வரி விதிப்பு முறை பக்.6)  இடம்பெயர்தல் மற்றும் நகரவரிகள் அடங்கியிருந்தன. இடம்பெயர்தல் வரிக்காக நாடு பல சிறிய சுங்கப் பகுதிகளாகச் செயற்கையாகப் பிரிக்கபட்டிருந்தது. ஒவ்வொரு சுங்கபகுதியிலும் பொருட்களை உற்பத்தி செய்து நுகரப்படுவதற்கு வரி கிடையாது. ஆனால், அப்பகுதியிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்படும் அடுத்தகணமே அவை வரி விதிப்புக்கு உள்ளாகின்றன.

இந்த விதிமுறையின் பாதகமான பலன்கள், மூடி மறைக்கப்பட்டபோதிலும் கூட, அவை நிஜமானவையாக இருந்தன. இடம்பெயர்தல் வரிகள் வர்த்தகத்தைப் பாதித்தன. அது நாட்டின் உற்பத்தியாளர்கள் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது. சந்தையின் அளவைப் பொறுத்துத்தான் தொழில்துறையின் வளர்ச்சி அமைந்திருக்கும் என்பதை ஆடம்ஸ்மித் நமக்கு கூறியிருக்கிறார். இடம்பெயர்தல் வரிகளுக்காக நாடு முழுவதுமே சதுரங்கப் பலகையில் இருக்கும் கட்டங்களைப் போல சிறுசிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. அத்தகைய நிலைமையில் வர்த்தகமும், அதன் கைப்பாவையான தொழில்துறையும் மிக மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தன என்பதில் விந்தை ஏதுமில்லை. இடம்பெயர்தல் வரிகளின் பாதகமான விளைவுகள் வேறொரு வழியிலும் உணரப்பட்டன.

ஓரளவு தொழில்துறையில் முன்னேறிய நாடுகளனைத்திலும் சமூகம் வேலைப்பகுப்பு மட்டுமின்றித், தொழில்துறையை வட்டாரமயமாக்குதல் என்று அழைக்கப்படும் ஓரிடத்தில் குவியக்கூடிய தொழில்முறை ஏற்பட்டது. தொழில்துறையை வட்டாரமயமாக்குதல் என்பது இந்தியப் பொருளாதாரத்தின் ஒரு தலைசிறந்த அம்சமாக இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் ஏராளம் உள்ளன. (எம்.மார்ட்டினின் “கிழக்கிந்திய இந்தியா”வைக் காண்க.மூன்று தொகுதிகள்.)

அதன் கீழ் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு வட்டாரப் பகுதியும் ஒரு குறிப்பிட்ட கலை அல்லது தொழில்துறையில் தேர்ச்சிப் பெற்றிருந்தது; உதாரணமாக, ஒரு பகுதியில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. அது வேறொரு பகுதியில் நூலாக மாற்றப்பட்டது. ஆனால், இப்பகுதியில் வெவ்வேறு சுங்கப்பகுதிகளில் அமைந்திருந்தன. ஒரு மூலப்பொருள் அல்லது கச்சாப்பொருள் தனது இறுதிக்கட்டத்தை அடைவதற்கு முன்னர் பலமுறை இடம் விட்டு இடம் எடுத்துச் செல்லப்படுவதற்கான வரி செலுத்தப்பட்டிருக்கும். இந்த இடம்பெயர்தல் வரிகளிலிருந்து தப்புவதற்கான லாபமற்ற வழிகளில் ஒவ்வொரு பகுதியும் தனது ஆற்றல்களை விரயமாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உள்நாட்டுச் சுங்கவரிகளின் ஓர் அங்கமாக அமைந்த நகர வரிகள் கூட நகரமயமாக்குதலைத் தடுப்பதை நோக்கிய பலன்களையே ஏற்படுத்தின. வர்த்தக நிறுவனங்கள் ஒரு நாட்டின் வர்த்தகத்தினுடைய பரந்துவிரிந்த கருவிகளாகும் என்பது தெரிந்ததே. எல்லாவிதமான பண்டங்களையும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் உடனடியாக வாங்கவும் விற்கவுமான வாய்ப்பு, குவிந்து கிடக்கும் மூலதனம், விஸ்தரிக்கப்பட்ட கடன்வசதி, பொதுத் தகவல் ஆகியவை அனைத்தும் ஒரே மையத்தில் இங்குச் சந்திக்கின்றன. அவை ஒரு நாட்டின் வியாபாரத்திற்கும் வர்த்தகத்திற்கும் எல்லா விதமான ஆதரவையும், ஊக்குவிப்பையும் வழங்குகின்றன.

ஆனால், நகரவரியின் நேரடிப் பயன் வர்த்தகத்தைத் திசைதிருப்பித் துரத்தியடிப்பதுதான். ஏனெனில், அந்த வரிக்குட்படுத்தபட்ட ஒவ்வொரு பொருளுக்கும் இடம்பெயர்தல் வரி செலுத்தபட்டபின்னர் நகரத்தில் நுழையும்போது நுழைவுவரி செலுத்தப்பட்டது: நகரவரியும் செலுத்தப்பட்டது. நுழைந்த நகரில் அப்பொருளின் உற்பத்தி வடிவத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டால், அது வேறு ஏதேனும் இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டால் அது வேறு ஏதேனும் ஒரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும்பொழுது இடம்பெயர்தல் வரிவிதிப்பின் கீழ் அது இரண்டாம் முறையாக வரிவிதிப்புக்கு ஆட்படுத்தப்பட்டது.

அதன் விளைவாக அதற்காகச் செலவிடப்பட்ட உழைப்பு, திறமை ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட மதிப்பைவிட அது பலமடங்கு உயர்ந்து நின்றது. இதன் விளைவு என்னவெனில், நகரங்களில் வர்த்தகமும் தொழில்துறையும் நசிந்தன. ஏனெனில், வியாபாரிகள் அவற்றை நகரங்களுக்கு எடுத்துச்செல்வதை நிறுத்திக் கொண்டனர். இடம்பெயர்தல் வரிக்கு உள்ளான எந்த உற்பத்திப் பொருள்களும் தங்களுடைய சொந்த சப்ளைகளுக்குத் தவிர சந்தையில் நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொள்ள முடியாததாக இருந்தன.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளில்தான் இந்தியத் தொழில்துறை வெளிநாட்டுப் போட்டியாளர்களையும் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால், வெளிநாட்டுச் சுங்கவரிகள் இந்தியத் தொழில்துறையைப் பாதுகாத்ததாகவோ, அல்லது ஊக்குவித்ததாகவோ சொல்லமுடியாது. வர்த்தகரீதியான சுங்கவரிகள் ‘பண்டப் போட்டி’ என்றழைக்கப்படுவதை ஆதாரமாகக் கொண்டிருந்தது. உள்நாட்டிலேயே வெற்றிகரமாக உற்பத்தி செய்யப்படும் அதே பண்டங்களின் இறக்குமதியை உயர் வரிவிதிப்பின் மூலமாகத் தடுப்பதற்காக இறக்குமதிச் சுங்கவரி உருவாக்கப்பட்டது. அதே போன்று அந்நியச் சந்தைகளில் காலடி பதிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்நாட்டுப் பண்டங்களின்  ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான சலுகைகளை வழங்குவதற்கு ஏற்றுமதி சுங்கவரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்தியாவில் நடைமுறையில் இருந்த ஏற்றுமதி சுங்கவரித் தத்துவத்திற்கும் பண்டங்களின் போட்டி என்ற தத்துவத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.உண்மையில் பின்பற்றப்பட்ட கொள்கையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அயல் சரக்குகளுக்கு வரிவிதிப்பை ஆதரிப்பவரும் கூட வர்த்தகத்தைச் சுதந்திரமாக விட்டுவைப்பதைக் காணவே விரும்புவார். ஏனெனில், சுங்கவரி என்பது பொருளாதார ரீதியான லாபங்களைவிட அரசியல் ஆதாயங்களையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. இந்திய இறக்குமதிச் சுங்கவரி, இறக்குமதிப் பண்டங்களின் தன்மையைக் கொண்டு நிர்ணயிக்கப்படவில்லை, மாறாக எங்கிருந்து அவை இறக்குமதி செய்யப்பட்டன, அவை எந்தநாட்டுக் கப்பல்களில் அனுப்பப்பட்டன என்பதைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டன.

