ambedkar 354காலம் காலமாக சாதியைக் காரணம் காட்டி பிளவுபடுத்தும் சனாதனத்தை எதிர்த்து, மக்களை அரசியல் படுத்த வேண்டும் என்ற கொள்கை டாக்டர் அம்பேத்கருக்கு நீண்ட நெடுங்காலமாக இருநதது. எதைக் காரணம் காட்டி படிக்கக்கூடாது என்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதோ, அந்த காரணத்தை முன்வைத்து படித்து வெற்றி கண்டார். அவர் படித்த பிறகு இன்று கல்வி எல்லோருக்கும் பரவலாகப் போய் சேர்ந்து இருக்கிறது. கல்வியின் அவசியத்தைப் பற்றி அறிந்த காரணத்தினால் கல்வியால் தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் அத்தனை அழகாக பயன்படுத்திக் கொண்டவர். அவர் ஒவ்வொரு நாளும் சுமார் படித்து 18 மணி நேரம் படித்து ஓய்வு அறியா சூரியன் போன்று வலம் வந்தவர். இவ்வுலகில் அவர் போன்று படிப்பாளி இல்லை என்று சொல்லும் அளவிற்கு புத்தகங்கள் படித்து வெற்றி கண்டவர். இன்று அவரையே படிக்க முடியாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டு நிற்கிறார். 

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் அவருடைய பெயரில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டு வருகின்றன. இந்தியாவில் மட்டுமல்ல அவர் முதன்முதலாக எங்கு படிக்கச் சென்றாரோ அந்த கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவர் எழுதிய விசாவுக்காக காத்திருக்கிறேன் என்கின்ற நூல் பாடமாக இருக்கிறது. இப்படி சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பை செலவிட்டு வந்தவர் டாக்டர் அம்பேத்கர். கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், இந்திய அரசாங்கம் வழங்கும் விருதுகள், மருத்துவமனைகள், நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள், கட்டிடங்கள், மைதானங்கள், கட்சிகள், ரயில் நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் இப்படி எல்லாவற்றுக்கும் டாக்டர் அம்பேத்கர் பெயர்சூட்டி மகிழ்வதைக் காண முடிகிறது. 

பி.ஆர்.அம்பேத்கர் விமான நிலையங்கள்

விருதுகள் மற்றும் பரிசுகள் இந்திய அரசாங்கத்தால்

நகரங்கள், நகரங்கள், கிராமங்கள் மற்றும் பிற இடங்கள்

விடுமுறை - அம்பேத்கர் ஜெயந்தி.

மருத்துவமனைகள் 

நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள், கட்டிடங்கள்

பிஆர் அம்பேத்கரின் சிலை - (ஜப்பான்) 

மைதானங்கள்

கட்சிகள் மற்றும் அமைப்புகள் 

ரயில் நிலையங்கள் 

பல்கலைக்கழகங்கள் 

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் 

மற்றவை 

டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது இந்திய அரசு 

           டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது என்பது நாட்டின் முதல் சட்ட அமைச்சரும், இந்திய அரசியலமைப்பின் தந்தை பி.ஆர்.அம்பேத்கரை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருது.இந்தியாவில் உள்ள நலிவடைந்த பிரிவினரை மேம்படுத்துவதற்கும் சமூகப் புரிதலை மேம்படுத்துவதற்கும் சிறந்த பங்களிப்பிற்காக தேசிய குடிமக்கள் விருது.

இது 1992 இல் நிறுவப்பட்டது மற்றும் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை மூலம் மக்கள் அல்லது அமைப்புகளுக்கு அவர்களின் சிறந்த பணிகளுக்காக நிர்வகிக்கப்படுகிறது. இந்த விருது பாபாசாகேப் அம்பேத்கரின் சமூகப் புரிதல் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான பார்வையை அடையாளப்படுத்துகிறது . இந்த விருதின் தொகையானது 1 மில்லியன் (10 இலட்சம் ) ரூபாய் மற்றும் ஒரு சான்றிதழாகும். இந்த விருது இந்திய ஜனாதிபதியின் கைகளால் வழங்கப்படுகிறது. முதலில் வழங்கப்பட்டது 1993. கடைசியாக வழங்கப்பட்டது 2014. மொத்தம் வழங்கப்பட்டது 7.

முதல் வெற்றியாளர் பாபு லால் நிர்மல், தேசிய சமூகப்பணி மற்றும் சமூக அறிவியல் நிறுவனம், புவனேஸ்வர். கடைசி வெற்றியாளர் அமர் சேவா சங்கம்.

இணையதளம் ambedkarfoundation.nic.in

பேரா. எ.பாவலன்