தேவையானவை:

சிக்கன் ................1/2 கிலோ
பெல்லாரி............4
இஞ்சி..................1 இன்ச் நீளம்
பூண்டு...................8
ப.மிள்காய்...........8
புதினா...................கைப்பிடி அளவு
மல்லி+கறிவேப்பிலை...கைப்பிடி அளவு
பட்டை.....................சிறு துண்டு
கிராம்பு......................4
ஏலம்........................2
எலுமிச்சை.................1/2 மூடி
தயிர்...........................2 தேக்கரண்டி
உப்பு ...........................தேவையான அளவு
எண்ணெய்.................30 மில்லி.

செய்முறை:

ginger_chicken_370சிக்கனை நன்கு கழுவி வைக்கவும். பெல்லாரியை நறுக்கவும். மிக்சியில் நறுக்கிய பெல்லாரி, புதினா, மல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, ஏலம் அனைத்தையும் போட்டு நைசாக் அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தில் பாதி போட்டு + உப்பு போட்டு வதக்கவும்.  வதங்கியதும், கழுவிய சிக்கனை நீரின்றி பிழிந்து வாணலியில் போடவும். தீயை சிம்மில் வைக்கவும். இதனை ஒரு பத்து நிமிடம் வதக்கவும். பின் இதில் அரைத்த விழுதைப் போட்டு நன்கு வதக்கவும். எண்ணெய் வேண்டாம்.

இதிலேயே தயிர் எலுமிச்சை சாறு விடவும். அடுத்த பத்து நிமிடத்தில் உப்பு + ருசி பார்த்து இறக்கி விடவும். சிக்கன் சும்மா கலக்கலா இருக்கும்.