அரசியல் தன்மையுடையதாக இருந்த அது, வடிவமைப்பிலும் கட்டமைப்பிலும் சாதகமானதாகவும் இருந்தது. வருந்தத்தக்க விதத்தில், இந்தச் சாதகமான முறை, மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பையே ஏற்படுத்தின. இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்ட அன்னிய நாட்டுப் பொருள்களுக்கும் அன்னிய நாட்டுக் கப்பல்கள் ஏற்றிவந்த சரக்குகளுக்கும் விதிக்கப்பட்ட வரியில் பாதியளவுக்குத்தான் ஆங்கிலேயப் பண்டங்களுக்கும் இங்கிலாந்து நாட்டுக் கப்பல்கள் ஏற்றி வந்த சரக்குகளுக்கும் வரிவிதிக்கப்பட்டது என்பதைக்கூட மன்னித்துவிடலாம்: ஆனால், உள்நாட்டுச் சுங்கவரி விதிப்பின்கீழ் இந்தியப் பண்டங்கள் மீது விதிக்கப்பட்ட வரியைவிடக்  குறைந்த வரிவிதிப்புடன் பிரிட்டிஷ் பண்டங்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ததன் மூலம் திணிக்கப்பட்ட அநியாயத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது; இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மீதும், இந்தியாவில் கட்டப்பட்ட கப்பல்களில் ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குகளின் மீதும் விதிக்கப்பட்ட அதிக வரிகள்மூலம் இந்தியப் பண்டங்கள் இங்கிலாந்தில் நுழைவதைத் தடைசெய்தது!

உள்நாட்டுச் சுங்க வரிகளினால் இந்திய உற்பத்திப் பண்டங்களுடன் வெற்றிகரமாகப் போட்டியிடுவதை வெளிநாட்டவர்களுக்கு இறக்குமதிவரிகள் எளிதாக்கிய அதே சமயம், இந்தியச் சுங்கவரியின் வருந்தற்குரிய  சிறப்பம்சங்களில் ஒன்றாகவும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் (மேலே கூறப்பட்ட ஒவ்வொரு அறிக்கைக்கும் மேற்கோள்கள் காட்டுவது கடினம்.

இந்தியாவின் சுங்கவரி வரலாறு எழுதப்படாமல்தான் இருக்கிறது. ஆனால் இது சம்பந்தமாக ஏராளமான சான்றுகள் 1821இல் வர்த்தகம் குறித்த நாடாளுமன்றக் கமிட்டியிலும், 1813 மற்றும் 1853இல் கிழக்கிந்திய கம்பெனியின் விவகாரங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட சான்றிலும் காணக்கிடைக்கின்றன. 1846, கிழக்கிந்திய உற்பத்திப் பண்டங்கள் குறித்த கமிட்டியின் அறிக்கை மற்றும் சான்றில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தலாம்.) வெகுகாலம் நீடித்திருந்ததுமான கிலியூட்டும் ஏற்றுமதி வரிகளின் கீழ் வெளிநாட்டுச் சந்தைகளில் போட்டியிடுவது கடினமானது என்பதையும் இந்தியப் பண்டங்கள் கண்டன. உள்நாடு மற்றும் வெளிநாட்டுக்கான சுங்கச் சட்டங்கள் வர்த்தகத்திற்குத் தடையேற்படுத்தியதுடன் தொழில்துறையையும் திக்குமுக்காடவும் செய்தது. அவற்றில் இருந்து கிடைத்த சொற்ப வருவாய்களே அவற்றின் அழிவுகரமான பயன்களுக்குச் சான்றாகும்.

( வெவ்வேறு காலகட்டங்களில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாயில் உப்பு வருவாயின் சதவீதம் வருமாறு: ஹென்டிரிக்ஸ் ஓ.பி, சிஐடி., பக்கம் 286. )

ஆண்டு வீதாசாரம்
1792-93 முதல் 1796-97 வரை 2.38
1792-93 முதல் 1801-1802 வரை 3.10
1802-03 முதல் 1806-07 வரை 4.16
1807-08 முதல் 1811-12 வரை 5.04
1812-13 முதல் 1816-17 வரை 6.68
1817-18 முதல் 1821-22 வரை 8.32
1822-23 முதல் 1826-27 வரை 7.58
1827-28 முதல் 1831-32 வரை 8.12
1832-33 முதல் 1836-37 வரை 7.19
1837-38 முதல் 1841-42 வரை 6.76
1842-43 முதல் 1846-47 வரை 6.02
1847-48 முதல் 1851-52 வரை 5.40
1852-53 முதல் 1855-56 வரை 5.52
64 ஆண்டுகளுக்கான சராசரி 6.22

இந்த நிதி ஆதாரங்கள் பலனளிக்கத் தவறியபோது அரசாங்கம் வருவாய்களைப் சில பிரச்சனைக்குரிய வழிமுறைகளைப் பின்பற்றியது.

ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் நடப்பிலிருந்த வருவாய் அமைப்பைப் பாகுபாடின்றி ஆய்வு செய்யும்பொழுது, வரி விதிப்பில் நீதியோ நியாயமோ இல்லாதிருந்தது என்பதைக் கூற முடியும். அது ஒரு கொடிய கிண்டல் அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் சோம்பேறித்தனமான முதுமொழி. ஏனெனில் ரத்தம் அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தை நோக்கிக் கத்தி பாய்ச்சப்படவில்லை. ஆனால், வல்லான் வகுத்தவழி அரசியலின் வலிமையின்றி ஏழ்மையில் நலிந்துகிடந்த அந்தப் பகுதி, அடங்கி ஒடுங்கி அத்தாக்குதலைத் தாங்கிக் கொண்டது.

ஏழைக் குடியானவர்கள் ஈட்டித் தந்த பொருளைக் கொண்டு ஆடம்பரமும் கும்மாளமும் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நிலப்பிரபுக்கள் அல்லது, கைநிறையச் சம்பளமும் இதர சலுகைகளையும் பெற்றுக் கொழுத்து போயிருந்த பல ஐரோப்பிய சிவில் ஊழியர்களும் அரசாங்கத்தின் பராமரிப்புக்கு எந்தவிதப் பங்களிப்பையும் தருவதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தனர். அரசாங்கத்தின் முக்கிய நடவடிக்கைகள், அவர்களுக்குப் படாடோபமும் சலுகைகளையும் அள்ளித்தருவதாகவே இருந்தன. மறுபுறத்தில் உப்பு வரியும் ( வெவ்வேறு காலகட்டங்களில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாயில் உப்பு வருவாயின் வீதாசார சதவிகிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டு வீதாசாரம்
1792-93 முதல் 1796-97 வரை 14.13
1792-93 முதல் 1801-1802 வரை 12.10
1802-03 முதல் 1806-07 வரை 11.09
1807-08 முதல் 1811-12 வரை 11.14
1812-13 முதல் 1816-17 வரை 10.92
1817-18 முதல் 1821-22 வரை 11.25
1822-23 முதல் 1826-27 வரை 11.87
1827-28 முதல் 1831-32 வரை 12.03
1832-33 முதல் 1836-37 வரை 9.72
1837-38 முதல் 1841-42 வரை 12.37
1842-43 முதல் 1846-47 வரை 11.65
1847-48 முதல் 1851-52 வரை 9.14
1852-53 முதல் 1855-56 வரை 9.17
64 ஆண்டுகளுக்கான சராசரி 11.07

ஹென்ட்ரிக்ஸ் ஓ.பி. சிஐடி. பக்.283.) மோட்டூர்ஃபாவும், (1858இல் காமன்ஸ் சபைக்கு சென்னை நகரவாசிகள் சங்கம் எழுதியனுப்பிய விண்ணப்பத்தில் “வர்த்தகத்தின் மீதும், தச்சுத்தொழிலாளர்கள், நெசவாளர்கள், உலோகத் தொழிலாளர்கள், ஆகியோரடங்கிய தொழிலாளர்கள் தொழில்களின் மீதான வரி, எல்லா விற்பனையாளர்கள் மீதும்வரி, அவர்கள் கடையை திறந்திருந்தால் அதற்கும் தனியாக வரி, தெருவோர வியாபாரிகள் மீதும் வரி. சிலருக்குத் தாங்கள் பயன்படுத்தும் கருவிகள் மீது வரி, மற்றவர்களுக்கு அவற்றை விற்பனை செய்வதற்கான அனுமதியின் மீது வரி, அந்த வரி மிகச் சாதாரணமான வர்த்தகப் பொருள்கள் மற்றும் மெக்கானிக்குகள் உபயோகிக்கும் மிக மலிவான கருவிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டது.

