தேவையான பொருட்கள்

பேரீச்சம் பழம் - 50 கிராம்
எலுமிச்சம்பழம் - 1
உப்பு - 1 சிட்டிகை
சீரகத்தூள் - சிறிது
இஞ்சி - 1 துண்டு
 
செய்முறை

பேரீச்சம் பழத்தை தண்ணீரில் ஊற வைக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொள்ளவும். பேரீச்சம் பழத்தையும், இஞ்சியையும் பேரீச்சம் பழம் ஊற வைத்த தண்ணீர் சிறிது சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் மீதியுள்ள ஊற வைத்த தண்ணீரையும் சேர்த்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் எலுமிச்சம் ஜுஸ், உப்பு, சீரகத்தூள், ஐஸ் கட்டிகள் சேர்த்து கலக்கி பருகவும்.