தேவையானவை:

சேமியா ................................200 கிராம்
தயிர் .....................................200 மில்லி
பெல்லாரி...............................2
பச்சை மிளகாய்.......................2
காரட்.......................................2
பீன்ஸ்.....................................10
வெள்ளை பூசணி.................சின்ன துண்டு
முட்டை கோஸ்....................கைப்பிடி
கீரை..........................................கைப்பிடி
பச்சைப் பட்டாணி...................கைப்பிடி
இஞ்சி..........................................1 இன்ச் நீளம்
பெருங்காயம்...........................1./4 தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லி.............கைப்பிடி
எண்ணெய்..................................20 மில்லி
சீரகம்............................................1/4 தேக்கரண்டி
உப்பு.............................................தேவையான அளவு
சீனி.............................................1/4 தேக்கரண்டி

செய்முறை:

பெல்லாரியை மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும் பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறி வைக்கவும்.. இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும். காரட், பீன்ஸ், பூசணி, முட்டைக் கோஸ், கீரை எந்த காய் வேண்டுமானாலும் சேர்க்கலாம். இவற்றை, கொஞ்சம் பொடியாக நறுக்கவும். பட்டாணியை உரித்து வைக்கவும்.

veg_raitha_370ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் நீர் ஊற்றி கொஞ்சம் உப்பு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அணில் சேமியாவை பிரித்து அதில் கொட்டி, தீயை நிறுத்திவிட்டு மூடிவிடவும். 5 நிமிடம் கழித்து சேமியாவை வடிகட்டவும்.

அடுப்பில் குக்கரை வைத்து அதில் கீரை தவிர நறுக்கிய அனைத்து காய்கறிகளையும் போட்டு கொஞ்சம் உப்பு போட்டு, 1 தேக்கரண்டி நீர் விட்டு குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். குக்கரை இறக்கியவுடன் உடனே அதிலுள்ள வாயுவை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றவும்.மூடியைத் திறந்து வைக்கவும். அனைத்துக் காய்களும் அதன் நிறம் மாறாமல் பசுமையாய் இருக்கும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம் போட்டு சிவந்ததும், அதிலேயே நறுக்கிய வெங்காயம், ப. மிளகாய். இஞ்சி,கீரை + சிட்டிகை உப்பு போட்டு வதக்கவும். வெங்காயம் சிவந்ததும் அடுப்பை நிறுத்தவும். ஒரு பெரிய பாத்திரத்தில் தயிர்+ .1/4 தேக்கரண்டி சீனி போட்டு, அதில் வடிகட்டிய சேமியா , வேகவைத்த காய்கறிகள், வதக்கிய வெங்காயம்+கீரை+கறிவேப்பிலை மல்லி போட்டு கிளறி, பரிமாறவும்.

இந்த வெஜிடபிள் சேமியா ரைத்தா/தயிர் காய்கறி சேமியா சூப்பராக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது மிகவும் சத்துள்ள உணவு. இதில் அனைத்து காய்கறிகளும் உள்ளன.

இதனை காலை, மாலை, மதியம், இரவு என எந்தநேர உணவாகவும் உட்கொள்ளலாம். இந்த உணவை 15 நிமிடத்திற்குள் தயாரித்து விடலாம்.