தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி  - அரை கப்
பச்சரிசி ரவை - 1 1/2 கப்
தயிர் - 1 1/2 கப்
ஊறவைத்த கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
துருவிய தேங்காய் - ஒரு கப்
சமையல் சோடா - கால் தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
முந்திரி - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கால் கப்
கொத்தமல்லி இலை - கால் கப்

செய்முறை:

ஜவ்வரிசி, அரிசி ரவா, உப்பு அனைத்தையும் தயிரில் ஆறு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். வாணலியில் கடுகு, முந்திரி, பச்சை மிளகாய் ஆகியவற்றை தாளித்து ஊறவைத்த கலவையில் கொட்ட வேண்டும். ஊறவைத்த கடலை பருப்பு, துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லி இலை ஆகியவற்றை ஊறவைத்த ஜவ்வரிசி, அரிசி ரவை கலவையில் கொட்டி நன்கு கிளற வேண்டும். இதனுடன் சமையல் சோடா சேர்த்து கலக்கி இட்லி தட்டில் இட்லியாக ஊற்றி எடுக்க வேண்டும். சட்னியுடன் தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும்.