கப்பற்படை தளபதி தனது நண்பரான தரைப்படை தளபதியைப் பார்க்க வந்தார். பேசிக்கொண்டிருக்கும்போது, தரைப்படை தளபதி சொன்னார்,

“எனது வீரர்கள் மிகவும் தைரியசாலிகள்.”

“நான் அதைப் பார்க்க விரும்புகிறேன்.”

தரைப்படை தளபதி ஒரு சிப்பாயை அழைத்தார்.

“அதோ, வருகிறதே டேங்க்! அதை வெறும் கையால் தடுத்து நிறுத்து!”

அதற்கு சிப்பாய், “உங்களுக்குப் பைத்தியமா? அது என்மீது ஏறிப் போய்விடும், முட்டாளே!” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டுப் போனான்.

தரைப்படை தளபதி சொன்னார், “பார்த்தாயா? எவ்வளவு தைரியம் இருந்தால் தளபதியிடம் ஒருவன் இப்படி பேசமுடியும்?”