அதனால் அவற்றின் அடக்கவிலை மோட்டூர்ஃபாவினால் ஆறு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்தது. மோட்டூர்ஃபாவின் கீழ்தான் அவற்றைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டது.” என்று விவரிக்கபட்டிருந்தது, சென்னை மாகாணத்தின் முன்னேற்றம் என்ற தமது நூலில் ரகுவையங்கார் மேற்கோள் காட்டியது. 1893. பக்.113.)  இதர அடக்கி ஒடுக்கும் வரிகளும் (தமது சென்னையிலிருந்து பயணம் என்ற நூலின் இரண்டாம் தொகுதியில் டாக்டர் பிரான்சிஸ் புக்காவை குறிப்பிடுவதாவது, “தென்னிந்தியாவின் கோயம்புத்தூரிலுள்ள சத்தியமங்கலத்தில் ஒரு புதிய முத்திரைவாரியாக 3/4+1/3 ஒரு வீர்ராய பணம் அல்லது கிட்டத்தட்ட 5¼d சிறந்த துணியின் ஒவ்வொரு இரண்டு துண்டுகள் மீதும் வரியாக விதிக்கப்பட்டது; ஒரு வீர்-ராய பனாமின் 3 + ¾ /8 அல்லது கிட்டத்தட்ட 2 ¾ d கணத்துணியின் ஒவ்வொரு இரண்டு துண்டுகளின் மீது வரியாக விதிக்கப்பட்டது.

இதன் விளைவாக நெசவாளிகள் வேலைசெய்வதை விடுத்து தங்கள் நிலைமையை எடுத்து சொல்லிடக் கலெக்டரிடம் சென்றனர்.ஆண்டொன்றுக்கு 4 அல்லது 5 பணம்கள் பணி நடைபெறும் இடத்தில் வரி விதிக்கப்படுவது முன்பு வழக்கமாக இருந்தது. ஆனால் நெசவாளரைப் பொறுத்தவரை அது மிக அதிகமானது என்று கருதப்பட்டது. –பக்.240-41 “50 நெசவாளர் குடும்பங்களைக் கொண்ட தொடாபாளையத்தில்,இப்புதிய முத்திரை வரியைப்பற்றி நெசவாளர்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர்.

அதனால் இதற்கு முன்னர் தாங்கள் செலுத்தி வந்த 5 பணம்களுக்குப்பதில் ஒவ்வொரு தறியும் இனி 20 பணம்களுக்கு வரி செலுத்தவேண்டியிருக்கும் என்று அவர்கள் கூறினர்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதே நூல், பக்.242) தொழில்துறையைச் சார்ந்த ஏழைகளுக்குத் தொடர்ந்து இன்னல்களை விளைவித்து வந்தது. உள்ளூர்ச் சட்டத்தின்படி நடப்பிலிருந்த பல சிறிய துன்பம் தரும் வரிகள் ஒழிக்கப்பட்டன என்பது உண்மைதான்; இவ்வாறு இழக்கப்பட்ட வரிகளை ஈடுசெய்ய ஏற்கனவே நடப்பில் இருந்த வரிகள் அதிகரிக்கப்பட்டு நீடிக்கப்பட்டன. குறிப்பாக, நிலவரி அதிகரிக்கப்பட்டது. இக்குற்றச்சாட்டு எப்போதும் அதிகாரப்பூர்வமாக மறுக்கப்பட்டு வந்துள்ளது. (நாடாளுமன்ற ஆவணங்கள், தொகுதி 5.1831. கிழக்கிந்தியக் கம்பெனியின் விவகாரங்கள் சம்பந்தமான சாட்சியத்தின் நடவடிக்கைக் குறிப்புகள். Q. 3864-66)

விதிக்கப்பட்ட வரிகளின் பட்டியல் வருமாறு:

வருவாய் ஆதாரம் வசூலிக்கப்பட்ட வருவாய் மில்லியன்களில் மொத்த ஆண்டுகள் காலம் ஆண்டுகள் பகுதிகளும் தொடங்கப்பட்ட ஆண்டும்
நிலவருவாய் 662-308 64 1792-93 முதல் 1855-56 வரை வங்காளத்திலும் பம்பாயிலும் மதராசிலும் இக்காலகட்டம் முழுதவதிலும், 1834-35 வடமேற்கு மாகாணத்தில், 1849-50இல் பஞ்சாபில்.
செகியர் மற்றும் அப்காரி 9,729 20 1836-37 முதல் 1855-56 வரை இக்காலகட்டம் முழுவதிலும் வங்காளம் வடமேற்கு மாகாணம், மதராஸ் மற்றும் பம்பாயில், 1849-50 முதல் பஞ்சாபில்
கலால் 4,987 20 1836-37 முதல் 1855-56 வரை பிரத்தியேகமாக வங்காளம் மட்டும்
மோட்டுர்ஃபா 6,455 20 1836-37 முதல் 1855-56 வரை பிரத்தியேகமாக மதராஸ் மட்டும்
உப்பு 135.532 64 1792-93 முதல் 1855-56 வரை 1792 முதல் வங்காளம், 1822 முதல் மதராஸ், 1822 முதல் பம்பாய், 1839 முதல் வடமேற்கு மாகாணம் 
அபின் 106.707 64 1792-93 முதல் 1855-56 வரை 1792 முதல் வங்காளம், 1820 முதல் பம்பாய் 
தபால் அலுவலகம் 8.888 64 1792-93 முதல் 1855-56 வரை 1792 முதல் வங்காளத்திலும் மதராசிலும், 1813 முதல் பம்பாயில், 1849 முதல் பஞ்சாபில், 1835 முதல் வடமேற்கு மாகாணத்தில்
முத்திரைத்தாள் 16.697 59 1797-98 முதல் 1855-56 வரை 1797 முதல் வங்காளத்தில், 1813 முதல் மதராசில், 1819 முதல் பம்பாயில், 1834 முதல் வடமேற்கு மாகாணத்தில், 1849 முதல் பஞ்சாபில்.

சுங்கவரிகள்

உள்நாட்டு:

  • இடம்பெயர்தல் வரி
  • நகர வரி

வெளிநாட்டு:

  • இறக்குமதிவரி
  • ஏற்றுமதி வரி
76.179 64 1792-93 முதல் 1885-86 வரை 1792-93 முதல் வங்காளம், மதராஸ், பம்பாய், 1849-50 முதல் பஞ்சாப்.
தங்கசாலை வருவாய் 3.221 64 1792-93 முதல் 1885-86 வரை 1792 முதல் வங்காளத்தில், 1813 முதல் பம்பாயிலும் மதராசிலும்
புகையிலை 1.437 18 1836-37 முதல் 1853-54 வரை 1836 லிருந்து சென்னையில்
இதர வரிகள் 194.777 64 1792-93 முதல் 1855-56 வரை நிலவருவாயின் கீழ் உள்ளது போலவே

ஆனாலும், நிலவரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. ஏனெனில், ஏழைகளிடமிருந்து இதர வரிகளை வசூலிப்பதற்கு ஆகும் செலவு, வரவை விட அதிகமாக இருந்ததுதான் காரணம்.

மேலே விவரிக்கப்பட்ட தீங்கு விளைவிக்கக்கூடிய வருவாய் அமைப்புகளின் கீழ் மக்களின் வரிசெலுத்தும் ஆற்றல் குன்றியது. ஆகவே,தனது வருவாய்களைப் பெறுவதற்கு ஏகாதிபத்திய அரசாங்கத்திற்கு எண்ணற்ற செல்வாதாரங்கள் இருந்தும் கூட, அதனால் சமாளிக்க இயலவில்லை. தங்களது வருவாய்ச் சட்டங்கள் மக்களின் செல்வாதாரங்களுக்குத் தீங்கு விளைவிப்பதாக இருக்கும்போது அவர்கள் தங்களுடைய கருவூலம் காலியாக இருப்பதற்குத் தங்களைத் தான் குறை கூறிக்கொள்ளவேண்டுமேயன்றி வேறுயாரையுமல்ல என்பதைக் காட்டுவதற்கு இது எல்லா நிதித் துறையினருக்கும் ஒரு தெளிவான படிப்பினையாக இருக்கும் என்பது நிச்சயம்.

