சாப்பிடும் முன் கை கழுவ வேண்டும் என்று அம்மா சொல்லித் தருவதில் எத்தனை அர்த்தம் இருக்கிறது தெரியுமா? மண்ணில் விளையாடிவிட்டு அப்படியே சாப்பிட உட்கார்ந்தால் கட்டாயம் வயிற்றில் கோளாறு ஏற்படும். நூறுபேர்களில் 33 பேர்கள் கை கழுவாமல் சாப்பிடுவதால் வயிற்றுக் கோளாறில் அவதிப்படுகிறார்கள்.

பீச், மற்றும் ஆற்றங்கரை மணலில் அதிகமாக மக்கள் நடமாடுவதால் வயிற்றைப் பாதிக்கும் பேக்டிரியாக்கள் அங்கே அதிகமாக இருக்கின்றன. நான்கு முறை கையை நல்ல நீரில் முக்கி எடுத்தாலே போதும் 99 சதம் பேக்டிரியாவும் வைரசுகளும் நீங்கி விடுகின்றன. சோப்புப் போட்டு கழுவினால் நிச்சம் 100 சதம் கிருமிகளை நீக்கி விடலாம்.

- முனைவர் க.மணி