Shadow and Stick

முதலில் ஒரு சிறிய குச்சியை செங்குத்தாக மண்ணில் ஊன்றவும். தரையில் விழும் அக்குச்சியின் நிழல் உச்சியை குறித்துக் கொள்ளவும் (ஒரு சிறிய கல் அல்லது சிறிய குறியீடு மூலம்). 10-15 நிமிடம் கழித்து அக்குச்சியை காணும்பொழுது அதன் நிழலானது முன்பு குறித்த இடத்தில் இருந்து சற்று விலகி இருக்கும் (விலகும் திசை பெரும்பாலும் மேற்கிலிருந்து கிழக்காக இருக்கும்). இப்பொழுது விலகிய நிழலின் உச்சியை முன்பு குறித்தாற்போல் குறித்து அவ்விரு குறியீடுகளையும் ஒரு நேர்கோட்டின் மூலம் இணைக்கவும். நாம் முதலில் குறித்த இடத்தில் இடது காலையும், இரண்டாவது குறித்த இடத்தில் வலது காலை வைத்து நேராக நிமிர்ந்து நிற்கவும். இப்போது உங்கள் முகம் எந்த திசையை நோக்கி இருக்கிறதோ, அது தான் வடக்கு திசை. நாம் இரண்டு குறியீடுகளை இணைத்து வரைந்த நேர்கோடு கிழக்கு, மேற்கு திசையை குறிக்கும்.

ஷேக் அப்துல் காதர்