இத்தகைய அழிவுகரமான வரிகள் நாட்டின் உற்பத்தி சக்திகளின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற சிந்தனையின்றி வசூலிக்கப்பட்டனவா, அல்லது வரி செலுத்தும் மக்களுடைய பொருளாதார வாழ்வை வளமாக்கி மேம்படுத்துவதற்கான பொது உபயோகச் செலவினங்களுக்கெனச் செலவிடப்பட்டனவா? பின்வரும் பட்டியலை நோக்கும்போது பல ஆண்டுகளாகப் பல்வேறு சேவைகளுக்கான செலவினப் பங்கீட்டை அறிந்து கொள்ள முடியும்.

செலவினங்களின் பங்கீடு

மொத்தச் செலவினங்களின் சதவிகித வீதாசாரம்                    ஆண்டு
1809-10 1819-20 1829-30 1839-40 1849-50 1857
இராணுவம் 58.877 64.290 53.754 57.721 51.662 45.55
கடன் மீதான வட்டி 18.010 12.805 12.124 9.756 10.512 7.19
சிவில் மற்றும் அரசியல் 7.221 8.900 9.575 12.296 8.902 9.62
நீதித்துறை 7.525 6.800 7.107 9.565 7.180 9.38
மாகாண காவல்துறை 1.991 2.093 1.535 2.062 2.062 9.38
கட்டிடங்கள், கோட்டை, கொத்தளங்கள் 1.639 1.756 2.810 1.428 1.661  

இப்புள்ளிவிபரங்களில் முக்கிய இடத்தை வகிப்பது ராணுவச் செலவினங்களாகும். காலப்போக்கில் இச்செலவினங்கள் குறைந்து வந்தபோதிலும் இவை நாட்டின் மொத்த வருவாயில் பாதிக்கும் அதிகமான தொகையைக் கபளீகரம் செய்து வந்தது. ராணுவச் செலவினங்களுக்கான மிகப்பெரிய தொகை அச்செலவினத்தின் உண்மையான பளுவைப் பிரதிபலிக்கவில்லை. அத்துடன், கடன்கள் மீதான வட்டித் தொகையையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், அக்கடன் முழுவதுமே இந்தியா உள்நாட்டுச் சக்திக்கும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இடையில் ஒரு போர்க்களமாகத்தான் இருந்தது.

இரு மராட்டா யுத்தங்கள், மூன்று மைசூர்ப் போர்கள், இரு பர்மியச் சண்டைகள், இரு ஆப்கன் யுத்தங்கள், கர்நாடகப் போர்கள், எண்ணற்ற இதர சிறு சண்டைகள் ஆகியவை கம்பெனியின், முடியரசின் ஆட்சிப் பகுதிகளில் இந்தியாவையும் இணைக்கும் நலன்களுக்காகவென்றே நடத்தப்பட்டன. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிப் பகுதிகளனைத்தும் முடியாட்சியின் ஆட்சிப்பகுதிகள் என்று நாடாளுமன்றம் உரிமை கொண்டாடியபோதிலும், அதற்கான செலவினங்களில் ஒரு சல்லிக்காக கூட செலுத்த மறுத்துவிட்டது. மாறாக, இந்தப் போர்களுக்கான செலவு முழுவதையும், தன்வசம் சொற்பச்செல்வாதாரங்களைக் கொண்டிருந்த இந்தியாவை ஏற்றுக்கொண்டது.

கட்டிடங்கள், கோட்டை கொத்தளங்களுக்கான செலவினங்களையும் ராணுவச் செலவினங்களுடன் சேர்க்கவேண்டும். ஏனெனில், அவை இராணுவத்திற்கானவைதான். இவையனைத்தையும் பார்க்கும் போது, தன்வசமிருந்த விலைமதிக்கமுடியாத சொற்பப் பணத்தின் 52 முதல் 80 சதவிகிதத்தை யுத்த சேவைகளுக்காக நாடு செலவிட்டது என்ற ஈடு இணையற்ற உண்மையையும் நாம் காண்கிறோம். ராணுவச் செலவினங்களில் பெரும்பகுதி, இந்த நாட்டில் ராணுவத்தில் பெருமளவில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த இந்தியர்களுக்கே ஊதியமாகத் தரப்பட்டது என்றும் கூட வாதிடக்கூடும்; இராணுவத்தினில் (பின்வரும் புள்ளி விபரங்களிலிருந்து இதைக் காணலாம்:

சிப்பாய்க் கலகத்திற்கு முன்னர் இந்திய இராணுவத்தின் பலம்

  ஐரோப்பியர்கள் இந்தியர்கள் மொத்தம்
பீரங்கிப்படை 6,419 9,138 15,577
கண்ணிவெடிப்படை 110 3,043 3,153
குதிரைப்படை 3,456 30,533 32,989
காலாட்ப்படை 29,760 188,660 218,420
மொத்தம் 38,745 231,374 270,119

இந்திய ராணுவத்தை மறுசீரமைப்பது சம்பந்தமாக மேஜர் ஜெனரல் ஹான்காக்கின் அறிக்கை, நாடாளுமன்ற ஆவணம், 1859ஆம் ஆண்டு. பக்.21) பெரும்பாலானோர் இந்தியர்களாக இருந்தது உண்மைதான். ஐரோப்பியர்களுக்கும் இந்தியப் படைகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்த சம்பள விகிதங்கள் சமமாக இருந்திருக்குமேயானால் அது இந்த நாட்டு மக்களுக்குச் சாதகமாக இருந்திருக்கக் கூடும். ஆனாலும் கூட இந்த அளவுக்குப் பெருமளவிலான ராணுவச் செலவினங்களை அது மன்னித்து விடுவதாக அர்த்தமாகாது. ஆனால், ஐரோப்பியர்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்த சம்பள விகிதங்கள் சமமற்றவையாக இருந்தன, (பின்வரும் பட்டியலினால் இது விளக்கப்படுகிறது. காலாட்படைப் பிரிவு ஒன்றுக்கு ஒரு மாதத்திற்கான செலவு

                                                                             ஐரோப்பியர்கள்
  விபரங்கள் (ரூ..பை) மொத்தம் (ரூ..பை)

அதிகாரிகள்

37 அதிகாரிகள்….

ஊழியர்கள்,

நிர்வாகச் செலவினங்கள்.. தலைமை மற்றும் இதர அலவன்சுகள்

14734,14,3

4515.12.4

2528.8.0

21,779.2.7

படைவீரர்கள்

117 என்.சி.ஓக்கள்

950 சிப்பாய்கள்

ரேஷன், உடுப்பு மற்றும் இதர செலவுகள்

2289.4.5

11,203.8.4

12,506.11.3

25,999.8.0

மொத்தம்   47,778.10.7

ஒரு ஐரோப்பியர் நான்கு இந்தியர்களின் மொத்தச் சம்பளத்திற்கு இணையான ஊதியம் பெற்றார். ஆகவே இச்செலவினம், பொதுப் பயன்பாடு அல்லது தனியார் வேலைவாய்ப்பு என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்த்தாலும் கூட, அரசின் வருவாய்களுக்குப் பங்களிப்பு செய்த இந்திய மக்களுக்கு அனுகூலமானதாக இருக்கவில்லை.

சிவில் மற்றும் அரசியல் செலவினங்கள், வருவாயில், கிட்டத்தட்ட 10 சதவிகிதத்தை விழுங்கின என்பது எந்த வகையிலும் திரும்பப் பயனளிப்பதாக இருக்கும் என்று கூறமுடியாது. செலவினங்களின் இப்பகுதியிலிருந்து இந்திய மக்களுக்கு எந்தப் பங்கும் கிடைக்கவில்லையாதலால் மொத்தப் பளுவையும் அவர்களே ஏற்கவேண்டியதாயிற்று. பிரிட்டிஷார் இந்தியாவை வெற்றிகொண்டதன் காரணமாக இந்திய மக்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என்ற அந்தஸ்தையே வகித்து வந்தனர்; ஆனால், பிரிட்டிஷார் இந்தியாவை வெற்றி கொண்டதனால் இந்திய மக்களின் அந்தஸ்து மேலும் குறைந்தது. அது ஆங்கிலேயர்களின் மனதில் உள்நாட்டு மக்களின்மீது நம்பிக்கை இன்மை உணர்வைத் தோற்றுவித்தது.

