alimentary_system_370நாம் உண்டு விழுங்கும்போது மூச்சுவிட இயலுவதில்லை, ஏனெனில் நம் சுவாச மண்டலம் (respiratory system) செரிமான மண்டலத்துடன் (alimentary system) நெருக்கமாக இணைக்கப் பட்டுள்ளது. உண்மையில் உண்ணும் உணவும் இழுக்கும் மூச்சும் தொண்டைக் குழாய்வரை பயணம் செய்கின்றன. தொண்டைக் குழாய் என்பது வாய்க்கும் மூக்குக்கும் பின்னால் அமைந்துள்ள ஓர் அகலமான தசையாலான குழாயாகும் (Pharynx).

மூச்சுக்காற்றும், குரல்வளை (larynx) அல்லது ஒலிப்பெட்டியை (voice-box) அடைந்து மூச்சுக்குழாய் வழியாக (trachea) நுரை யீரலுக்குச் சென்று சேர வேண்டும். அந்த சமயத்தில் உணவு, உணவுக்குழாய் வழியாக – (Oeslcphagus) இரைப்பைக் குச் செல்ல வேண்டும். எனவே ஐயத்துக் கிடமில்லாமல் ஒரு வகையான கருவி இந்த இரண்டும் கலவாமல் தடுப்பதற்குப் பயன்படுத்தியாக வேண்டும் என்பது உறுதியாகிறது.

விழுங்குதல் தற்காலிகமாக காற்று வழிகளை மூடுவதால் மூச்சுக்கு இடையூறு விளைவிக்கின்றது. அப்போதே உணவு, வாயிலிருந்து முன்னோக்கி, உணவுக் குழாய்க்கும் வயிற்றுக்கும் செலுத்தப்படுகிறது. ஒரு சிறு பருக்கை உணவு தப்பான வழியில் சென்றால் நுரையீரலானது இருமலுடன் உணவை வெளித் தள்ளும் முயற்சியை உடனே வெளிக்காட்டி விடுகிறது. மேலும் சிறிது காற்று வயிற்றினுள் செல்ல ஏதுவாகிறது. சற்று அதிகமாகச் சென்றால் வயிற்றுப் பொருமலை (Flatuience) அல்லது ‘காற்றை’ (Wind) ஏற்படுத்தும்.

உணவு வழியும் அதனுடன் சேர்ந்த சுரப்பிகளும்

1.    வாயறை                           10.   கணையம்

2.    முன் தொண்டை           11.   குறுக்குக் குடல்

3.    குரல்வளை                      12.   இறங்கு குடல்

4.    மூச்சுக் குழாய்                13.   சிறுகுடல்

5.    உணவுக்குழாய்              14.   குடல்வால்

6.    உதரவிதானம்                 15.   ஏறு குடல்

7.    கல்லீரல்                           16.   முன்சிறு குடல்

8.    பித்தப்பை                          17.   மலக்குடல்

9.    இரைப்பை                         18.   குதம் (அ) மலவாய்