chicken dum briyani

தேவையான பொருட்கள்

சிக்கன் – ½ கிலோ

பாஸ்மதி அரிசி – 3 கப்

இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

வெங்காயம் -2

தக்காளி -2

பச்சை மிளகாய் – 3

பிரியாணி இலை & பட்டை 

அரிசியுடன்  சேர்த்து வேகவைக்க:

நெய் – 1 தேக்கரண்டி

பட்டை – 1, கிராம்பு -1,  பிரியாணி இலை -1

உப்பி - 1 தேக்கரண்டி .

ஒரு பாத்திரத்தில் பொதுமான அளவு தண்ணீர் ஊற்றி அதில் நெய் ஒரு தேக்கரண்டி, பட்டை – 1, கிராம்பு -1,  பிரியாணி இலை -1, உப்பு - 1 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விடவும். முக்கால் பாகம்  வேகும் வரை வைத்து பின் அரிசியை வடிகட்டி சாதத்தை தனியாக வைக்கவும்.

செய்முறை:

ஒரு  அகலமான பாத்திரத்தில் நெய், எண்ணெய் , பட்டை , கிராம்பு ,  பிரியாணி இலை , ஏலக்காய், பச்சை மிளகாய் சேர்த்து தாளித்த பின்   வெங்காயம், இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்

பிறகு அதில்  தக்காளி + புதினா+ கொத்தமல்லி + மஞ்சள் தூள் (1 தேக்கரண்டி) + மிளகாய் தூள்( 1.5 தேக்கரண்டி) + கறி மசாலாத் தூள் (1 தேக்கரண்டி) + தயிர் (1 தேக்கரண்டி ) + சிக்கன் + தேவையான அளவு உப்பு சேர்த்து  சிறிது அளவு தண்ணீர் சேர்த்து வதக்கவும்.

சிக்கன் நன்றாக வெந்த பிறகு, அதில் முக்கால் பாகம் வேக வைத்துள்ள சாதத்தை சேர்த்து சமப்படுத்தவும்.

பின்பு அடுப்பில் தோசைக் கல் வைத்து, அதன்மீது இந்த பிரியாணி பாத்திரத்தை வைக்கவும். பிரியாணி பாத்திரத்தை நன்றாக மூடவும் (aluminium foil அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பிரியாணி பாத்திரத்தின் மீது வைக்கவும்). 10 -15 நிமிடங்கள் மிதமான தணலில் இருக்கட்டும். இறக்கிய பின்பு கிளறி விடவும்.

குறிப்பு

1) சிக்கன் வெளியே தெரியும் அளவு தண்ணீர் இருந்தால் போதும்.

2) சாதத்தை சிக்கன் gravyயில் சேர்க்கும் போது கிளறக் கூடாது. இறக்கிய பின்பே கிளற வேண்டும்.

- ஹேமலதா