அடிமைப்படுத்தப்பட்டு நம்பிக்கையிழந்த இந்திய மக்கள் பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கியது முதல் நாட்டின் உயர் நிர்வாகப் பதவிகளிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். (1833க்கு முன்னர் இந்தியர்களுக்கு பனியின்போது மிகச் சொற்பத் தொகையே சம்பளமாக வழங்கப்பட்டது என்பதைப் பின்வரும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  ) இந்த அநீதியைப் போக்குவதற்காகத்தான் 1833 ஆம் ஆண்டுச் சட்டத்தில் நாடாளுமன்றம் பின்வருமாறு வகைசெய்தது.

மூன்று மாகாணங்களின் தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்த முதல் வகுப்பு இந்திய சிவில் ஊழியர்கள் மாதம் ஒன்றுக்கு வாங்கிய ஊதியங்கள் வங்காளம் மதராஸ் பம்பாய் மொத்தம்

ண்

ணி

க்

கை

மொத்தம் வாங்கிய சம்பளம்

ண்

ணி

க்

கை

மொத்தம் வாங்கிய சம்பளம்

ண்

ணி

க்

கை

மொத்தம் வாங்கிய சம்பளம்

ண்

ணி

க்

கை

மொத்தம் வாங்கிய சம்பளம்
ரூ.500 மற்றும் அதற்கு மேலும் 5 2700 …. …. 5 2500

89

20690

ரூ.400 மற்றும் அதற்கு மேலும் 2 800 …. …. 1 400
ரூ.350 மற்றும் அதற்கு மேலும் 4 1400 1 350 1 350
ரூ.300 மற்றும் அதற்கு மேலும் 3 900 …. …. 2 600
ரூ.250 மற்றும் அதற்கு மேலும் 5 1250 …. …. 1 250
ரூ.250 முதல் 200 வரை 17 3460 5 1156 1 200
ரூ.200 முதல் 150 வரை 10 1590 4 682 ½ …. ….
ரூ.100 முதல் 150 வரை 5 550 5 525 5 330
ரூ.100க்கும் கீழே 6 470 1 87 ½ 2 240
மொத்தம் 57 13120 16 2800 16 4770    

“சம்பந்தப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த எந்த ஒரு இந்தியரும் அல்லது அங்குள்ள மேதகு மன்னரின் பிரதிநிதிகளுக்கு அங்குப் பிறந்த எந்த ஒரு பிரஜையும், மதம், பிறந்தஇடம், மரபுவழி, நிறம் அல்லது வேறுகாரணங்களினால் மேற்படி கம்பெனியின் எந்தப் பொறுப்பையும், பதவியையும் அல்லது வேலைவாய்ப்பையும் பெறுவதிலிருந்து தகுதியற்றவர் என்று ஒதுக்கக்கூடாது” (பிரிவு.87)

                                                                             இந்தியர்கள்
  விபரங்கள் (ரூ..பை) மொத்தம் (ரூ..பை)

அதிகாரிகள்

26 ஐரோப்பியர்கள்….

20 இந்தியர்கள்…. 

ஊழியர்கள், நிர்வாகச் செலவினங்கள்..

தலைமை மற்றும் இதர அலவன்சுகள்

9861.2.1

940.0.0

1209.1.4                

1517.5.2

13527.8.7

படைவீரர்கள்

140 என்.சி.ஓக்கள்

1000 சிப்பாய்கள்

இதர செலவுகள்

1780.0.0

7000.0.0

826.14.0

9606.14.0

மொத்தம்   23134.6.7

இப்பட்டியலிலிருந்து 26 ஐரோப்பிய அதிகாரிகளின் ஊதியங்கள் மற்றும் தலைமை மற்றும் இதர அலவன்சுகளைக் கழித்துவிட்டால் (இந்தியர்கள் என்ற தலைப்பில் அத்தொகை ரூ.11378.7.3 ஆகிறது) 1104 ஐரோப்பியர்கள் ஊதியமாக ரூ.47778.10.7 ஐயும், அதே சமயம் 1160 இந்தியர்கள் ஊதியமாக ரூ.11755.15.3 மட்டுமே பெற்றனர் என்பதையும் காணலாம்.

இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னர் இருந்த நிலைமையைத் தவிர, உண்மையில் சிப்பாய்க் கலகத்திற்குப் பின்னர் வரை இந்தியர்கள் ஒருவர்கூட எந்தப் பதவிக்கும் நியமிக்கப்படவில்லை. ஏனெனில், இச்சட்டம் இயற்றப்பட்டவுடனேயே இந்திய அரசாங்கத்திற்கு இயக்குனர் மன்றம் பின்வருமாறு அறிவுறுத்தியது:

“நடைமுறையில்.. பலங்களில் எந்தவிதக் குறிப்பிடத்தக்க வேறுபாடும் இராது. ஒப்பந்தப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலைமைகளுக்கு இடையிலும், எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அல்லது பொதுத்தன்மை கொண்ட எல்லா இதர நிலைமைகளுக்கிடையிலும் உள்ள வேறுபாடு பொதுவாக இப்போது உள்ளது போலவே இருக்கும்.”

(வங்காளத்துக்கு அனுப்பப்பட்ட தாக்கீது எண்.44. டிசம்பர் 10, 1834. பாரா.107 மூன்று மாகாணங்களில் உள்நாட்டு நிறுவனம் குறித்த சிவில் நிதிக் கமிட்டியின் அறிக்கை 1830 ஏப்ரல் 13 தேதியிட்ட வங்காள நிதியியல் கலந்தாலோசனைகள். இந்தியா அலுவலக ஆவணங்கள். ஒப்பந்தம் செய்துக் கொள்ளப்படாத கிறித்துவர் மற்றும் பல மாகாணங்களைச் சேர்ந்த இந்திய ஊழியர்கள் துணைநிலை நிறுவனங்கள் கமிட்டியினால் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன,

1.தலைமை எழுத்தர், ரெஜிஸ்ட்ரார்கள், மேனேஜர்கள் மற்றும் அவர்தம் உதவியாளர்கள், ஆய்வாளர்கள், வேலைவாய்ப்பு அதிகாரிகள் போன்ற அலுவலகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கண்காணிப்பதில் செயலர்களுக்குக் கீழ் பணியமர்த்தப்பட்டவர்கள்.

2.   நடப்பு அலுவல் எழுத்தர்கள், நிரந்தர நகல் எழுத்தர்கள்;

3.   செய்யும் வேலைக்கு மட்டும் ஊதியம் பெறும் செக்ஷனர்கள் அல்லது நகல் எழுத்தர்கள்.

4.   அனைத்துக் கீழ்மட்ட ஊழியர்கள்.  கமிட்டி அறிந்து கொண்டதாவது:

பாரா.35. கல்கத்தாவில் நடப்பு அலுவல் எழுத்தர்கள் மாதம் ஒன்றுக்குப் பெற்ற ஊதியங்கள் ரூ.20 லிருந்து ரூ.380 வரை இருந்தது. சராசரியாக நபர் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் ரூ.104; பம்பாயில் அது ரூ.15லிருந்து ரூ.120 ஆக இருந்தது. சராசரி 8.48; ரூ.271/2 ஆக இருந்தது, சேவை காலம், அவர்களின் பயனீடு ஆகியவற்றைப் பொறுத்துத் தனி நபர்களின் வேலைக்கேற்ப ரூ.10½லிருந்து ரூ.8½ வரை இருந்தது.

வங்காளத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் எழுத்தர்களுக்கு 750 சொற்களுக்கு ஒரு ரூபாய் வீதம் ஊதியம் வழங்கப்பட்டது. இதர இரு மாகாணங்களிலும் 1333 சொற்களுக்கு ஒரு ரூபாய் வீதம் ஊதியம் வழங்கப்பட்டது.

பாரா.51. வங்காளத்தில் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதியம் இப்போது மாதம் ஒன்றுக்கு ரூ.1142 ஆகும். மதராசில் செருப்பு தைக்கும் தொழிலாளிகள் உள்ளிட்டு மாத ஊதியம் ரூ.455; பம்பாயில் ரூ.261 வங்காளத்தில் 186 ஊழியர்களும், சென்னையில் 56 பேரும் பம்பாயில் 42 பேரும் இருந்தனர்.)

