தேவையான பொருட்கள்

பேரீச்சம்பழம் - 10
டூட்டி புரூட்டி - 50 கிராம்
ரவை - 1 கப்
சீனி - 2 கப்
தண்ணீர் - 2 கப்
வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
முந்திரி, கிஸ்மிஸ் - 1/2 கப்
நெய் -2 டே.ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
 
செய்முறை

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு சீனியை போட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். பிறகு அதனை கொதிக்க வைக்கவும். கொதி வந்தவுடன் அதில் பேரீச்சம்பழம், டூட்டி புரூட்டி, முந்திரி, கிஸ்மிஸ் போன்றவற்றை போட்டு பின்னர் அதில் ரவையை போட்டு கிளறவும். இடையிடையே சிறிது சிறிதாக நெய்யை ஊற்றி ரவை நன்றாக வெந்து கேசரி பதத்திற்கு வந்தவுடன் எசன்ஸ் ஊற்றி கிளறவும்.