நீதித்துறை மற்றும் காவல்துறைக்கான செலவினங்கள் மொத்த வருவாயில் ஏறக்குறைய 10 சதவிகிதமாக இருந்தன. இதைப் பாதுகாப்புத் தன்மை கொண்டது என்றே கருதமுடியும். இவ்வாறு தீமை பயக்கும் வரிகள் மூலம் கிடைத்த பணங்கள் உற்பத்தி சாராத வழிகளில் செலவிடப்பட்டது. அமைதி ஏற்படுத்துதல் என்ற பெயரில் போர்  இயந்திரம் முடுக்கிவிடப்படுவதால் அது மொத்த நிதியையும் கபளீகரம் செய்து முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளுக்கு நிதி இல்லாமற் போனது. கல்விக்கென்று வருவாயில் இருந்து எள்ளளவும் செலவிடப்படவில்லை. பயனுள்ள பொதுப்பணிகள் சொற்ப அளவிலேயே நடைபெற்றன. இருப்புப் பாதைகள், படகுப் போக்குவரத்து அல்லது நீர்ப்பாசனத்திற்கான கால்வாய்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்கான இதர உதவிகள் வெகுகாலமாகவே ஏகாதிபத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மொத்தமிருந்த 8,37,000 சதுர மைல் பரப்பளவில் ஒரு சில மைல் பரப்பளவில் ஒரு சில மைல் நீளமே உள்ள இருப்புப் பாதைகளும், 2157 மைல் நீளமுள்ள சாலைகளும், 580 மைல் நீளமுள்ள தந்திக் கம்பிகளுமே நிர்மாணிக்கப்பட்டன.

1837-38 முதல் 1851-52 வரையிலான 15 ஆண்டுக் காலக்கட்டம் முழுவதற்குமாகச் செலவிடப்பட்ட பணம் என்று எடுத்துக்கொண்டால், ஆக்கப்பூர்வத்தன்மையுடைய சராசரி செலவினங்கள் ஆண்டொன்றுக்கு (பிரிட்டிஷ் இந்தியா சம்பந்தமான புள்ளி விவர ஆவணம். தொகுப்பாளர் கார்ன்ட்டன்.1853) 299, 732 பவுண்டு மட்டுமேயாகும். நிலத்திற்கு உரமிடாமல் திரும்பத் திரும்ப பயிரிடுவதனால் நிலம் வெறுமையாகிவிடும் என்ற கோட்பாடு விவசாயிகளுக்கு நன்கு தெரியும். இக்கோட்பாட்டை பரவலான முறையில் பயன்படுத்தலாம். இந்தியாவின் அரசுப் பொருளாதாரத்தில் இதைப் பின்பற்றியிருந்தால் நாட்டின் வரிசெலுத்தும் ஆற்றல் கருவூலத்துகும் மக்களுக்கும் அனுகூலமான முறையில் வளர்ந்திருக்கும். துரதிருஷ்டவசமாக இரு தரப்புக்கும் பாதகமான முறையில் இந்தியாவின் நிதி ஆதாரங்களுக்கு இழப்பேற்ப்பட்டது.

ஆனால், மிக மோசமான பற்றாக்குறைகளை ஈடுசெய்வதற்கு நியாயமான வரிகள் மூலமும் பயனுள்ள செலவினங்கள் மூலமும் செல்வாதாரங்களை அதிகரிக்கும் வாய்ப்பு இழக்கப்பட்டிருக்குமானால் குறைந்தபட்சம் செலவினங்களில் சிக்கனம் என்ற வழியாவது திறந்திருந்தது. 1833 இல் நிறுவப்பட்ட வகைப்பட்ட வலுவான மத்திய அரசாங்கம் முடிந்தவரையில் சிக்கனத்தை நடைமுறைப்படுத்த வல்லதாக இருந்தது. உண்மையைச் சொல்லப்போனால், மத்தியமயமாக்கல் மிகவும் வலுவற்ற வகைப்பட்டதாக இருந்தது.

சட்டப்படி ஏகாதிபத்திய நிர்வாக அமைப்புதான் நடப்பிலிருந்து, ஆனால் நடைமுறையில் செயல்முறை அரசாங்கத்தின் ஆரம்ப யூனிட்டுகள் மாகாணங்கள் தாம் என்பது போலவும், இந்திய அரசாங்கம் ஓர் ஒருங்கிணைக்கும் அதிகார அமைப்பு மட்டுமே என்பது போலவும்தான் நிர்வாகம் நடத்தப்பட்டது. பலவகையான சூழ்நிலைகளில் இது தெளிவாயிற்று. சட்டமியற்றும் அதிகாரம் இந்திய அரசாங்கத்திடம் தான் இருந்தது என்பது  உண்மையே. ஆயினும் இந்திய அரசாங்கத்தினால் இயற்றப்பட்ட சட்டங்கள், வெவ்வேறு மாகாணங்களுக்காக இயற்றப்பட்டதானது சட்டமியற்றும் முன்முயற்சி இன்னமும் மாகாணங்கள் வசமே இருப்பது போலவும், இந்திய அரசாங்கம் அதற்கு அனுமதியளிக்கும் அதிகாரம் மட்டுமே பெற்றிருப்பது போலவும் அமைந்திருந்தன.

ஒவ்வொரு மாகாணமும் தனக்கெனச் சொந்தமாக உள்நாட்டு மற்றும் சுங்கவரிகளைக் கொண்டிருந்தன; தங்களுடைய அரசுரிமை அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இவ்வாறு இருந்தது. ஒவ்வொரு மாகாணமும் தொடர்ந்து தனக்கெனச் சொந்தமாக ராணுவத்தைக் கொண்டிருந்தது. மத்தியப்படுத்தப்பட்டதைப் பொருட்படுத்தாமல் கணக்கிடும் அமைப்பு இன்னமும் மாகாணத்தின் வசமே இருந்தது. இது அவற்றின் நிதிச் சுதந்திரம் தொடர்கிறது என்ற உண்மை ஏற்படுத்தியது. நிர்வாகப் பணிகளும் வருவாய் வசூல் செய்யும் பொறுப்பும் இன்னமும் தங்கள் வசமே இருந்து வந்ததனால், மாகாணங்கள்,அரசாங்கப் பொறுப்புகளைப் பெற்றுள்ள சட்டபூர்வமான அதிகாரிகள் தாங்களே என்பது போல் நடந்து கொண்டன.

இச்சுதந்திர உணர்வு, கீழ்ப்படியாமை உணர்வை வளர்த்தது. சில மாகாணங்கள், குறிப்பாக பம்பாயும் மதராசும் சிப்பாய்க் கலகத்தினால் ஏற்பட்ட செலவினங்களை ஈடுசெய்ய இந்திய அரசாங்கம் புதியவரிகளை விதிக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டபோது, -தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மக்கள்மீது வரியைத் திணிக்கும் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளை எதிர்க்க முயன்றனர்.

1853 ஆம் ஆண்டுச் சட்டம் சட்டரீதியான மற்றும் நிர்வாகரீதியான பொறுப்புகளுக்கிடையில் துரதிருஷ்டவசமான பிளவை ஏற்படுத்தியது என்பதையும், மனதில் கொள்ளவேண்டும். சட்டப்படி ஏகாதிபத்திய அரசாங்கம் பொறுப்பேற்றிருந்தது. ஆனால் அது நாட்டை நிர்வாகம் செய்யவில்லை. மாகாண அரசாங்கங்கள் நாட்டை நிர்வகித்தன. ஆனால், சட்டத்தின்படி அவற்றுக்கும் பொறுப்பேதும் இல்லை. நாட்டின் நிதிநிலைமையில், பொருளாதாரத்தின் மீது இப்பிளவு ஆபத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது. செலவினங்களில் ஊதாரித்தனம் நடைமுறை விதியாக மாறியிருந்தது தவிர்க்கமுடியாததாக இருந்தது. அது ஏகாதிபத்திய அமைப்பிலேயே உள்ளார்ந்து இருந்தது. சிக்கனம் பொறுப்புணர்வைத் தோற்றுவிக்கிறது, தான் விரும்பும் தொகையைச் செலவிட ஓர் அரசாங்கம் செல்வாதாரங்களைக் கண்டறிய வேண்டியிருக்கும்போது பொறுப்புணர்வு தோன்றுகிறது.

ஏகாதிபத்திய அமைப்பு தொடங்கப்படுவதற்கு முன்னர், தங்களது பட்ஜெட்டில் சேர்க்கப்பட்ட செலவினங்களுக்கான பணத்தைத் திரட்டும் கட்டுப்பாடு மாகாண அரசாங்கங்களுக்கு இருந்தது. அதன் விளைவாக அவை சிக்கனமாகச் செயல்படவேண்டியிருந்தது. ஆனால், ஏகாதிபத்திய அமைப்பின்கீழ், பல்வேறு சேவைகளுக்கான பட்ஜெட்டுகளை மாகாண அதிகாரிகள் தயாரிக்கவேண்டியிருந்த அதேசமயம், அதற்கான வழிவகைகளைக் காணவேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் வசம் இருந்தது. முன்பு அவை தங்களது பணப்பையின் வரையறைகளை அறிந்திருந்தனர், அனால் ஏகாதிபத்திய அமைப்பின்கீழ் அவை,

“இந்திய அரசாங்கத்தின் மீதான தங்களது கோரிக்கைகளை எந்த அளவுக்கு ஒழுங்குபடுத்துவது என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பே இல்லாதிருந்தது. பணப்பையின் ஆழம் தெரியாத காரணத்தால் அவை கணக்கற்ற பணத்தை எடுக்கவேண்டியிருந்தது. எல்லாத்திசைகளிலும் அபிவிருத்தி மேற்கொள்ளப்படவேண்டிய தேவையை அவை கண்டன. ஆகவே, சாம்ராஜ்யத்தின் பொதுவான வருவாய்களிலிருந்து தங்களது சொந்த மாகாணங்களுக்கு எந்த அளவுக்கு அதிகமான பங்கைக் கொடுக்குமாறு இந்திய அரசாங்கத்தைத் தூண்டுவதே அவற்றின் நிலையான, நியாயப்படுத்தபடக்கூடிய விருப்பமாக இருந்தது.

அவை எந்த அளவுக்குக் குறைவாக சிக்கனத்தைக் கடைப்பிடிக்கின்றனவோ, தங்களுடைய கோரிக்கைகளை எந்த அளவுக்கு அதிகமாக வலியுறுத்துகின்றனவோ, அவை அவ்வளவுக்குத் தங்களுடைய தேவைகளுக்காக இந்திய அரசாங்கத்தை அதிகமாக வற்புறுத்தவேண்டிய நிலைமையில் இருந்தன என்பதை அவை அனுபவத்தில் கண்டன. இத்தேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் தங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்தனர். தேவையான வழிவகைகளை வழங்க மறுக்கும் பொறுப்பை ஏற்றுள்ள இந்திய அரசாங்கத்தின் வசமே விட்டுவிட்டனர்.” (இந்தியாவின் கவர்னர் ஜெனரல் என்ற முறையில் எர்ல் ஆஃப் மாயோவின் நிர்வாகம் கவுன்சிலின் உறுப்பினரும் முன்னாள் இடைக்கால கவர்னர் ஜெனரலுமான மாண்புமிகு ஜான் ஸ்ட்ராச்சியின் நடவடிக்கைக் குறிப்பு. ஏப்ரல் 30, 1872. அரசு அச்சகத் கண்காணிப்பாளரின் கல்கத்தா அலுவலகம் 1872. பக்.46.)

இந்த ஊதாரித்தனமான கோரிக்கைகளுக்கு இந்திய அரசாங்கம் அடிக்கடி இணங்க வேண்டியதாயிற்று. ஏனெனில் அண்மைக்காலம் வரை, தேவைகளை மதிப்பீடு செய்யவும் அவற்றின் மீதான செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் தேவையான நிர்வாக இயந்திரத்தை அது கொண்டிருக்கவில்லை. எந்த ஒரு ஏகாதிபத்திய நிர்வாக அமைப்பிலிருந்தும் அதிகத்திறமையை எதிர்பார்ப்பது வழக்கமானதல்ல. அதுவும் அது ஒரு துறையையோ அல்லது ஒரு மாகாணத்தையோ நிர்வகிக்கவில்லை, ஒரு கண்டத்தைப் போன்ற பெரிய நாட்டை நிர்வகித்து வந்தது. வெறுமனே பெரியதாக இருப்பதனால் முன்னேற்றம் இருக்கும். இந்திய அமைப்புமுறை இருந்தது போன்ற ஒழுங்கமைக்கப்படாத, பலப்படுத்தப்படாத அமைப்பாக இருக்குமேயானால் அது நிச்சயமாக மெதுவாகத்தான் முன்னேறும். முதலாவதாக, இந்தியாவிலுள்ள ஏகாதிபத்திய அமைப்பு, கட்டுப்பாட்டுக்கான நிர்வாக இயந்திரம் இல்லாதிருந்தது. அதை உருவாக்கிய சட்டம், வங்காள அரசாங்கத்தையும் இந்திய அரசாங்கத்தையும் ஒன்றாக இணைத்ததில் பெரும் தவறு புரிந்து விட்டது என்றே கூற வேண்டும்.

இந்த இணைப்பின் விளைவாக அந்த இயந்திரம் அதிக வேலைப்பளுவைப் பெற்றது. வங்காள அரசாங்கம் என்ற முறையில் அதன் கடமைகளை நிறைவேற்ற அதிக நேரம் தேவைப்பட்டதால் இந்திய அரசாங்கத்ததின் கடமைகளை ஆற்றுவதற்கு குறைந்த நேரமே கிடைத்தது. ஒரு பொதுவான நிர்வாக அமைப்பு மட்டுமன்றி, இரு அரசாங்களின் பணிகளையும் கவனிப்பதற்கு ஒரே பொதுவான செயலகமும் கூட இருந்தது. ஏற்கனவே மிகுதியான வேலைப் பளுவைக் கொண்டிருந்த தலைமைச் செயலகம், 1843 வரை நாட்டின் நிதித்துறையைக் கவனிக்கும் சிறப்புக் கடமையைக் கொண்ட எந்த ஒரு அதிகாரியும் இல்லாதிருந்த காரணத்தினால், கணிசமான அளவில் திறமை குன்றியதாக இருந்தது.

அந்த ஆண்டில்தான் அப்போது இந்திய வைஸ்ராயாக இருந்த லார்டு எல்லென்பரோ, இந்திய அரசாங்கத்தின் தலைமைச் செயலகத்திலிருந்து வங்காள அரசாங்கத்தின் தலைமைச்செயலகத்தைப் பிரித்தார். (இந்திய அரசாங்கத்தின் தீர்மானம், உள்துறை, ஏப்ரல் 29, 1843) இந்திய அரசாங்கத்துடன், இந்திய அரசாங்கத்தின் நிதித்துறைச்செயலர் என்ற தனிப்பட்ட அலுவலகத்தை இணைத்தார். (1843 ஜனவரி 4-ஆம் தேதியிட்ட இந்திய அரசாங்கத்தின் தீர்மானம்) நிதியைத் தவிர வேறு எந்த அரசுத் துறைகளின் பணிகளும் இன்றித் தனித்து இயங்கும் துறையாக அது இருந்தது. தனிப்பட்ட நிதித்துறைச் செயலாளரை நியமித்ததன் மூலம் ஓர் ஆய்வு செய்யும் அதிகாரிக்கான தேவை ஈடு செய்யப்பட்டது.

ஆனால் அவரால், கணக்கு மற்றும் தணிக்கைக்கென்று ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பும், ஒதுக்கீடு செய்யும் பட்ஜெட்டும் இல்லாதிருந்த காரணத்தால், செலவினங்களில் சிக்கனத்தை அவரால் செயல்படுத்த முடியாமல் போயிற்று. ஏகாதிபத்திய நிதி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது ஒருபுறமிருக்க, தணிக்கை மற்றும் கணக்கியல் அதிகாரிகள் பல்வேறு மாகாண அரசாங்கங்களின் தலைமைச் செயலகங்களுடன் இணைக்கப்பட்டிருந்தனர். இந்தியாவின் வருவாய்களுக்கு உத்தரவிடவும் அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பும் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டிருந்த உச்ச அரசாங்கத்திற்கு அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக இருக்கவில்லை.

தணிக்கை மற்றும் கணக்கியல் சம்பந்தமாக எந்த உத்திரவாதத்தையும் நேரடியாகப் பிறப்பிக்க முடியாத நிலையில் இருந்தது. சம்பந்தப்பட்ட ஸ்தல அரசாங்கத்தின் மூலமாக, அவற்றின் விளக்கங்களுடன்தான் உத்தரவு பிறப்பிக்க முடிந்தது. இரண்டாவதாக, பட்ஜெட் அமைப்பு வர்த்தகக் கணக்குகளுக்கு, சிறந்ததாக இருந்த போதிலும், அதாவது, ஆவணங்களுக்கு, எல்லா சிறந்த அரசுக்கணக்குகளுக்கும் அது முதலாவது மற்றும் தொடக்க நிலைக் காரணங்களுக்கு, அதாவது, தடை ஏற்படுவதற்குப் பயனற்றதாக இருந்தது.

வெவ்வேறு சேவைகளில் ஒவ்வொன்றையும் மேற்கொள்வதற்குத் தேவையான அளவு பணத்தைக் கோடிட்டுக் காட்டும் நாட்டின் நிதி நிர்வாகக் காரணங்களுக்காக உண்மையில் மூன்று மதிப்பீடுகள் (திட்டவரை, வழக்கமான திட்டம், பட்ஜெட்) தயாரிக்கப்பட்டன. வெவ்வேறு சேவைகளுக்குப் பொதுப்பணத்தை வினியோகிக்கும் இந்த முறைக்கு ஒதுக்கீடு என்று அர்த்தமாகாது. அது ரொக்கத் தேவைகள் என்று மட்டுமே கருதப்பட்டது. இதன் காரணமாக ஒருபோதும், மானியங்கள் கவனமாகத் தயாரிக்கப்படவில்லை, அல்லது அவற்றின் மீது நிர்ணயிக்கப்பட்ட வரையறை நடைமுறையில் கடைப்பிடிக்கவில்லை.

சேவைத் துறைகள் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட வாக்குகளோ அல்லது சட்ட உரிமைகளோ கொண்ட பட்ஜெட் எதுவும் இல்லாதிருந்த காரணத்தினால், பொதுக் கருவூலத்திலிருந்து பெறப்பட்ட அல்லது அதன் மூலமாகக் கொடுக்கப்பட்ட பணம் அனைத்திற்கும் முறையான கணக்கு வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணிப்பதுடன் தணிக்கை மற்றும் கணக்கியல் துறையின் கடமை முடிந்துவிட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்ஜெட் இல்லாதிருந்த காரணத்தினால், அரசுக் கணக்கு மற்றும் தணிக்கையின் முக்கிய நோக்கமாம் சட்ட உரிமைகளின்படி நடந்து கொள்ளுமாறு செலவிடும் அதிகாரம் பெற்ற தங்களது கோரிக்கைகளில் மிகத் தாராளமாக இருந்த மாகாண அரசாங்கங்கள், செலவினங்கள் விஷயத்திலும் மிகவும் கவனக்குறைவாக இருந்தன.

ஒதுக்கீடு செய்யும் ஒரு பட்ஜெட்டும் மையப்படுத்தப்பட்ட தணிக்கை மற்றும் கணக்கு அமைப்பும் இந்திய அரசாங்கத்திடம் இல்லாதிருந்தவரை, நிதிக்கட்டுப்பாடு விஷயத்தில் அது பெயரளவில் மட்டுமே அதிகாரம் பெற்றதாக இருந்தது. ஆனால், நிதி விஷயங்களில் சட்டப்படி மிக வலுவற்ற அதிகாரங்களைக் கொண்டிருந்த மாகாணங்கள்தான் உண்மையில் அந்த நிலைமையில் எஜமானர்களாக இருந்தன.

மாகாண அரசாங்கங்களின் தரப்பில் நிலவிய நிதி விவகாரங்களில் பொறுப்பின்மையினால் தோன்றிய மாகாண அதிகாரிகளின் ஊதாரித்தனமான பழக்கங்களைத் தடுக்கும் அதன் இயலாமையுடனும், மத்திய அரசாங்கத்தின் தரப்பில் இருந்த திறமையின்மையுடனும், நிதி விவகாரங்களில் இந்திய அரசாங்கத்தின் நிர்வாக கவுன்சிலிடம் காணப்பட்ட குறிப்பிடத்தக்க பொதுவான அக்கறையின்மை உணர்வையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நிர்வாகக் கவுன்சிலின் குறிப்பிட்ட அனுமதியின்றி இந்தியாவின் வருவாய்களிலிருந்து எதையும் செலவழித்துவிட முடியாது என்பது உண்மைதான் என்றபோதிலும், செலவினங்களில் சிக்கனத்தை ஊக்குவிப்பதற்கு எந்த விதமான அக்கறையும் மேற்கொண்டிருக்க முடியும் என்று கவுன்சிலின் செயல்படும் பாணியிலிருந்து தோன்றவில்லை.

கவுன்சில் கூட்டாகத்தான் செயல்பட்டது. கவுன்சிலில் அடங்கியிருந்த வெவ்வேறு உறுப்பினர்களிடையே நிர்வாகப்பணி வினியோகிக்கப்பட்டிருக்கவில்லை. யுத்தத்துறை மற்றும் சட்டமியற்றுதலைத் தவிர, அரசாங்கத்தின் மொத்தப்பணிகளும் கவர்னர் ஜெனரல் மற்றும் கவுன்சிலர்களின் முன் கொண்டு வரப்பட்டது. அதன் கூட்டுச் செயல்பாட்டின் விளைவாக,

“ஒவ்வொரு விஷயமும் உண்மையில் கவுன்சிலின் ஒவ்வொரு உறுப்பினரின் கரங்களுக்கும் சென்று வந்தன, ஒரு கவுன்சிலரின் வீட்டிலிருந்து மற்றொருவருக்குச் சிறிய மரப்பெட்டிகளில் நத்தை வேகத்தில் சுற்றி வந்தது” (டபிள்யு.டபிள்யு.ஹன்டர், மயோவின் வாழ்க்கை. தொகுதி.1, பக்.190)

இத்தகயைதொரு அமைப்பின் கீழ், பொருளாதாரத்திற்கு உத்வேகமூட்டுவதற்கு நிதித்துறைத் தலைவராக எவரும் இருக்க வில்லை. ஏனெனில், அனைவரும் ஒருவராகவே கருதப்பட்டனர். அதன் விளைவாக, அனைவரின் பொறுப்பிலும் இருந்த நிதி யாருடைய பொறுப்பிலும் இல்லாத அவலத்தை அனுபவித்தது. ஆகவே சேவைகளின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப நிதிகள் வினியோகிக்கப்படவில்லை. ஆனால், சூழ்நிலை சார்ந்த கோரிக்கைகளுக்கும் நிதிகோரி இடையறாத ஆரவாரங்களுக்கும் ஏற்ப நிதி வினியோகிக்கப்பட்டது.

தவறான நிதியமைப்பு, தீங்கு பயக்கும் வரிகள், உற்பத்தி சாராத, ஊதாரித்தனமான செலவினங்கள் ஆகியவற்றின் காரணமாகத்தான் ஏகாதிபத்திய அமைப்பு வீழ்ந்தது என்பதைக் காட்டுவதற்குப் போதுமான சான்றுகள் தரப்பட்டுள்ளன. ஆயினும், ஏகாதிபத்திய அமைப்பு தொடங்கப்பட்டதுடன்தான் இத்தவறான நிதிக் கொள்கை ஆரம்பமானது என்று கருதப்படக்கூடாது. மாறாக அது கடந்த காலத்திலிருந்து ஏகாதிபத்திய அமைப்புக்கு வழி வழியாக வந்த ஒரு மரபுரிமையாகும். இருந்த போதிலும் உரிய சமயத்தில் நிதிக் கொள்கையை மாற்றியமைத்து மையக் கட்டுப்பாட்டைப் பலப்படுத்தியிருந்தால், ஏகாதிபத்திய அமைப்பின் அடித்தளத்தை உறுதிப்படுத்தியிருக்க முடியும் என்பது தெளிவு.

ஆனால், அந்த அமைப்பு வெகுகாலம் நீடித்திருந்ததனால் அதன் நீதித்துறை அடித்தளங்கள் பலவீனமான, பெருகிவரும் தனது செலவினங்களைச் சமாளிப்பதற்குத் தேவையான பணத்தைப் பெற முடியாத நிலையேற்பட்டதால், ஏகாதிபத்திய அமைப்பு சிப்பாய்க் கலகத்தின் அதிர்ச்சிக்குப் பலியாகியது. அது மீண்டும் தனது முந்தைய தோற்றத்தைப் பெறமுடியாமல் போயிற்று.

 (டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், தொகுதி 11)